கேபேஜ் வடை(Cabbage)

தேதி: February 22, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - 1 கப்
பொடியாக வெட்டிய முட்டைகோஸ் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 4 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் உளுத்தம் பருப்பினை 2 -3 மணி நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீர் வடித்து வடைக்கு அரைப்பது போல கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியினை பொடியாக வெட்டி வைக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்துள்ள உளுத்தம்மாவுடன் முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான கேபேஜ் வடை ரெடி.


மேலும் சில குறிப்புகள்