தேதி: February 18, 2009
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெள்ளிரிக்காய் - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 4 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - கடைசியில் தூவ
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
முதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
வெள்ளிரிக்காயினை தோல் நீக்கி பொடிதாக வெட்டி கொள்ளவும். (விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்).
வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் தக்காளி, பச்சை மிளகாயினை போட்டு 3 நிமிடம் வதக்கி வெள்ளிரிக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.
மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.
பிறகு வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
இப்பொழுது சுவையான வெள்ளிரிக்காய் தால் ரெடி.
இதனை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Comments
super
its fentastic dish. i am doing good
கீதா
இன்று உங்கள் குக்கும்பர் தால் செய்தேன் நானும் இதே முறையில் தான் செய்வேன். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குக்கும்பர் தால்
மிகவும் நன்றி விஜி. இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..இதே போல சாம்பாரும் செய்யலாம்.
http://www.arusuvai.com/tamil/node/9052
அன்புடன்,
கீதா ஆச்சல்
கீதா இன்று
கீதா இன்று உங்கள் குறிப்பில் என் சமையல் இந்த குக்கும்பர் தால் செய்தேன் மிகவும் அருமை
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
குக்கும்பர் தால்
மஹா,
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்