கத்திரிக்காய் வேர்கடலை மசாலா

தேதி: February 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கத்திரிக்காய் - 4
2. வேர்கடலை - 1 கைப்பிடி
3. முந்திரி - 5 (விரும்பினால்)
4. வெங்காயம் - 1/2
5. பச்சை மிளகாய் - 2
6. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
7. அம்சூர் பொடி - 1/4 தேக்கரண்டி
8. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
9. உப்பு


 

வேர்கடலை வறுத்து தோல் நீக்கவும். வேர்கடலை, முந்திரி இரண்டையும் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் மெல்லியதாக, நீள வாட்டில் வெட்டி வைக்கவும்.
எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இது பாதி வதங்கியதும், கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். கத்திரிக்காய் கலர் மாற ஆரம்பித்ததும், தூள் எல்லாம் சேர்த்து பிரட்டி, அரைத்த வேர்கடலை முந்திரி பேஸ்ட் சேர்த்து மூடி அதிலேயே வேக விடவும். காய் வெந்து எண்ணெய் பிரியும் போது எடுக்கவும்.


சூடான சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் செய்து பார்த்தேன்... மிக சுவையாக இருந்தது. மிக்க நன்றி.

God is Great

மிக்க நன்றி மோகனபிரியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா