கோதுமை ரவை இட்லி & தோசை

தேதி: February 19, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை உடைத்த ரவை - 2 கப்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கோதுமை ரவை மற்றும் உளுத்தம் பருப்பினை தனித்தனியாக பாத்திரத்தில் போட்டு 2 - 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின்பு இட்லிக்கு அரைப்பது போல உளுந்து மற்றும் கோதுமை ரவையை போட்டு அரைத்து கொள்ளவும்.
இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்கவைக்கவும்.
நன்றாக புளித்த பிறகு இட்லிகளாக ஊற்றி சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.
இப்பொழுது சுவையான கோதுமை ரவை இட்லி ரெடி.


இட்லியாக ஊற்றி வெந்த பிறகு எடுக்கும் பொழுது சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு இட்லி தட்டில் இருந்து எடுக்கவும்.
தோசையாக ஊற்றும் பொழுது மிகவும் மெல்லியதாக பேப்பர் ரோஸ்ட் போல ஊற்ற வரும். மிகவும் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா ஆச்சல், நான் அமெரிக்கன் ஸ்டோரில் வாங்கிய கோதுமை ரவையில் செய்தேன். கிரைன்டரில் போட்டு சற்று நேரத்திற்கெல்லாம் நன்றாக மசிந்து விட்டது. அதனால் இட்லி, தோசை எதுவும் சரியாக வரவில்லை. பிறகு அரிசியை ஊறவைத்து அரைத்து கலந்து விட்டேன். பிறகு இட்லி, தோசை இரண்டும் செய்தபோது மிகவும் நன்றாக வந்தது. இட்லி நல்லா சாஃப்ட்டாக வந்தது. தோசை மெல்லியதாக வந்தது.நீங்க கோதுமை ரவை இண்டியன் ஸ்டோரில் வாங்குவீர்களா? இட்லி அரிசி இப்போது கிடைப்பதில்லை. இப்படி செய்து பார்க்கலாமே என்றுதான். மிகப் பெரிய பின்னூட்டமாக வந்து விட்டது:) நன்றி உங்களுக்கு.

மிகவும் நன்றி வின்னி
ஸாரி பா..நான் மிக்ஸியில் அரைப்பதால் கொஞ்சம் கொர கொரப்பாக 1 நிமிடம் அரைப்பேன்…அதனால் இருக்குமோ…
நான் இப்படி தான் செய்தேன்..எனக்கு நன்றாக வந்தது..அதனால் தான் குறிப்பு அருசுவையில் கொடுத்தேன்...(எப்பொழுதும் நான் செய்து பார்த்த பிறகு தான் குறிப்புகள் கொடுப்பது வழக்கம்)…இங்கேயும் இட்லி அரிசி கடைக்கத்தால் இப்படி செய்தேன்.
நான் கோதுமை ரவையினை இந்தியன் ஸ்டோரில் தான் வாங்கினேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா, நான் செய்த மிஸ்டேக்குக்கு நீங்க ஏன் ஸாரி சொல்றீங்க. கிரைன்டரில் அரைத்ததுதான் மிஸ்டேக் என நினைக்கிறேன். அடுத்த முறை இண்டியன் ஸ்டோரில் வாங்கி, மிக்சியில் அரைத்துவிட்டு உங்களிடம் சொல்கிறேன். சரியா. மிக்க நன்றி.

கீதாச்சல் இந்த மாவு அரைத்து தோசை செய்து, வெங்காய காரச் சட்னியும் செய்தேன்ப்பா, சூப்பர் காம்பினேசன் மற்றும் சுவையும் அருமை, நாங்கள் விரும்பி சாப்பிட்டோம்.
முழுக் கோதுமை உபயோகித்து ஊரிலிருக்கும் போது அடிக்கடி செய்வேன், இங்கு கிடைக்காததால் கோதுமைமாவு தோசைதான் செய்வேன். கோதுமைரவை உபயோகித்து செய்யத் தோன்றவில்லை, உங்கள் ஐடியாவிற்கு மிக்க நன்றி. வெங்காயக் காரச் சட்னி நானும் இம்மி பிசகாமல் இதே மாதிரித்தான் சேய்வேன், அதனால் அதற்கும் சேர்த்து இங்கேயே பின்னூட்டம்.

அன்புடன் :-).........
உத்தமி :-)

மிகவும் நன்றி உத்தமி அக்கா.
எப்படி இப்படி எல்லாம்..ஒரே மாதிரி சமைக்கிறோம்…ஆஹா..என்ன பொருத்தம் பாருங்கள்….
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா அக்கா, நேற்று இந்த இட்லி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நல்ல ருசி. உப்புமா, கஞ்சியிலிருந்து வெளியேரியாச்சு. மிக்க நன்றி.

மிகவும் நன்றி சுபா. ஆமாம் நீங்கள் சொல்வது போல இப்படி விதவிதமாக சாப்பிட்டால் சலித்து போகது.
எங்கள் வீட்டிலும் இதனை அடிக்கடி செய்வேன்.

அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாஆச்சல் இன்னைக்கு உங்க இட்லி பண்ணேன்.சாதாரண இட்லியை விட மெத்தென நல்லா வந்தது.குறிப்புக்கு நன்றி.

Patience is the most beautiful prayer!!