முட்டை இடியாப்பம்

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

இடியாப்பம் - 4
முட்டை - 2
எண்ணெய் - 2 -3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது
மிளகாய் - 1
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
மிளகுப்பொடி - கால் ஸ் பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி, கருவேப்பிலை - சிறிது


 

முதலில் இடியாப்பம் உதிர்த்து வைக்கவும். தக்காளி, வெங்காயம், மிளகாய், மல்லி இலை கட் செய்யவும். முட்டை உப்பு மிளகு போட்டு அடித்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு,காய்ந்ததும், வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி ,தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து மசியவிடவும்.
பின்பு முட்டை சேர்த்து வெந்ததும் இடியாப்பம் சேர்த்து பிரட்டி மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான முட்டை இடியப்பம் ரெடி. இதனை காலை டிபனாக பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா இன்று உங்க முட்டை இடியப்பம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது நான் மிளகு சேர்க்காமல் செய்தேன் நல்ல சுவை மிக நன்றி

இதை நாங்கள் தேங்கா பால் ஊற்றி செய்வோம்