பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். எனக்கு தெரிந்து ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா ஆன்டியின் மகன் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நம் தோழிகளில் ஸ்டேட் ரேன்க்,ஸ்கூல் ஃப்ர்ஸ்ட்,அதிக மார்க் score பண்ணினவங்க தேர்தல் படிப்பு உத்திகள்,எழுதும் முறை விளக்கினால் நல்ல இருக்குமே.இப்ப இருக்கிற இளைய தலைமுறையினரும் அனுபவசாலிகளும் விளக்கலாமே.நாங்கள் பிள்ளைகளுக்கு சொல்ல வசதியாயிருக்குமே.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இழையை ஆரம்பித்த இலவிற்கு மிக்க நன்றி.வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் மைதிலி,சுஸ்ரீ,சந்தோ,சுகன்யா,பிரபாதாமு மிக்க மகிழ்ச்சி. exam எழுதும் தோழிகள் ஸாதிகா,ஜலீலா,விஜிமலை மற்றும் தோழிகளின் குழந்தைகளுக்கும் என் வேண்டுதலும் வாழ்த்துக்களும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பொதுதேர்வு எழுதும் அனைத்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நம்ம அறுசுவை உறுப்பினர்களான ஸாதிகா அக்கா, ஆசியா அக்கா ஜலீலா அக்கா, விஜிமலை அனைவர் பிள்ளைகள் அனைவரும் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்!!! அம்மாக்கள் எல்லோரும் டென்ஷன் இல்லாமல் ப்ரியாக இருங்க. பிள்ளைங்க நல்ல மார்க் வாங்குவாங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பொதுதேர்வு எழுதும் அனைத்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்! நம்ம அறுசுவை தோழிகள் ஜலீலாக்கா,ஸாதிகாக்கா,ஆசியாக்கா மற்றும் விஜிமலை அவர்களின் பிள்ளைகள் அனைவரும் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்!!!

படிப்பு உத்தி என்னோடது என்ன தெரியுமா... கஷ்டமா இருக்கிற பாடத்தை புத்தகத்தை திறந்துவைத்துக்கொண்டே அதனை ரஃப் நேட்டில எழுதி பார்ப்பேன். பாத்து எழுதும் போது மனதில அதிகம் பதியும். அதுபோல படம் வரைந்து பார்க்க வேண்டியதை கலர் பென்னில/பென்சிலில் வரைந்தும் பழக்கப்படுத்திக்குவேன். கணக்கு ஃபார்முலா/செய்யுள்/செமிஸ்டரி&பிசிக்ஸ் ஈக்குவேஷன் எல்லாம் சின்ன தாளில் எழுதிட்டு ( சீட் ஷீட்) ,காலையில் ஒருமுறை வாசிப்பேன்.

எக்காரணம் கொண்டும் துக்கத்தை விடமாட்டேன். எனக்கு இந்த நைட் படிப்பதெல்லாம் வராது. ஒன்னுமே படிக்கலைனாலும் காலையில் எழுந்து ஒரு முறை வாசித்துவிட்டு சென்றாலும் மனதில பதியும்.

ரொம்ப கஷ்டமன பாடம் என்றால் அந்த பகுதியை எடுத்து .அதனை ஒரு வரி கேள்வி பதிலாக தயரித்துக்கொள்வேன். அப்ப மனசில நல்லா பதியும்.

கடைசியா.. பரிட்சை சமையத்தில நீ என்ன படிச்சே.. அய்யோ நான் இதனை படிக்கலையேன்னு ஃபீல் பன்ன மாட்டேன்...அது போல பரிட்சை எழுதி வந்ததும் ஃபோஸ்ட்மாடம் பண்ண மாட்டேன். இந்த கேள்விக்கு பதில் சரிதானான்னு... கடைசி பரிட்சை போற வரைக்கும் மனசு அமைதியா இருக்கனும் இல்லையா...

Good Luck to all those who are appearing for Board/HSC exam.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பத்தாவது, +2 தேர்வு எழுத போகும் அன்பு அக்காக்களின் பிள்ளைகளுக்கு என்னோட வாழ்த்துக்கள். என்னோட சின்ன அட்வைஸ் எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி எதையுமே படிக்கவோ ரிவிஷன் பண்ணவோ கூடாது. ஏனென்றால் கடைசி நேரத்தில் படிக்கும் போது பதற்றம் ஏற்படும். மேலும் படித்ததெல்லாம் மறந்தது போல தோன்றும். இதனால் முன்கூட்டியே புத்தகத்தை மூடி விடுவதால் பயம் இல்லாமல் தேர்வு எழுத முடியும். இது என்னுடைய பள்ளி பருவத்தில் நான் செய்த முக்கியமான ஒன்று.

போர்ட் எக்சாம் எழுதும் அனைத்து பிள்ளைகளுக்கும் எனது ப்ராத்தனைகள்..அதை நினைத்தாலே எனக்கு இன்னும் குலை நடுங்குது.
இலாவின் டிப்ஸ் சூப்பர்..நான் ஸ்க்குளில் படிக்கிற வரை கஷ்டபட்டு தான் சில சப்ஜெக்ஸில் பாசாவேன் சிலதில் நல்லா மார்க் எடுப்பேன் ஆனால் அதுவே கல்லூரியில் நானே நினைத்துப் பார்க்காத அளவுக்கு என்னால் மதிப்பெண் எடுக்கவும் முடிந்தது..ஃபைனல் போர்ட் எக்சாமிலும் நல்ல மதிப்பெண்ணால் தேர்ச்சி பெற முடிந்தது..முழுக்க முழுக்க இன்டெரெஸ்ட் தான் காரணம்...நமக்கு விருப்பமான சப்ஜெக்டாக இருந்தால் சுலபம்..
பிள்ளைகளுக்கு பள்ளியில் இஷ்டமில்லாவிட்டாலும் நிர்பந்தம் காரணம் பலதும் படித்தே ஆக வேண்டிய காட்டாயம்..அப்பொழுது தாய்தந்தையர் அல்லது ஆசிரியை பிள்ளைகளுக்கு எளிமையாக்க சில டிப்ஸ் அல்லது ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் கொடுத்தாலே இன்டெரெஸ்டை உண்டாக்கலாம்.
ஓடும் பஸ்ஸில் படிக்காமல் வீட்டிலிருந்து பிள்ளைகள் இறங்க ரெடியாகும் முன்பே புக்கை மூடி விட்டால் பிறகு ஸ்கூளுக்கு போன பின் நேரா எக்சாம் எழுதலாம்...கடைசி நேரத்தில் இதுவா அதுவா என்று அறக்க பறக்க படித்தால் முன்பு படித்ததெல்லாம் மறக்கும்
ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு மாடெல் எக்சாம் க்வெஷன் பேபர் டெஸ்ட் எழுதி பார்க்கலாம்..90% சதவிகிதம் புக்கை கரைத்து குடித்து விடுவோம்.நல்ல சத்தான உணவு அதே சமயம் ஆரோகியமானதாக சாப்பிட்ட வேண்டும்.
யோகாசனா போன்ற பயிற்ச்சி பிள்ளைகளின் மெமரிக்கு உதவும்..அல்லது அன்றாடம் நாம் செய்யும் கடவுள் வழிபாடு/தொழுகை அதுவே ஒரு எக்செர்சைஸ் தான்..நேரமில்லை என்று கடைசி நேரத்தில் சொல்லும் அளவுக்கு விட்டு வைக்க கூடாது.
ஏவெரேஜ் படிக்கும் பிள்ளைகளை ஜூஸ் பிழியாமல் முக்கியமாக கருதப்படும் கேள்விகளை மட்டும் படித்து போக வைக்கலாம்.
இலா சொன்னது போல் எழுதி பார்த்தால் தான் கண்டிப்பா மனதில் பதியும்..அதற்கு அழகாக இருக்க் வேண்டும் என்றில்லை.கோழி கிறுக்கினது போல ரஃபாக மனதில் நினைத்ததை எழுதிக் கொண்டே போகலாம் அப்போ தான் எதை அதிகம் மறக்கிறோம் அதை இன்னொருமுறை படிக்கலாம் என்று தெரியும்
மீண்டும் எனது ப்ராத்தனைகள்

தோழிகள் அருமையாக சொல்லி இருக்கீங்க,இலா தளிகா நீங்கள் சொன்னது 100% உண்மை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தவறி சத்தானதாக ஆரோகியமானதாக என்று எழுதிவிட்டேன்...அளவாக அதே சமயம் ஆரோகியமாக என்று இருக்க வேண்டும்..கொழுப்பு நிறைந்த அல்லது மூக்கு முட்ட சாபிடுவது மறதியை கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆசியா ,தனிஷா, மேனகா, இலா , தளிக்கா எல்லோருக்கும் ந்ன்றி.

பொது தேர்வு எழுதும் அருசுவை தோழிகளின் பிள்ளைகளுக்கும் உலகில் உள்ள அனைத்து மாணவ மாணவியரும் நல்ல மதிபெண்கள் வாங்க என் வாழ்த்துக்கள்.

எங்கள்(அம்மா மற்றும் மாமியார்), வீடுகளிலும் என் பிரெஸ்ட் மார்கள் உடைய பிள்ளைகள் எல்லாம் சேர்த்து 11 பேர் எழுதுகிறார்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்