தேதி: February 17, 2009
பரிமாறும் அளவு: (3- 4) நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமைமா - ஒரு கப்
உளுத்தம்மா (வறுகாதது) - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சுடுவதற்கு தேவையான அளவு
கோதுமைமா, உளுத்தம்மா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு(தோசைமாபதம்) கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும். அது நன்கு சூடானதும் அதில் எண்ணெய் தடவவும்.
அதன் பின்பு அதில் மாவை ஊற்றி பரத்தி விடவும். தோசை வெந்தவுடன் தோசையை திருப்பி விடவும்.
அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும். இந்த தோசைக்கு, சட்னி நன்றாக இருக்கும்.
மிக விரைவில் செய்யகூடியதும், கார்போஹைட்ரேட், மினரல், உயிர்சத்துகள், கால்சியம் நிறைந்ததும், குழந்தைகள் விரும்பி உண்ணகூடியதுமான ஒர் சிற்றுண்டி உடனடி உளுத்தம் மாதோசை ஆகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - கோதுமைமா, உளுத்தம்மா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டு தோசைமாவு பதம் கட்டியில்லாமல் நன்கு கரைக்கவும். எச்சரிக்கை - உளுந்து அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.
Comments
துஷ்யந்தி மேடம்
இன்னைக்கு இதை செய்தேன் மேடம்.வித்தியாசமான சுவை இருந்தது.நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி வறுக்காத உளுத்தமாவு தான் சேர்த்தேன்.
ஆனால் வறுத்தது சேர்த்தால் என்ன வித்தியாசம் வரும் என் சொல்வீர்களா?நன்றி.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!