புதினா துவையல்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1/4 கட்டு
கறிவேப்பில்லை - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 மேசைக் கரண்டி
புளி - சிறிய கோலி அளவு
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பில்லையை சுத்தம் செய்து வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.
அதிலேயே புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி அனைத்தும் ஒன்றாக போட்டு வதக்கி கொள்ளவும்.
கடைசியில் புளி மற்றும் பெருங்காயத்தினை வதக்கி வைத்துள்ள பொருட்கள் மீது போடவும்.
சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு மிக்ஸியில் அனைத்து பொருட்களும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதினை ஊற்றி 5 நிமிடம் வைக்கவும்.
இப்பொழுது சுவையான புதினா துவையல் ரெடி.
இதனை தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக் இருக்கும்.


விரும்பினால் சிறிது தேங்காய் சேர்த்து கொள்ளலாம். ஆனால் நிறைய நேரம் வைத்து சாப்பிட முடியாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

migavum nandri

vedha

இதையும் செய்தேன்... நல்லா வந்துச்சு கீதா. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி வனி.
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

துவையல் நன்றாக இருந்தது.
செல்வி

சவுதி செல்வி

மிகவும் நன்றி செல்வி.
அன்புடன்,
கீதா ஆச்சல்