பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். எனக்கு தெரிந்து ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா ஆன்டியின் மகன் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

ஜலீலக்கா எனக்கு போர்ட் எக்சாம் என்றாலே பிடிக்காது.யோசிச்சாலே வயிறு வலி வந்து விடும்..பிள்ளைகளை நினைத்தால் பாவமா தான் இருக்கு..அது யார் பிரெஸ்டுமார்கள்??

போர்ட் எக்ஸாம் எழுத விருக்கும் அனைத்து ஸ்னேகிதிகளின் பிள்ளைகளும் நல்ல மதிப்பெண் பெற்று,அவர்கள் விரும்பு குரூப்,அவர்கள் விரும்பும் கல்லூரிகள் கிடைத்து வாழ்வில்முன்னெற வாழத்தி பிரார்த்தனை செய்கின்றேன்.வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும்,உபயோகமான டிப்ஸ் தந்த ஸ்னேகிதிகளுக்கும் நன்றி.பல குறிப்புகள் கண்டிப்பாக நோட் செய்து கொண்டு கடைபிடிக்க வேண்டியவை.நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தளி நானும் கவனிக்கல என் தோழி , பேமிலி பிரெண்டு மார்கள், ஆபிஸில் உள்ள மேனேஜர், டெனிஷியன் இவர்கள் பையன்கள், பொண்ணுங்கள் எல்லோரும் எழுதுகிறார்கள்
நாத்தனார் பையன், கோ சிஸ்டர் பையன், தங்கை பொண்ணு, சின்ன பாட்டி பொண்னு எப்படியும் 25 பேர் தேறும் என்று நினைக்கிறேன் சொல்ல வந்து கொன்டே இருக்கு

இன்னும் பல இதே போல் ஹனீஃப் செட்டும் நிறைய உள்ளது. அவன் டைமில் ஒரு பெரிய குரூப்பே சேரும்.\

ஜலீலா

Jaleelakamal

அது எப்டி தெரியுமா ஜலீலக்கா நாம ஒரு விஷயத்தைல் குறியா இருக்கப்ப தான் சுற்று முற்றும் அதனைப் சம்மந்தப்பட்டவர்களே இருப்பார்கள்..அது மாதிரி நம்ப வீட்டுல எக்சாம்னு வைய்யுங்க சுற்றும் பார்ப்பவர்கள் எல்லாம் எழுதுவாங்க..இப்ப கூட நான் அதை தான் யோசிச்சுட்டிருந்தேன் என்னடா இது என்கண்ணை சுற்றி ஒரே கர்பினிகளா திரியுராங்களேன்னு.
அப்ப தான் நினைத்தேன் நாம ஒரு விஷயத்தையே மனதில் போட்டுக் கொள்ளும்போது அது தான் நம்மை சுற்றி தெரியும்..
அப்பப்பா 12 க்லாஸ் கண்டத்தை சீக்கிரம் முடித்து நல்ல படியா மார்க் வாங்கனும்...எல்லா பிள்ளைகளுக்கும் நினைத்ததை எடுத்து படிக்க வசதியாக நல்ல மார்க் கிடைக்கனும்.அம்மாமார்களுக்கு டென்ஷன் தான்

நாளை சென்னையில் +2 தேர்வுகள் ஆரம்பமாகப்போகிறது.
தேர்வு எழுதும் குழந்தைகள் அனைவரும் நல்லமுறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன்.

அப்படியே ஒரு நற்செய்தி. என் மகன் எம் பி ஏ பாஸ் செய்துவிட்டான். இனி அடுத்தது வேலைதான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நாளை போர்டு எக்ஸாம் எழுதப் போகும் ஸாதிகா, ஆசியா, ஜலீலா, விஜிமலை இவர்களின் மகன்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் யாரும் விடுபட்டு போயிருந்தாலும் அவர்களுக்கும் வாழ்த்துகள். அனைவரும் நல்லபடியாக தேர்வு எழுத இறைவனை வேண்டுகிறேன்.
ஜெயந்தி மேடம், உங்க மகனுக்கு என்னுடைய விஷேச பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்கள் மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு பாரட்டுக்கள்.நல்ல வேலை கிடைத்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களோடு வாழ வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதும் நம் அருசுவைத் தோழிகள் ஸாதிகா அக்கா, ஆசியா, ஜலீலா, விஜிமலை ஆகியோரின் மகன்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்று விருப்பப் பாடங்கள் அவர்களைத் தேடி ஓடிவந்து மகிழ்ச்சிக் கடலிலாழ்த்தவும், அதைக் கண்ணுற்ற பெற்றோரின் மனம் ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கவும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதேபோல் இன்பம் மற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கிடைக்கப்பெற வாழ்த்துக்கள்.

ஜெயந்தி மாமி, தங்கள் மகனிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் மகன், தான் விரும்பிய பணியிலமர்ந்து எல்லா வளமும் பெற்றிட வாழ்த்துக்கள்.

இலா உங்களின் படிப்பு உத்திகள் மிகவும் அருமை, எல்லோருக்கும் உபயோகமனவை, மிக்க நன்றிப்பா. எனது மகனையும் இவற்றைப் பின்பற்றச் சொல்கிறேன்.

அரசி நன்றிப்பா, நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. எலோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

தளிகா நன்றிப்பா, நீங்கள் சொல்லியிருப்பது போல்தான் நாங்களும் நடைமுறைப் (மாடல் கொஸ்டீன் பேப்பரிலிருந்து டெஸ்ட் வைப்பது, தினசரிப் பிரார்த்தனை போன்றவை) படுத்துகிறோம்ப்பா. ஆரோக்கிய உணவைப் பற்றி என் மகனிற்கு சொல்லிக் களைத்துவிட்டேன், ருசியான உணவு மட்டுமே விரும்பம். என்ன ஒரே நல்லதென்றால், அவரிற்கு எண்ணெய்ப் பலகாரங்கள் விருப்பமில்லை. இப்படி இல்லை லிஸ்டில் இன்னும் நிறைய நல்லதும், ஆரோக்கியமானதும் சேர்ந்து இருப்பதுதான் வருத்தம். நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கச் சொல்கிறேன், அப்பொழுதாவது யோசிக்கிறாரா!!! என்று பார்ப்போம். தங்களின் மற்ற உத்திகளும் பயனுள்ளவை, நன்றிகள்.

ப்ரபா என் மகன் 10ஆம் வகுப்பு என்பதை ஞாபகம் வைத்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றிகள். அவருக்கு, இப்பொழுது பள்ளி ஆரம்பித்து ஒருமாதம் தான் ஆகியுள்ளது, நவம்பர் மாதத்தில் தேர்வு நடக்கவுள்ளது. உங்களின் வாழ்த்தை அவரிற்குச் சொல்கிறேன்.

ஆசியா பாட உத்திகளைப் பற்றி கேட்கத் தூண்டிய தங்கள் எண்ணத்திற்கு, நன்றிகலந்த பாராட்டுக்கள்.

பள்ளியில் அன்று நடத்திய பாடத்தை, அன்று மாலையே திரும்பப் படித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும். வார இறுதியில் எல்லாப் பாடத்தையும் ஒருமுறை திரும்பவும் படித்து டெஸ்ட் எழுதிப் பார்க்கவும். குழந்தைகள் சிறிது நேரங்களித்துப் படிக்கிறேனென்றால், உடனே வற்புறுத்திப் படிக்க உட்கார வைக்காமல், அதேநேரம் ஒருகுறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, அந்த நேரத்திற்கு படிக்க ஆரம்பித்து விடவேண்டும் என்பதை வலியுறுத்திவிடவும். நாங்கள், இந்த உத்திகளைத்தான் கையாள்கிறோம். இவற்றைப் பின்பற்றுவது இப்பொழுது தேர்வெழுதும் மாணவர்களிற்கு அவ்வளவு சாத்தியமில்லை யென்றாலும், இனிவரும் நாட்களில் உபயோகப்படலாம்.

அன்புடன்:-)......
உத்தமி:-)

உங்கள் மகனும் 10 தாவதா?வெரி குட்.நல்ல தயார் பண்ண சொல்லுங்க.உங்க கருத்தும் பயன் உள்ளது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்க அனைவரின் வாழ்த்து மகிழ்வைத்தருகிறது.செல்விக்கா உங்க மகன் காலேஜ் தானே?என்ன கோர்ஸ்?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்