உருளைக்கிழங்கு காரகுழம்பு

தேதி: February 22, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 4 இலை
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
முதலில் தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
அரைக்க வேண்டியவை:
தேங்காய் - 1/4 முடி
பூண்டு - 3 பல்


 

முதலில் உருளைக்கிழங்கினை தோல் நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியினை அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
புளியினை 3 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
பிறகு புளி தண்ணீருடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும்.
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெந்தயம் அதன் பின் சோம்பு போடவும்.
பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வதக்கவும்.
பின்னர் இத்துடன் புளி கரைசல் மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வேகவிடவும்.
இப்பொழுது தேங்காய் மற்றும் பூண்டுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வெந்தபிறகு இந்த அரைத்த தேங்காயினை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு காரகுழம்பு ரெடி


இதில் தேங்காயுடன் பூண்டினை கடைசியில் அரைத்து சேர்ப்பதால் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று இந்த குழம்பு வைத்தேன். மிகவும் அருமை. நன்றி.

God is good! All the time!

God is good! All the time!

கீதா காரக்குழம்பு நன்றாக இருந்தது குழம்பு காரம் பீன்ஸ் தேங்காய் பொரியல் காரம் இல்லாததால் சூப்பராக இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹா.
சூப்பர் காம்பினேஷன்…ஆஆஆஆ….
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி நிலா.
ஸாரிப்பா..இப்பொழுது தான் உங்களுடைய பின்னுட்டம் பார்த்தேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா நேற்று மதியம் உங்கள் உருளைக் காரக் குழம்பு செய்தேன், நல்லா வந்துச்சு சுவையும் நல்லா இருந்துச்சு. நான் கலந்த மிளகாய் தூள் சேர்த்து செய்தேன். நன்றி கீதா

ஹரிகாயத்ரி,
மிகவும் நன்றி. எங்கள் வீட்லும் கலந்த மிளகாய் தூள் தான் அம்மா உகயோகிப்பாங்க..ஆனால் இங்கு எனக்கு அப்படி கிடைப்பதில்லை…மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் தனியா தான் கிடைக்கின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு மிகவும் நன்றாகயிருந்தது. பூண்டு அரைத்ததோடு மட்டுமல்லாமல் உரித்த பூண்டு (10 பல்) வெங்காயத்தோடு சேர்த்துத் தாளித்து, வீட்டு சாம்பார்த்தூள் என்பதால் வாசத்திற்காக கொஞ்சம் சேர்த்து செய்தேன், நன்றாக வந்திருந்தது, நன்றிப்பா.

அன்புடன் :-).........
உத்தமி :-)

கீதாச்சல், இக்குழம்பு செய்தேன், தக்காளி சேர்க்கவில்லை, ஆனால் தேங்காய் அரைத்துச் சேர்த்தது, அதிக சுவையாகவே இருந்தது. நான் கறிப்பவுடர்தான் சேர்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நேற்று உருளைக்கிழங்கு காரக்குழம்பு செய்தேன் மிகவும் அருமை தேங்காய் பூண்டு அரைத்து ஊற்றுவதால் சுவை கூடுகிறது. நன்றி கீதா

உங்கள் தோழி
ரூபாகண்ணன்