இட்லி பொடி சாதம்

தேதி: February 19, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

சாதம் - 1 கப்
இட்லி பொடி - 2 மேசைக் கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 4 இலை


 

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.
இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி


இட்லி பொடியிலேயே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையா இருக்கு..நான் காரம் நரைய சாப்டுவேன்.அதுனால சாதம் கலந்தபின் சாப்டற்துக்கு முன்னாடி கொஞ்ஜம் கார பொடி சேர்த்தேன்...சூப்பர்..கார சாதம் என்று எனது தோழி பள்ளியில் படிக்கும்(?)போது கொண்டு வருவாள்.அந்த சாதத்தின் ரகசியம் இப்போ தானே தெரியுதூ...இதுகு தொடுக்கொள்ள பேகட் பொடேட்டோ செஞ்ஜேன்.புகைப்படம் அனுப்பரேன்....

மிகவும் நன்றி அம்மு.
நான் கொஞ்சமாக சாதம் இருக்கும் பொழுது இப்படி தான் செய்து சாப்பிடுவேன். அதிலும் இதில் நல்லெண்ணெய் சேர்த்து கலக்குவாதல் மிகவும் சுவையாக இருக்கும்..
அனுப்புங்கள் புகைப்படம் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கு.
இது மாதிரி புகைப்படம் எடுத்து போட்டால் பின்பு யாரவது பார்த்தால் சாப்பிட தோன்றி உடனே செய்துவிடுவாங்க..
மிகவும் நன்றி புகைபடம் எடுத்ததற்கு.
அன்புடன்,
கீதா ஆச்சல்

எபடி படத்தை சேக்கனு தெரிலீயே!

அட்மினுக்கு அனுப்பினால் அவர் இதில் இணைத்துவிடுவார். அவருடனை மெயில் ஐடி முகப்பில் எப்படி குறிப்பு அனுப்புவது என்பதில் இருக்கும் பாருங்கள்.
வாங்க வந்து சமைக்கலாம் பகுதிக்கு வந்து என்ன சமைச்சிங்க என்று சொல்லுங்க.

அந்த பகுதியை கண்டுபுடிக முடியலயே!

முகப்பிலேயே இருக்கின்றது. அப்படி இல்லை என்றால் arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

பாபு அண்ணா வுக்கு படம் அனுப்பிட்டேன் அக்கா......உங்க எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெசிப்பி காணுமே!!

மிகவும் நன்றி அம்மு.
என்னுடைய குறிப்பில் எண்ணெய் கத்திரிக்காய் கொடுத்த்தாக நினைப்பு இல்லை.. …. ஸாரிபா. வேண்டுமானால் பிரியாணி கத்திரிக்காயை பாருங்கள்..
அன்புடன்,
கீதா ஆச்சல்

திருமதி. அம்மு அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த இட்லி பொடி சாதம்.

<img src="files/pictures/aa51.jpg" alt="picture" />

அம்மு,
போட்டோ மிகவும் சூப்பராக இருக்கு. மிகவும் நன்றி.
போட்டோவினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

thangal thantha idly podi satha receipe migavum nandraga irunthathu
nanri!

rspriya28

rspriya28