சீனி சம்பல் பான் கேக்

தேதி: February 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

ஆட்டா மா (கோதுமை மா) - 2 கப்
பட்டர்மில்க் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சீனி சம்பல் - ஒரு கப்


 

ஆட்டா மாவினை சலித்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சீனி சம்பலை செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். <a href="/tamil/node/4536" target="_blank">சீனி சம்பல் செய்முறை அறிய </a>
ஒரு பாத்திரத்தில் சலித்த ஆட்டா மாவு, பட்டர் மில்க், பேக்கிங் பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து 30 நிமிடங்கள் வைக்கவும்.
பின்னர் மாவினை எடுத்து தோசைக் கல்லில் அல்லது நாண்ஸ்டிக் பானில் ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
பிறகு ஒவ்வொரு தோசையின் மீதும் ஒரு கரண்டி சீனி சம்பலை வைத்து தோசை முழுவதும் பரவும்படி தேய்த்துவிடவும்.
இதுவே குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பான் கேக்கிற்கு பீனட் பட்டரை (peanut butter) தடவிக் கொள்ளவும்.
சீனி சம்பல் தடவிய தோசையையும், பட்டர் தடவிய தோசையையும் நான்காக மடித்து தட்டில் வைத்து பரிமாறவும். இதற்கு பக்க உணவு எதுவும் தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நர்மதா, சூப்பர் குறிப்பு
நாங்க மாசி சம்பல் வைப்போம், இதும் நலல் ஐடியாதான், ஸ்கூலுக்கு, ஆபிஸுக்கு கொடு போய் ஈசியாக சாப்பிடலாம்.
ஜலீலா

Jaleelakamal

நர்மதா,
செய் முறை சுலபமானதாகவும் சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடியதாகவும் இருக்கிறது.
செபா.

what is butter mill please?
Is it necessary? or can v add another one?

be happy
suba

be happy