என்னுரை....படிச்சு பதில் மொழி போடுங்க... ஆமாம்...

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே... தாளிகா ,பிரபாதாமு, மைதிலி உங்க மூன்று பேருக்கும் அது போக அறுசுவை அன்பர்களுக்கும் சிறு ஆனால் தெளிவான விளக்கம் கொடுத்து விடுகிறேன்.... (பிளேடு போடுவதை தான் அப்படி சூசகமா சொல்றேங்க...)

நமக்கு சொந்த ஊரு சிவகாசி.... படிச்சது வளர்ந்தது எல்லாமே அங்க தான்.... பள்ளி படிப்பில் தங்க மெடல் வாங்கி.. அம்மா, அப்பா கை-ல கொடுத்து விட்டு... மெப்கோ எனும் ஒழுக்கத்தின் வேடந்தாங்கலில் சிவில் இன்ஜினியரிங் படிக்க போனேன்.....
படிக்க போனமோ வந்தோமா-னு இல்லாம கவிதை, ஆட்டம், பாட்டம் எதுலேயும் குறை வைக்காம பிட் அடிச்சாச்சு பாஸ் ஆகுற அளவுக்கு, 2004-ல படிச்சு முடிச்சு வந்தேன்... (இதுல எங்க ஒழுக்கம் இருக்கு-னு கேக்குரீர்களா.... எனக்கும் கேக்குது.... கல்லூரி என்றால் எல்லாம் கலந்து தானே இருக்கணும்... என்ன சரி தானே?).... படிச்சு முடிச்சு அஞ்சு மாசம் சும்மா வேண்டும் என்றே வேலைக்கு போகாம இருந்து... அப்புறம் தண்ட சோறு பட்டம் பெற்று... திருநெல்வேலி, சென்னை என எல்லா இடமும் வேலை பார்த்து ஒரு ரவுண்டு வந்து.... படிச்சு முடிச்ச பத்தாவது மாசத்தில் மாலத்தீவுகள் சென்றேன்.... எல்லாம் கடவுளின் உபயம்.... அப்புறம் அங்க ஒன்றரை வருஷங்கள்.... மீண்டும் கடவுளின் உபயத்தால் இட மாற்றம்.... இம்முறை பஹ்ரைன்.... (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு... தமிழர் பண்பாட்டை மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் வெளி இடம் என்று ஆகி போச்சு)...இங்கு இரண்டு வருடங்கள் சொல்லாம கொள்ளாம ஓடி போய்டுச்சு.... எல்லாம் நல்ல படியா போகுது.... ஐயோ பிரசங்கி-க்கு அர்த்தம் சொல்ல போய்.... ம்ம்ம்ம்ம்... அருண் பிரகாஷ்.... அருண் என்றால் சூரியன்... பிரகாஷ் என்றால் பிரகாசமான... எல்லாரும் அவங்க அவங்க பெயரின் அர்த்தம், மூலம் எல்லாம் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும்... இல்லையா? (பிரசங்கி எப்படி என்று கேட்டதற்கு பதில் சொல்ல இவ்வளவு நேரமா என்று நீங்கள்... சரி சரி சொல்லி விடுகிறேன்..... டேய் அருண்னு சீக்கிரம் சொல்லி தொலை...)

நெறைய கதை கட்டுரை படிக்கும் போது புனை பெயருடன் வரும்... நம்மளும் அப்படி வச்சா என்ன-னு ஒரு யோசனை-ல எங்க அப்பா-கிட்ட கேட்டேன்... புனை பெயர் வைத்து கொண்டால் நீங்க வச்ச பெயருக்கு பாதிப்பு வருமா-னு கேட்க அப்படி எல்லாம் இல்லை-னு அவங்க சொன்ன உடனே... நம்ம குணாதிசய சம்பந்தமா நம்மலே நமக்கு வச்சுக்கலாம்-னு முடிவு பண்ணி ஒரு வாரம் மண்டைய பிச்சுகிட்டு வச்சது தான் இந்த பிரசங்கி.....

அது என்ன குணாதிசயம்... வாத்தியார் பாடம் எடுக்கிறதுக்கு முன்னாடியே அந்த பாடத்தை வீட்ல வச்சு படிச்சு வந்து விடுவேன்.... சோ கேள்வி கேட்டால் எல்லாத்துக்கும் முன்னாடி பதில் சொல்லலாம்-ல.... இதுக்கு பெயர் அதிக பிரசங்கி....முந்திரி கொட்டை-னு சொல்லுவாங்க.... காலேஜ் போன அப்போ, அப்படி முன்னாடியே படிச்சு விட்டு போய் விடை சொல்லுவேன்.... மேடம் எல்லாரும் ஆச்சர்யமா பாக்க ஆரம்பிக்க, பசங்க பொரும ஆரம்பிக்க... இப்படியே போச்சு.... அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, சோம்பேறி தனம் கூடி கணக்கின் விடையை மட்டும் மனப்பாடம் பண்ணி வச்சுக்க பழகி கொண்டேன்...

கணக்கு எல்லா பாடங்களிலும் வரும்... மேடம் கணக்கு எழுதி போட்ட உடனே விடை சொல்லுவேன்... குட்-னு சொல்லுவாங்க... அவன் அவன் அந்த கணக்கை முடிக்க பதினைஞ்சு நிமிஷங்கள் ஆகிடும்.... அப்படியே நல்ல பிள்ளை பேரு வாங்கி, போன போது.. ஒரு நாள்..... மேடம் கணக்கை எழுதிய உடன் விடை சொன்னேன்....1.45 Tonne-னு... வெரி குட்-னு சொல்லி போர்டு-ல விடைய எழுதி போட்டுட்டாங்க...

ஒரு இருபது நிமிஷம் ஆகி இருக்கும்... அவன் அவன் 189.34 Tonne-னு சொல்லுறான்... மேடம் புக்கை பாக்குறாங்க.... விடை 1.45 Tonne-னு இருக்கு.... மேடம் அப்புறம் அந்த கணக்கை போர்டு-ல பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.....அவங்க பண்ணி பார்த்தா 189.34 Tonne விடை வருது..... அருண் உனக்கு எப்படி சரியா வந்தது... புக் விடை உனக்கு மட்டும் சரியா எப்படி வருது... நீ பண்ணியதை காட்டு-னு சொன்ன உடன், 7G ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா மொக்கையா சிரிக்குற மாதிரி சிரிச்சு, என்னோட வெற்று பேப்பரை காமிச்சேன்.... கெட் அவுட்-னு உடனே கத்த ஆரம்பிக்க, பசங்க எல்லாம் கெக்கபெக்க-னு சிரிக்க என்னோட நேரம் சரி இல்லை-னு புலம்பிகிட்டு வெளிய போனேன்.... ம்ம்ம்ம்...

சோ இப்படி இருக்கிறதால....பிரசங்கி தமிழ் வார்த்தையை நம்ம உபயோகிச்சுக்கலாம்... நமக்கு அதுக்கு தகுதி இருக்கு-னு நானே நினைச்சுகிட்டேன்!!!!.... பிரசங்கி... தமிழ் இலக்கணப்படி, எவன் ஒருவன் தன்னுடைய கருத்துக்களை, உலகுக்கு வெகு வேகமாக நேர்த்தியாக, சிறப்பாக, தெளிவாக சொல்கிறானோ அவனே பிரசங்கி..... பிரசங்கம்-னு சொல்லுவாங்களே... அது கூட இது தொடர்புடையது தான்....

என்ன எல்லாரும் எழுந்து தண்ணி குடிக்க போற மாதிரி தெரியுது.. ஐயோ இருங்க...இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... ம்ம்ம்ம்...

சரி முடிச்சுக்கிறேன்.... அடுத்தவங்களும் நெறைய பதிப்பு போடணும்-ல..... நான் அதிக பிரசங்கி இல்லை.... அருண் பிரசங்கி தான்....

பிளாக்-னு ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு... ஆனா வேலை கொஞ்சம் அதிக படியா இருக்கிறதால அந்த பக்கம் ரொம்ப போக முடியல...
http://arunprasangi.blogspot.com/
இருந்தாலும் பாருங்க.... உங்களுக்கு நேரம் இருக்கும் போது...

இவ்வளவு பொறுமையா படிச்சு கடைசி வரி வந்த எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல்...ம்ம்ம்ம்... என்ன சொல்ல... ஸ்பெஷல்.... அறுசுவை அன்பர்கள் அனைவரும் ஸ்பெஷல் தான்... ஸ்பெஷல்-ஆ இருக்கிறவங்களுக்கு ஸ்பெஷல்-ஆ நான் என்ன கொடுக்க முடியும்????

விஷ் பண்ணிக்கிறேன்ன்ன்... டைம் ஆச்சு... பதில் மொழி போடுங்க.... நல்லது.... (டேய் அருண்னு உன் பிளேடு தாங்க முடியல-னு கண்டிப்பா பதில் மொழி வரும்.. போ... தூங்கு....).... சரி மீண்டும் நல்லது... பார்க்கலாம்....

அருன் ப்ரசங்கி என்ற பெயருக்கு பின்னால இவ்லோ பெரிய வரலாறு அடங்கிருக்குன்னு நான் கொஞ்ஜம் கூட நினச்சு பாக்கல. படிப்பில் மட்டும் அல்லாது அனைத்திலும் கோல்டு மெடல் வாங்க வாழ்த்துக்கள்.

ஹாய் அருண் ப்ரசங்கி,

எனக்கு ஒரு வாசகம் தான் நினைவுக்கு வருகிறது அருண்.......

"பெயர கேட்டாலே சும்மா அதிருதில......"

ஹிய் ....ஹியி.......

இந்த பேரு ரொம்பவே பொருத்தமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்,உங்க பிளாக் நேத்தே படிச்சாச்சு அப்போவே நினைச்சேன்..சரிதான் உங்க கதை படிச்சதும் தண்ணி இல்ல ஆரஞ்சு ஜீஸே குடிக்கனும்..வாழ்க வளமுடன்..படிச்சாச்சுபா பதிவும் எழுதியாச்சு,சரியா? அதிக(அருண்)பிரசங்கி?..எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுதோ கடவுளே!!! உங்க இஷ்ட தெய்வம் பிள்ளையார் அழகா இருக்கார்!!!

அருண் பிரசங்கி அண்ணா உங்க பிரசங்க கதை நால்லா இருக்கு. நான் தவறுதாலா நானச்சிடேன். என்னை (உங்கள் தங்கையை )மன்னிக்கவும். sorry.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உங்க கதையை மிகவும் ரசித்தேன்.Humour sense கொஞ்சம் இருக்கு உங்களுக்கு.keep it up!!!!

Be Good,Do Good

Be Good,Do Good

அப்பாடா ஒரு வழியா உங்க பிரசங்கத்தைப் படிச்சு முடிச்சுட்டேன். பேசாமல் நீங்கள் "அதிகப் பிரசங்கி" என்றே புனைப்பெயர் வைத்திருக்கலாம் என்று தோணுகிறது.

ஆனாலும் அரட்டையில் இப்படியும் ஒரு ஆள் இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும்.

உங்கள் எழுத்துப் பணிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

அருண் பிரகாஷ் பின்னால இவ்வளவு பெரிய ...பெரிய பிரசங்க வரலாறுபா. .....,ஓகே ......,எனி...,வே ..,
படிப்பில் கோல்டுமேடல் வாங்கியதுக்கு வாழ்த்துக்கள்....,

Mb

lovely

அப்பாடா அருணோட பிரசங்கத்தப்படிச்சிட்டு பிட்டப்போட்டுட்டேன்
கண்டிப்பா அருணோட .காமைப்பார்கிரேன்

அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

அருண்... உங்க பெயருக்கான வரலாறு படிச்சாச்சு.

உங்க விடை சொல்லும் டெக்னிக் காலை வாரி விட்டதை படித்து சிரிப்பு தான் வருகிரது.

நான் காலேஜ் படிக்கும்பொதும் ஒரு தோழி இப்படி தான் உடனே விடை சொல்லி ஃப்ரெண்ட்ஸ் எல்லொர் கோபத்தையும் கிளறி விடுவாள்.எனக்கு அந்த காலேஜ் டேஸ் தான் ஞாபகம் வருது.

*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.*

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

படிப்பில் கோல்ட் மெடல் வாங்கியாச்சு. வாழ்த்துக்கள்.

முயற்சி திருவினையாக்கும். உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இறைவன் அருள்புரியட்டும்.

*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.*

**அன்புடன் ஃபஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்