நான் கடவுள் - ஒரு சிறு அனுபவம்

நான் கடவுள்

(இது திரை விமர்சனம் அல்ல... திரை பார்வையும் அல்ல... ஒரு சிறு அனுபவம்)

போன வியாழக்கிழமை மதிய நேரம், நான் கடவுள் - படம் பார்க்கிறதுக்கு நானும், அருண் அண்ணனும் (நம்ம சீனியர் தாங்க...) போனோம்... கவுன்டர் மூடி இருந்தது...
ஆரம்பமே இப்படியா-னு??? சொல்லிக்கிட்டோம்... இருந்தாலும் பார்க்க வந்து இருப்பது பாலா படம்..... இதுல சின்ன விஷயத்துக்கு எல்லாம் சென்டிமென்ட் பாக்க கூடாது-னு, ஒரு வழியா நைட் ஷோ-க்கு போய் விட்டோம்....(ஒரேடியா என்னோட சொந்த கதையை சொல்றேன் என்று கோவிச்சுக்காதீங்க....)

படத்தை எல்லாரும் பார்த்து இருப்பீங்க-னு நம்புறேன்.... எல்லாருடைய வாக்குப்படி, அடித்தட்டு மக்களின் நிலையை முதன் முறையாக தொட்டு இருக்கும் தமிழ் படம்....

காசி, ஆர்யா, அகோரி, சமஸ்க்கிருத உச்சாடனங்கள், பெற்ற தகப்பனின் அறியாமை, தங்கை, அம்மா-வின் பாசம், கோவில் வாசலில் பிச்சை எடுக்க பயிற்சி கொடுக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட மனித குல நல்ல ஆத்மாக்கள், போலி சாமியார்கள், தாண்டவராயன், பூஜா - என காட்சிகள் மாறி மாறி அழுத்தமாக நகர்கிறது....

அடுத்தவர் நம்பிக்கைகளை காயப்படுத்தாமல், அதே சமயம் உண்மை நிலையை உரக்க சொல்லும் தகுதி ஒரு சிலருக்கே உண்டு... இதை ஏன் சொல்கிறேன் என்றால், நாத்திகம், ஆத்திகம் இரு வேறு பிரிவுகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.... இதில் சில ஆத்திகர்கள் நாத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....சில நாத்திகர்கள் ஆத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உதாரணத்துக்கு, அடுத்தவரின் மத நம்பிக்கையை குறை சொல்லி மட்டம் தட்டி, வெளியே பார்ப்பதற்கு அருமையான கலாச்சார படம் என்று சொல்லி படம் எடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்களும் (இந்த வார்த்தையை உபயோகிப்பது மிக நெருடலாக இருந்தாலும், இவர்களுக்கு இது சரியான பெயர் தான்) இங்கு உண்டு....

ஆத்திகமோ, நாத்திகமோ உன் வரையில் நீ சரியாக உறுதியாக இரு.... அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....

இவ்வளவுக்கும் நடுவில், பாலா ஒரு தரமான படத்தை கொடுத்து இருக்கிறார்....(அடுத்தவர் நம்பிக்கையை சிதைக்காமல்)

பாலா என்று இல்லை... இந்த படத்தில் அனைவரும் அவர் அவருக்கு உரிய வேலையை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.... அது இசை ஆகட்டும், நடித்தவர்கள் ஆகட்டும், எடிட்டிங், கேமரா, பாடல்கள்... எல்லாமே...

அப்புறம்... பாலா என்ற இயக்குனரின் மூலம் நமக்கு கிடைத்த நல்ல நடிகர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது....மேற்கூறிய நடிகர்கள், யாரும் அவர்களது முந்தைய படங்களில் அழுத்தமான நடிப்பை கொடுத்தது இல்லை.... அவர்களுக்கும் நடிக்க தெரியும் என்று நாம் அவர்களை, பாலா படங்களில் பார்த்த பின்பு தான் தெரிய வந்தது....அப்படி தங்களுக்கு நல்ல நடிப்பை சொல்லி கொடுத்து வெளிப்படுத்த உதவிய, இயக்குனர்களுக்கு நடிகர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்...
பாலா போன்ற இயக்குனர் கையில் ரித்தீஷ் போன்ற மாஸ் ஹீரோ (?????) கிடைச்சா கூட சூர்யா அளவுக்கு நல்ல நடிகர் ஆக்கி விடுவார்.... (ஹி... ஹி....)

இந்த படத்திற்கும் ஏகப்பட்ட எதிர் மறையான விமர்சனங்கள், கருத்துக்கள்.... தன்னை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்த எடுக்கும் பிரயத்தனங்கள் தான் அவை.... அதை நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை....

மாஸ் ஹீரோ நடிச்சாலும் மேற்சொன்ன கூட்டம் குறை சொல்லும்...நல்ல படம் வந்தாலும் அது சொத்தை இது சொத்தை என சொல்லும் மேற்சொன்ன கூட்டம்....அப்போ எப்படி தான்டா எடுக்கணும்-னு நினைக்கிறீங்க-னு நாம் கேட்டால்...SMS-னு சொல்லி, புக் முழுவதும் அந்த பட விவரங்களை கொடுத்து, நம்மலை கொலையா கொன்னு எடுப்பாங்க...

ஒரு விமர்சனத்தை கூட தாங்கி கொள்ள முடிய வில்லையா???-னு எதிர் கேள்வி கேட்பதை விடுத்து...... ஆரோக்கியமான தமிழ் சினிமா வளர ஆதரவு கொடுங்கள்....பாராட்டி விழா நடத்தா விட்டாலும், வித்தியாசமான பார்வை என்ற வெற்று பேச்சுக்காக உங்களை நீங்களே மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தி கொள்ளாதீர்கள்...

மொத்தத்தில், நான் கடவுள் படம் எப்படி இருக்கு-னு உங்களுக்கே தெரியும்....நல்ல முயற்சி...

என் வரையில், சினிமா மனிதனுக்கு சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கும் அறிவை கொடுக்க போவது இல்லை... ஏனென்றால் "நாம் எல்லோரும் கடவுளே"...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

எஸ் தாமரைச்செல்வி அப்புறம் சந்தோஷ் என்ன பண்றாங்க???...ம்ம்ம்ம்...

... சோ சாப்பிட கூப்பிட மாட்டீங்க...ம்ம்ம்ம்.. என்னது இது???? அப்போ பிரம்மச்சாரிகள் என்றாலே பிரச்சனை தானா??? நம்மளை இப்படி ஒதுக்கப்பட்டவர்கள் லிஸ்ட்-ல சேர்ப்பது நியாயமா??? நான் சமைச்சதை நானே சாப்பிடுறேன்... அப்படி இருக்கும் போது நீங்க சமைச்சதை சாப்பிட மாட்டேனா????... கல்யாணம் ஆன அப்புறமா???? பாக்கலாம் தாமரைச்செல்வி.... அது அது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்... நம்ம திட்டமிட்ட படியா எல்லாம் இங்க நடக்குது.... ரொம்ப மொக்கை போடுறேனா??? ரெண்டு பேரு என்ன, குடும்பத்தோட வந்து பெரிய விருந்து சாப்பிட்டு போறோம்.... அவ்வளவு தானே.... சரி.... ஆமாம்... இப்போ இருக்கிற நிலைமையில் பாக்குற வேலைய தக்க வச்சுகிட்டா போதும்....எல்லாரும் அந்த நிலைமையில் தான் இருக்காங்க... சரி.. அப்புறம்.. இப்போ என்ன அங்க இரவு நேரமா???... ம்ம்ம்ம்.. அப்புறம்... சாப்பாடு விஷயம்.... கேக்குறதுக்கு எல்லாம் ஆளுங்க இருக்காங்க.... இருந்தாலும்.... ஆத்திகம் சம்பந்தமா நமக்கு ஆர்வம் ரொம்ப அதிகம்... அதான் என்னோட ஆர்குட் பக்கத்தில் turn off - னு சொல்லி இருக்கிற இடத்தில் atheism -னு போட்டு இருப்பேன்... மற்ற விவரங்கள் இருக்காது... அதுக்காக atheist மேல கோவம் எல்லாம் இல்லை... எனக்கு பிடிக்காது...ஆனா எனக்கு நெறைய atheist நண்பர்களும் உண்டு.... அவர்கள் கருத்தை என்னிடம் திணிக்க மாட்டார்கள்... பட் வாக்குவாதங்கள் ரொம்ப நடக்கும்.... அதான்... எனக்கு இன்னமும் அவர்கள் நண்பர்கள்.... ம்ம்ம்ம்....

ஒரு விஷயத்தை பத்தி நாம் தப்பு என்று சொல்லும் போது அந்த விஷயத்தை பற்றி நமக்கு முழுவதும் தெரிந்தால் தான்... அதில் என்ன குறை இருக்கிறது என்று தெரியும்... அப்படி தானே..... அப்படி தெரியாமல்.... ம்ம்ம்ம் சாப்பாடு விஷயம் எங்கேயோ போச்சா???

அதற்க்காக பழம்-னு சொல்லி பட்டம் எல்லாம் கொடுக்காதீங்க.... நம்ம வெட்டி பிரசங்கத்துக்கு மட்டும் தான் லாயக்கு... ஹி ஹி...

சரி வேலைய பாருங்க... நல்லது....ம்ம்ம்ம்...

மேலும் சில பதிவுகள்