கேப்ஸிகம் தால்

தேதி: February 21, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
குடைமிளகாய் (கேப்ஸிகம்) - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 4 இலை
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் துவரம் பருப்பினை வேகவைத்து கொள்ளவும்.
கேப்ஸிகம், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து போடவும்.
அதன் பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதங்கிய பின் கேப்ஸிகம் மற்றும் தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்க்கவும்.
இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
விரும்பினால் கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
இப்பொழுது சுவையான கேப்ஸிகம் தால் ரெடி.
இதனை சப்பாத்தி, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சிறிது நெய் சேர்த்து கலந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா, இந்த குறிப்பை செய்து பார்த்தேன். செய்வதற்கு எளிதாகவும், சுடு சாதத்துடன் சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிகவும் நன்றி வின்னி.
இங்கு நிறைய கப்ஸிகம் கிடைப்பதால் இப்படி சட்னி, தால், பொரியல் என்று செய்வதுண்டு.
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

காப்சிகம் தால் இன்று செய்தேன். துவரம் பருப்பு வைத்து செய்தது இல்லை. நல்லா வந்தது.
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிகவும் நன்றி இலா.
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இன்று கப்ஸிகம் தால் செய்தேன். மதியம் சாதத்துடன்
சாப்பிட்டேன் நன்றாக இருக்கிறது. இரவு சப்பாத்தி செய்வதாக இருக்கிறேன். அதற்கும் நன்றாக பொருந்தும் என நினைக்கிறேன். இரவிற்கும் சேர்த்து தான் கூடுதலாக சமைத்துள்ளேன். உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிகவும் நன்றி வத்சலா மேம். ஆமாம் கண்டிப்பாக நன்றாக இருக்கும். நானும் சில சமயம் சப்பாத்தி, பூரிக்கு சாப்பிடுவேன்(மீதம் இருந்தால்…..)
அன்புடன்,
கீதா ஆச்சல்