ஸ்டஃப்டு பிரிஞ்ஜால் ( அவன் செய்முறை)

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கத்திரிக்காய் – அரைக் கிலோ (அல்லது) 10 - 12 கத்திரிக்காய்
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
ஸ்டஃப்பிங் செய்ய:
மிளகாய் வற்றல் – 3
கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒன்று
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி


 

பிஞ்சு கத்திரிக்காயாக பார்த்து வாங்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அவனை 350 டிகிரியில் முற்சூடு செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு அதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
அதன் பிறகு அதில் வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். கடைசியில் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
கத்திரிக்காயை நான்காக நடுவில் மட்டும் நறுக்கிக் கொள்ளவும். காம்பு உள்ள பகுதியை வெட்டக் கூடாது. பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயுடன் ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு கத்திரிக்காய் ஒவ்வொன்றாக அவனில் வைக்கும் ட்ரெயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்.
இதனை முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
பொடி செய்து வைத்துள்ள கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பிசையவும். பிசைந்த கலவை கொழுக்கட்டை பிடிப்பது போல பிடிக்க வர வேண்டும். இல்லையெனில் 1 - 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். கடைசியில் உப்பின் அளவினை சரி பார்த்து கொள்ளவும். இப்பொழுது ஸ்டஃபிங் ரெடி.
அவனில் இருந்து கத்திரிக்காயை வெளியில் எடுத்து பின் ஒவ்வொரு கத்திரிக்காயிலும் ஸ்டஃபிங்கை அடைத்து வைக்கவும். பிறகு அதனை அவன் ட்ரேயில் அடுக்கி அவனில் 25 - 30 நிமிடம் வேக வைக்கவும்.
இடையிடையே 8 நிமிடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து திருப்பி விட்டு திரும்பவும் அவனில் வைக்கவும். இப்படியே அனைத்து பக்கமும் திருப்பி விடவும்.
சுவையான ஸ்டஃப்டு பிரிஞ்சால் ரெடி. இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு உங்க குறிப்பு.ஆனால் எனக்கு இந்த குட்டி கத்திரிக்காய் கிடைக்காது.எனக்கு ரொம்ப பிடிக்கும் கத்திரிக்காய்.இங்க விற்கும் கத்திரிக்காய் ஒரு கை சைஸில் இருக்கும்.என்ன பன்ரது இந்தியா போனால் தான் செய்து பார்க்கணும்.

அட்மின் அவர்களுக்கு,
இந்த செய்முறை conventional oven(அவனில்)யில் செய்தது. மைக்ரோவேவ் அவனில் அல்ல. தலைப்பில் மைக்ரோவேவ் அவன் என்பதை அவண் என்று மாற்றமுடியுமா.
நன்றி.
கீதா ஆச்சல்.

Hi Ms. Geetha Achal

I would like to know whether this brijal is kept in ordinary oven or microwave. Please clarify.

Thanks in advance

Rahmath

மாலி,
இதனை மைக்ரோவேவ் அவனில் செய்யவில்லை. சாதரண அவனில் தான் செய்து உள்ளேன். செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்.

மிகவும் நன்றி மேனகா,
ஆமாம் மேனகா, எனக்கும் இங்கு குட்டி கத்திரிக்காய் கிடைக்காது. எப்பவது சைனிஸ் கடைக்கு போனால் அங்கு கிடைக்கும். அப்பொழுது தான் இப்படி சமைப்பேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

பார்க்கவே ச்சாப்பிடத்தூண்டுகிறது, மிக இலகுவான முறையாகவும் இருக்கு. எங்களுக்கும் இந்த கத்தரிக்காய் கிடைக்காது, பெரிய பம்பிளிமாஸ் சைஸில்தான் கிடைக்கிறது. முன்பு செல்வியக்காவின் குறிப்பைப் பார்த்து விஜிசத்யா, இதுபோல் பார்க்க ஆனால் வேறு முறையில் செய்திருந்தா, அதையும் செய்யவேண்டும். எல்லாத்துக்கும் கத்தரிக்காய் வேண்டும்.

நன்றாக இருக்கு. நன்றாக செய்துகாட்டியிருக்கிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பார்க்க மிக்க அழகு.முதலில் கத்திரிக்காயை வேக விட்டு மசாலா வைப்பதால்,நிச்சயம் டேஸ்டா இருக்கும்,ஆனால் ஒரு சந்தேகம்,flame ,up and down set பண்ணினீர்களா?இல்லாவிடில் கீழே மட்டும் போதுமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு கீதா ஆச்சல்,
உங்க கத்த்ரிக்காய் பார்க்கவே ஆசையாயிருக்கு. நான் செய்யும் போது கத்தரிக்காய் சரியாக வேகாமல் நின்னு முழிக்கும்.:-) அப்புறம் திரும்பவும் எடுத்து எண்ணையில் பொரிப்பேன்.(so much for low fat;-)) உங்க முறைப்படி முதலில் வேக வைத்து செய்து பாக்கரேன். இங்கயும் பிஞ்சு கத்தரிக்காய் எப்பவாவதுதான் கிடைக்கும்.:-(
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

மிகவும் நன்றி அதிரா. ஒரு முறை நான் பெரிய கத்திரிக்காயில் இதே போல் ஒன்றினை செய்து இருந்தேன். சுவை அவ்வளவாக இதே போல இல்லை. ஆனாலும் சிறிய கத்திரிக்காய் கிடைக்கதா பொழுது அது மாதிரி முயற்சி செய்தேன். என்ன பண்ண… நானும் 4 – 5 மாதத்திற்கு ஒரு முறை தான் இப்படி செய்வது கத்திரிக்காய் கிடைத்தால்.
அன்புடன்
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி ஆஸியா அக்கா…என்னடா அக்காவின் பின்னுட்டத்தை கானுமே என்று நினைக்கும் பொழுது….உங்களின் பின்னுட்டம்…என்னை எப்பொழுதும் நீங்கள் ஊக்கபடுத்துகின்றிங்க…அதற்கு மிகவும் நன்றிகள் பல.
அக்கா, என்னுடைய அவனில் இரண்டு பக்கத்தில் இருந்தும் அனல் வரும். என்னுடைய அவனில் நீங்கள் சொல்லும் flame up or down set option எல்லாம் இல்லை.
மிகவும் சுவையாக இருக்கும். செய்து பாருங்கள்… மிகவும் குறைந்த எண்ணெயில் செய்வதால் நல்லது.
அன்புடன்
கீதா ஆச்சல்

ஆமாம் கிருத்திகா,
மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்… மிகவும் குறைந்த எண்ணெயில் செய்வதால் உடலிற்கு நல்லது.
இப்படி காய்கள் எல்லாம் கிடைக்காத நேரத்தில் தான் எனக்கு ஊர் ஞாபகம் அதிகமாக வரும். ……………………………….
அன்புடன்
கீதா ஆச்சல்

கீதாச்சல் நலமா? பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. நான், இதுவரை அவனில் செய்து பார்த்ததில்லை, இதே மாதிரித்தான், குழம்பாக வைப்பேன். அதற்கு எண்ணெய் அதிகமாகத் தேவைப்படும், அதனாலேயே அடிக்கடி செய்யப் பயமாகயிருக்கும். இதில் குறைவாக உபயோகித்துள்ளீர்கள். சின்ன கத்தரிக்காய் கிடைக்கும்பொழுது வாங்கி செய்துவிட்டு உங்களுக்குப் பின்னூட்டம் அனுப்புகிறேன்.

அன்புடன்:-)....
உத்தமி:-)

கீதாஆச்சல், உங்க குறிப்புகள் நான் நிறைய பார்ப்பதுண்டு.மிகவும் சுலபமாக இருக்கிறது.எனக்கு கத்திரிக்காய் பிடிக்கும் நாங்கள் கலிபோர்னியாவில் இருப்பதால் எனக்கு அதிகம் இது கிடைக்கும் ஆனால் அவனில் நான் அதிகம் சமையல் செய்வது இல்லை.எனக்கு தெரியாது.இனிமேல் செய்து பார்கிறேன்.இது சைடிஷா சப்பாத்திக்கு சரிவருமா? சொல்லுஙளேன்.நான் எண்ணை கத்திரிக்காய் குழம்பு செய்வதுண்டு.

உமா,Riverside,CA.

நாங்கள் அனைவரும் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு குட்டி கத்திரிக்காய் கிடைக்கும் பொழுது இப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.உடல் இளைக்க நானும் இப்படி எல்லாம் எண்ணெய் குறைத்து சமைத்தாலும் ஏனோ எடை குறையவே மட்டேன் என்கின்றது…என்ன செய்ய………
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி உமா. நீங்கள் விரும்பினால் இதனை சாப்பத்திற்கு கூட சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். ஆமாம் என்னுடைய தோழி கூட கலிபோர்னியாவில் தான் இருக்கா. அவள் அடிக்கடி சொல்லுவா, அங்க எல்லாம் காய்களும் கிடைக்கும் என்று. முருங்கை கீரை கூட கிடைக்குமாம். ரொம்ப கொடுத்து வச்சவங்க நீங்கள்..
அவனில் சமைக்க ஆரம்பித்தால் நீங்களே நிறைய விதவிதமாக சமைக்க ஆரம்பித்துவிடுவிங்க..கலக்குங்க…மீண்டும் நன்றி
அன்புடன்,
கீதா ஆச்சல்

நன்றி கீதாஆச்சல்,
நான் இனிமேல் முயற்சி செய்கிறேன்.ரொம்ப கவலை படரீங்க போல இருக்கு உடம்பு குறைய மாட்டேங்குது என்று.கவலைய விடுங்க உங்களுக்கு சிறப்பான குறிப்புகள் கொடுக்க ஒருவர் வருகிறார். வேறு யாருமில்லை நான் தான் . நான் Cosmetology (Beauty therapist)முடித்துவிட்டு இப்போது fitness trainer and Nutrition specialist செய்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தாரளமாக கேட்களாம்(ரகசியம் யாருக்கும் சொல்லாதீங்க just kidding).

c ya...
உமா.

HELLO I AM NEW JOIN.I NEED U R FRIENDSHIP.PLS REPLY ME
RADHIKASURESH

radhikasuresh