ஆஸ்கார் விருதுக்கு எல்லாரும் ரெடியா

slumdog millionaire movie க்கு 6 நாமினேஷன் கிடைத்துள்ளது. நம்ம அருசுவை தோழிகள் எங்க எல்லாரும் வாங்க வந்து ஒட்டு போடுங்க.
இதுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொல்பவர்கள், எதுக்கு கிடைக்கும் சொல்பவர்கள், கிடைக்காது என்று சொல்பவர்காள்.
வந்து சொல்லுங்க பார்க்கலாம்.
பெஸ்ட் ம்யூசிக்
பெஸ்ட் நடிகர்
பெஸ்ட் டைரக்டர்
பெஸ்ட் பிக்‌ஷர்

எதுக்கு கிடைக்க வாய்ப்பு சொல்லுங்க வாங்க வாங்க..............

ஸ்லம் டாக் படத்திற்கு எட்டு விருதுகள்.

இதில் ஏ.ஆர். ரெஹ்மானுக்கு இரண்டு.
பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவைக்கு ஒன்று.

இரண்டு இந்தியர்களுக்கு விருது.

இந்தியாவிற்கு இந்தப்பெருமைய வாங்கித்தந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இதைத்தவிர இந்திய சிறுமியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'ஸ்மைல் பிங்கி' என்ற குறும்படத்துக்கு சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

அன்புடன்
ஜெயந்தி மாமி

யாஹூ ஹூ., இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளக்கூடிய தருணம் இது. அதுவும் நாம் அறிந்த ஒரு இசை அமைப்பாளர் என்கிற போது அது இன்னும் அதிகரிக்கிறது. மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த இரண்டு ஆஸ்கார்களும். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே அந்த இறைவன் ஏ. ஆர். ரஹ்மான் இன்னும் பல சாதனைகளை புரிந்து ஆரோக்கியத்துடன் வாழ செய்வான்.

சாதனை தமிழன் ஏ ஆர் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்களும்.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப ரொம்ப சந்தோஷ்மாக இருக்கு .இசை கலைஞர் திரு ஏ.ஆர் ரஹ்மான்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்தியாவிற்கு பெருமையாக இருக்கிறது. அவர் "ஆஸ்கார் விருது" வாங்கும்போது ஆங்கிலயேர் முன் தமிழில் நன்றி கூறினார் அதுவும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் மேலும் அவர் இது போல புகழ் அடைய வாழ்த்துக்கள்...,

அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

ஏ.ஆர் ரஹ்மானுக்கு வாழ்த்துகள்.
இளம் இசைபுயல், தமிழன், இந்தியன் என்ற பெருமைகூரிய ஏ.ஆர்.ரஹ்மான்.வாழ்க வாழ்க
வளர்க இசை.
மேலும் ஒர் இந்தியனுக்கு ஆஸ்கார். வாழ்க.

சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார், ரெசுல் பூக்குட்டி! இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

கஜினி, பிளாக், சாவரியா, காந்தி மை ஃபாதர் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு சவுண்ட் டிசைனிங் கலையில் தன்னுடைய்ய பங்களிப்பை அளித்தவர் இவர்.

கேரளாவைச் சேர்ந்த 36 வயது ரெசுல், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி வருபவர்.

இந்திய சவுண்ட் மிக்சிங் கலைஞர் ஒருவர் ஆஸ்கர் விருதைப் பெறுவது இதுவே முதன்முறை.

டாக்குமெண்டரி படத்துக்கும் ஆஸ்கார் கிடைத்துள்ளது.
நம்ம அருசுவை வழியாக வாழ்த்துகள் கூறி எல்லாரையும் வாழ்த்துவோம்.

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம்நாடே!!!
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா!!!

வாழ்த்துக்கள் ரஹ்மான்.உலகின் எல்லா புகழும் உங்கள் முன் நிற்கும் போது தாங்கள் கூறிய வார்த்தை எல்லா புகழும் இறைவனுக்கே.நாங்களும் கூறுகிறோம் எல்லாம் புகழும் வல்ல இறைவனுக்கே.
உண்மையில் உங்களைப் பெற்ற தாய்க்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும்,இந்தியாவும் நன்றியையும்,சாதனையும் வரலாற்றில் பதிவு செய்யும்.

2 ஆஸ்கர் விருது பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது பெருமைக்குரிய விஷயம்.ஆஸ்கர் விருது பெறும் 4வது இந்தியர் இவர்.

மேலும் சில பதிவுகள்