மெஹந்தி போடுக்கலாம்.....

மெஹந்தி டிசைன் வாருங்கள்........

இந்த இணைய தளத்தில் போய் யாருக்கு என்ன மாடல் வேணுமோ போடுக்கலாம் ......வாருங்கள்........

http://www.youtube.com/watch?v=i9_4uwkEGZk&feature=related

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ என்னமோ மஜிக் மாதிரி இருக்கு.எனக்கு இது என்ன எப்டி போடுறது எதுவுமே தெரியாது.ஆனா இப்ப என்னமோ ஆசையா இருக்கு.வீட்லதான் நிக்கிறன் ஆதாலால போட்டு ஆசையை தீர்க்கலாம் என்று இருக்கிறேன்.இது என்ன பெயரில் கடையில் இருக்கும்.நானே எனக்கு போடலாமா?கோவிக்காமல் கொஞ்சம் சொல்லுங்கோ.

சுரேஜினி

ஹாய் சுரேஜினி எனக்குமே மெஹந்தி பிடிக்கும். இப்ப குளிர்காலம் இல்லையா அதுக்கு தான் சம்மர் வர வெயிட்டிங். சிலநேரம் கோல்ட் பிடிச்சுக்கும். எதுக்கு வம்புன்னு நான் நல்ல வெயில் காலத்திலே போட்டுக்கறது :)) . கடையில் ஹென்னா பவுடர் என்று கிடைக்கும் இல்லை மெஹந்தி கோன் என்றே கிடைக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சுரேஜினி, நலமா? ஸ்ரீ உங்களுக்கு விளக்கமா சொல்வாங்க.. இன்னும் மற்ற தோழிகளும் சொல்வாங்க.. கொஞ்சம் கற்பனையா டிசைன் வரைய தெரிந்தாலே போதும்ங்க.. கூம்பு வடிவில், இந்தியப் பொருட்கள் விற்கும் கடைகளில் (Indian Super Market)மெகந்தின்னே கேளுங்க கிடைக்கும். நுனிப் பகுதியில் சிறிதாக கட் பண்ணி விட்டு மெதுவாக நடுப்பகுதியில் அழுத்தினால், சன்னமாக அடியில் மருதானி வெளி வரும் ... கோடு போல உள்ளங்கையில் இழுத்துப் பாருங்கள்... நுனிப் பகுதியில் மிகச் சிறு கட் பண்ணுங்கள். பெரியதாக வெட்டினால், சன்னமாக மெலிதாக டிசைன் வராது..(பேனாவில் வரைவது போல் மெலிது இல்லாட்டியும் கொஞ்சம் மெலிதாக வரும்...அதை தான் சன்னமாக என்கிறேன்)

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

இலா, நீங்க சொல்றது சரியே. குளிர் காலம் சிலருக்கு மெஹந்தி ஒத்துக்காது
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

எனக்கு வெயில காலத்திலே போட்டாலும் குளிர்ச்சியா சளி பிடிக்கும் :((

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஸ்ரீ, ஆயிஸ்ரீ, சுரேஜினி, இலா,
நலமா? எனக்கும் ஆசைதான். ஒரே ஒருமுறை என் தோழியின் திருமணத்தின்போர்து மருதாணி போட்டு விட்டார்கள். அழகாக இருந்தது. கோனில் வருவதைப் போட்டால் அழிந்து போக எத்தனை நாட்கள் எடுக்கும்? (வேலைக்கு அதோடு போக முடியாது.)
இமா

‍- இமா க்றிஸ்

//எனக்கு வெயில காலத்திலே போட்டாலும் குளிர்ச்சியா சளி பிடிக்கும் :((//

ஏனா இலா ஒரு கூல் lady.Ha ha.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் உத்ரா, உங்களுக்கு அரட்டையில் பதில் போட்டேன் பாக்கலியா நீங்க...

இமா, எப்பவும் மருதாணி எப்படி காய்ந்ததும் எடுப்பீர்களோ அதே போல் இதயும் எடுத்து விடலாம்..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஆமா, இலா எப்பவுமே கூலா இருப்பீங்கன்னா நல்லது தான்.. என்னே உத்ரா உங்க டைமிங் காமெடி... நல்லாருக்குங்க... :-)

அப்போ ரொம்ப கோபமா சூடா இருக்கும் போது மருதாணி போடுங்க... (பொறுமையா போட ஆரம்பிக்கைல கோபம் போய்டும்...) நிஜமாவே என் மேல் கோபம் வேண்டாம். சும்மா சொன்னேன் இலா. சொல்லலாம் இல்லயா?
(மருதாணின்னு டைப் பண்ணும் போது இந்த (மருதாணி )பேர் புதுசா அழகா இருக்கிற மாதிரி இருக்கு...)

இமா, அழிந்து போக எத்தனை நாளுன்னு கேட்டு இருக்கீங்க.. இதுக்குத் தான் தூக்கத்துல பதில் சொல்லக்கூடாது(எனக்கு) ... மருதாணி போலவே இரண்டு வாரம்னு நினைக்கிறேன்.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஏன் இமா இப்படி?நாங்கள் எல்லாம் நிறைய நாள் மருதாணியின் நிறம் போகாமல் இருக்க ஏதேதோ செய்வோம்.நீங்கள் இப்படி சீக்கிரம் அழிய ஆசைப் படுகிறீர்கள்?

சும்மா ஆசைக்காக வைப்பதானால் வெச்ச கொஞ்ச நேரத்தில்(10-15 min)எடுத்து விட்டால் ஒன்றும் பிடிக்காது.Dull Orange மாதிரி இருக்கும்.So Weekend-ல் வைத்தால் 2 நாளில் வேலை செய்யும் போது, கை கழுகும் போது 90% எல்லாம் போய் விடும்.

ஆனால் சிலரின் உடல் சூடு/பித்தம் பொறுத்தும் இருக்கிறது.வைத்த சிறிது நேரத்திலேயே கறு கறுவென்று ஆகி விடும் :-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்