பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். எனக்கு தெரிந்து ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா ஆன்டியின் மகன் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

அட்வான்சாக இப்போதே பிடியுங்கள் "இளமையான பாட்டி" பட்டத்தை.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு தோழிகளே,
நான் இந்த இழையை இப்போது தான் பார்த்தேன்.

சாதிகா நான் நீண்ட நாட்க்ளாக இங்கு வரவில்லை என்றாலும் என் பையனை நினைவு வைத்துள்ளதற்க்கு மிகவும் நன்றி.

நல்ல த்ரெட் இலா. இப்பதான் பார்க்கிறேன். பொது தேர்வு எழுதும் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைய என் அன்பான வாழ்த்துக்கள்!

ஜெயந்தி மேடம், உங்க மகனுக்கு என்னுடைய விஷேச பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

வாழ்த்திய,அறிவுறை கூறிய அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றி.நன்றி.நன்றி.நன்றி.

ஒன்றென்றால் இத்தனை பேர் வாழ்த்துவதற்கும் ,தேத்துவதற்கும்,பிரார்த்தனை செய்வதற்கும் சினேகிதிகள் இருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.நன்றி.நன்றி.

பொது தேர்வு எழுதும் அருசுவை தோழிகளின் பிள்ளைகளுக்கும் உலகில் உள்ள அனைத்து மாணவ மாணவியரும் நல்ல மதிபெண்கள் வாங்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

விஜிமலை

அன்பு தோழிகளே,

பொதுதேர்வு எழுதப்போகும் அனைத்து குழந்தைகளூக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

சாதிகா அக்கா,ஆசியா அக்கா,ஜலீலா அக்கா,விஜி அக்கா - வின் குழந்தைகள் நல்ல முறையில் பரிட்சை எழுதி நல்லமதிப்பெண்கள் பெற்று அவர்கள் விரும்பும் கோர்ஸ் கிடைத்து நல்லமுறையில் படித்து வாழ்வில் வெற்றிபெற இந்த தங்கையின் வாழ்த்துக்கள்.

உத்தமி அக்காவின் மகன் நல்லமுறையில் பரிட்சை எழுதி விரும்பிய கோர்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்.

செல்வி

சவுதி செல்வி

ஜலீலா, சாதிகா, விஜிமலை, உத்தமி, ஆசியா உமர் உங்கள் அனைவரதும் மகன்களும் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நினைத்த கோர்ஸ் சேர்ந்து வாழ்க்கையின் அடுத்த படியை எடுத்து வைத்து வெற்றிநடை போட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த டென்ஷனும் இல்லாமல் படிச்சத எழுதுங்கள். அதோட பரிட்சைக்கு முன்னும் பின்னும் நீ அத படிச்சியா இத படிச்சியான்னு எல்லாம் கேட்காதீங்க அதுப்போல முடிச்சிட்டு வந்ததும் ஆஹா நான் அதவிட்டுடேன் இத விட்டுடேன்னு டிஸ்கஸ் பண்ண வேண்டாம் இது என்னுடைய request. ப்ளீஸ் இதை படிக்கும் அம்மாக்கள் எல்லாம் உங்க பசங்களுக்கு convey பண்ணிடுங்களேன் ப்ளீஸ். என்ன எல்லா அம்மாஸும் ரொம்ப பிஸியா இருக்கீங்களா? இரண்டு நாட்களா நடந்த பரிட்சை ஈஸியா இருந்துச்சா ப்ரண்ட்ஸ்? உலகில் அனைத்து பகுதியில் வாழும் +2 மற்றும் 10 வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ மணிகளுக்கு எனது வாழ்த்துக்கள். அதில் முக்கியமாக நம் அறுசுவை சகோதரிகளான, ஜலீலா, ஆஸியாஉமர், ஸாதிகா, விஜிமலை, உத்தமி இன்னும் பெயர் விடுபட்ட அனைவரின் குழந்தைகளும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற, எனது மனமார்ந்த வாழ்த்துக்களை வழங்குகின்றேன்.

அன்பு ஜெயந்தி அக்கா உங்க அன்பு மகன் எம்பிஏ தேற்சி பெற்றதை அறிந்து ரொம்ப சந்தோசமாய் இருந்தது. அவருக்கு என் அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் கூறவும். இந்த வெற்றிக்கு பெரும் பங்கு வகித்த உங்களுக்கும் உங்க கணவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்திய,வாழ்த்திக்கொண்டிருக்கும் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.sharing is wonderful.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பத்தாவது, +2 தேர்வு எழுத போகும் அன்பு அக்காக்களின் பிள்ளைகளுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

ArchuGiri

Archana

விஜிமலை, மனோகரி உங்களுக்கு என் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

உங்கள் குழந்தைகளிடம் பார் உனக்கு எத்தனை பேர் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். அதுவே ஒரு பூஸ்டாக இருக்கும்.

நம் தோழிகளுக்கு ஒவ்வொரு அடையாளம் சொல்வேன்

சாதிகா - பட்டர் பிஸ்கெட் செய்து கொடுத்த ஆன்டி
மனோகரி - டைகர் வீட்டு அம்மா
தளிகா - ரீமாக்குட்டியின் அம்மா

இதுபோல் எல்லாருக்கும் ஏதாவது அடையாளம் சொல்வேன்.

உங்கள் வாழ்த்துக்களை என் பையனிடம் சேர்த்து விட்டேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்