ஜாலியா பேசலாம் வாங்க பகுதி - 55

ஹாய் தோழிகளே எல்லோரும் ஜாலியா பேச இங்கே வாங்க,அரட்டையை போடுங்க.புது வரவுகளும் இங்கே வந்து அரட்டையை களை கட்ட வைக்க வாங்க!!!

ஹாய்... ஹாய் ஹாய்.... வந்துட்டோம்ல.

என்னை விசாரித்த அன்பு தோழிகளுக்கு.... நன்றி. நான் நலம், குழந்தையும் நலம். நீங்கள் நலமா??

நான் விசாரிச்சும் பதில் சொல்லாதவங்களுக்கு... தன்டனை. அடுத்த பதிவுலயாது கன்டிப்பா விச்சாரிக்கனும். இப்போ பென்ச் மேல ஏரி நில்லுங்க.

நான் விசாரிக்கலன்னு வம்பு பண்ண தோழிகளுக்கு.... சாரி. இனி நானும், என் விரலும் உங்க பேரை போட மரக்காம இருக்கோம். சரியோ??

என் குறிப்புகளுக்கு பின்னூட்டம் தந்த அனைத்து தோழிகளுக்கும் (சமைச்சுட்டு பின்னுட்டம் தராதவங்களுக்கும் சேர்த்து தான்)..... பெரிய நன்றி. முக்கியம 'ல உட்கார சொன்னவங்களுக்கு ஸ்பெசல் நன்றி.

இந்த எதுலயும் சேராம புதுசா சேர்ந்திருக்கும் தோழிகளுக்கு.... வருக, வருக, எம்மோடு அரட்டையில் இனைக.

வெள்ளி, சனி இங்கு விடுமுறை. அதான் வர முடியலை.

இந்த அதிரா'வை எங்கயாச்சும் பார்த்தா சொல்லுங்கோ.... அவங்கட்ட பேசி நிறைய வார்த்தை இலங்கை தமிழ் தாம் வருது.

சாய் கீதா... அந்த பெண்ணை பார்த்த தமிழ் முகமாட்டுமா தெரியுது??!! நிச்சயம் அந்த பெண் தமிழ் பெண் இல்லை. நாளை வருவாள், நிச்சயம் நீங்க கேட்டதா சொல்லிடுறேன்.

உத்ரா... நீங்க தூங்குறது இப்போ அறுசுவைக்கே அத்துபடி. இதுல வருத்தப்பட என்ன இருக்கு. விடுங்க விடுங்க, இதெல்லாம் நமக்கு சாதரனமப்பா....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகன்யா... நீங்க பட்டி மன்றம் தான் ஆரம்பிச்சு வைப்பீங்கன்னு நினைச்சேன், அரட்டை கூடவா??!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அங்க தான் தனியா ஒரு த்ரெட் இருக்குல்ல.. இங்க ஏன்.. வாங்க் இது 56ஆ வச்சிக்கலாம். சாப்பிட்ட களைப்பே தீரலை. மெதுவா பின்னூட்டம் தர்ரென் ஓகேவா

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

செல்விமா என்ன கிருத்தி ஸ்கூல் போன கதையில் இருந்து ஸ்டார்ட்டா. போன் பண்ணி கிருத்திகிட்ட போட்டு கொடுக்குறேன். உமாவை விசாரித்ததாக சொல்லுங்க.

சாதிகா அக்கா முன்புபோல் அரட்டையில் கலந்து கொள்வதில்லை ஏன்? கால் எப்படி இருக்கு. இருவருக்கும் பப்ளிக் எக்ஸாம். ரொம்ப டென்ஷனா இருக்கும்

சாய் கீதா நலம்தானே உங்கமெயில் பார்த்தேன். மகிழ்ச்சிப்பா. விரைவில் ரிப்ளே போடுறேன். பிள்ளைகள் நலம்தானே. சீக்கிரமே நியூசிலாந்து போயிடுவீங்க சந்தோஷம்தானே கீதா. விக்னேஷ் படிப்ப நினைத்து அம்மாவுக்கு இப்பவே கவ்லை வந்துட்டா.

ஹாய் சுகன் எப்படி இருக்கீங்க. தேஜூ என்னைக்கு ஸ்கூல் போறா. உங்களை எல்லா பக்கமும் தேடி அலைஞ்சேன் கடைசியில் நானே ஒரு வாரமா காணமா போயிட்டேன்

கவி சார் என்ன பஞ்சாப் போயிட்டாரா. அவர் சரியான ஆள் எப்பவும் உங்களை வீட்டில் விட்டுட்டு எஸ்கேப். இந்த சாக்கிலாவது பஞ்சாப் பார்த்திருக்கலாமே. சரி..சரி.. ஷாமை வச்சிட்டு பத்திரமா இருங்க.

சுஹைனா பொண்ணுக்கு வாழ்த்த சொல்லிப்போடுங்க. இனிமேல் உங்க பொருப்பு ஜாஸ்த்தியாயிடும்.

மஹா நான் திருநெல்வேலிதான். நீங்க நாகர்கோவில் பக்கத்தில்தான் இருக்கோம். நாம் மீட்பண்ணலாம் சரியா யுவனை நல்ல கவனிச்சுக்கோங்க. ஸ்னோ குறைந்திருக்கா மஹா

வனிதா யாழினி எப்படி இருக்காங்க. இந்த வாரம் ரொம்ப பிஸி நீங்க. பின்னூட்டத்திற்கு பதில் கொடுக்கவே நேரம் சரியா இருக்கும்.

மேனு எப்படி இருக்கீங்க. உங்களுடன் பேசி ரொம்ப நாளாச்சு. ஷிவானி செல்லம் எப்படி இருக்கா. நீங்க அப்ராகிட்ட அம்மாவ பிஸியா வைனு சொல்லி அவ என்னை எப்பவுமே பிஸியா வச்சிருக்கா. பிரான்ஸில் குளிர் எப்படி இருக்கு மேனு

ஆயிஷ்ரி எப்படி இருக்கீங்க. ஊரில்தானே இருக்கீங்க. அப்பா நலம்தானே.

செல்வி நலமா. பொண்ணு டான்ஸ் கத்துக்கிறாளா. அரங்கேற்றம் விரைவில் எதிர்பார்க்கலாம். வீட்டில் அனைவரும் நலம்தானே.

இலா நலம்தானே. வீக்கெண்ட் எப்படி போச்சு. நீங்க கொடுத்த லிங்க் ரொம்ப யூஸ்புல். ஒருவழியா கிச்சன் டிசைன் செலக்ட் பண்ணி எஞ்ஜினியருக்கு அனுப்பியாச்சு

இமா நலமா. உடம்பு இப்போ சரியாயிட்டுதானே
சரோஜினிக்கு பல்வலி எப்படி இருக்கு இப்போ.

ஜெயா,நலமா பிள்ளைகள் நலமா? உமாவுக்கு போன் பண்ணினா நான் விசாரிச்சதாக சொல்லுங்க

தாமரை எப்படி இருக்கீங்க. சந்தோஷ் எப்படி இருக்கான். wii fit வாங்கிடீங்களா. நீங்க வாங்கிட்டு சொல்லுங்க. நானும் ட்ரை பண்ணுறேன்

உத்ரா, உத்தமி, கிருத்திகா, வினு, எல்லோருக்கும் ஒரு ஹாய்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனீ,
என்ன இங்க தனியா பேசிகிட்டு இருக்கே? நலமா? அப்ரா நலமா? ரொம்ப பிசியா? ஜிமெயில் உன் பிசியில் காணாமல் போயிடுச்சா? நான் நேற்று ஒரு விஷயம் ஆப்லைனில் அனுப்பினேனே, பார்த்தியா?
இன்னிக்கு லக்கிக்கு பர்த்டே தனீ. கேக்கெல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். வெட்ட தான் யாரும் வீட்டில் இல்லை. இந்த வாரம் யாரும் வரலை. ஐயா குளிச்சு, பவுடர் போட்டு, பிரஷ் செய்து ரெடியா இருக்கார். அவனுக்கு என்னன்னே புரியலை. ஆனா பயங்கர சந்தோசத்தில் குதிச்சுகிட்டு இருக்கான். அவனை பக்கத்து வீட்டில் விட்டுட்டு ஊருக்கு போனேமே, அப்ப காயம் ஆகி ரெண்டு நாளா ஹாஸ்பிடலுக்கு ஆட்டோவில் கூட்டிப் போய் வந்தோம். இப்ப பரவாயில்லை.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் தனி நல்லா இருகோம் பா.உங்க பொண்ணு எப்படி இருக்காங்க?

உமாவிடம் பேசும்ப்போது கண்டிப்பா நீங்க விசாரிச்சதா சொல்றேன் பா.

எல்லாருக்கும் வணக்கம்ப்பா... இப்போ தான் பழைய அரட்டைப் பதிவை பாத்துட்டு இருக்கேன். ஒரு நாள் பார்க்கலை.. ரெண்டு பாகம் ஆச்சு. எல்லாரும் நலமா? ஆன்லைனில் யாரு இருக்கீங்க... வனிதா உங்க பேர் பாத்தேன்.. இனி தான் படிக்க ஆரம்பிக்கனும்.. நீங்க நலமா?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

செல்விமா லக்கி பிறந்தநாள் நல்லபடியா முடிஞ்சுதா. நேத்து நல்ல எஞ்ஜாய் பண்ணீங்களா. லக்கியுடன். நேத்து யாரெல்லாம் வந்தாங்க. கிருத்தி வந்தாங்களா. ஜிமெயில் இனிதான் போகனும்

ஜெயா எம்பொண்ணு நல்லாயிருக்காப்பா. பொண்ணு நல்ல படிக்கிறாளா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனிஷா, எப்படியிருக்கிங்க, அப்ராகுட்டி என்ன சொல்றாங்க? நீங்க எங்க இங்க இருக்கீங்க, நாங்கெல்லாம் இன்னும் ஜெயா ஒபன் பண்ணிய பாகம் - 55 த்ரெட் ல இருக்கோம்ப்பா.

அன்புடன்:-)...........
உத்தமி:-)

எப்படி இருக்கீங்க?அப்ர குட்டி எப்படி இருக்காங்க?க்ளைமேட் எப்படி உள்ளது. இங்க நேற்று ஒரேமண் காற்று.வெளியில் எங்கும் செல்லமுடியவில்லை.
செல்வி

சவுதி செல்வி

மேலும் சில பதிவுகள்