தேதி: February 22, 2009
பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 2-4
பாஸ்மதி அரிசி - 1 கப்
நெய், எண்ணெய் கலவை - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
குடை மிளகாய்- சிறிது
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோவிற்கு பதில் - சீனி - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து உதிரியாக வடித்து ஒரு தட்டில் பரத்தி ஆர வைக்கவும். முட்டையை உப்பு மிளகு போட்டு அடித்து வைக்கவும். வெங்காயம், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் கட் பண்ணவும்.
கடாயில் எண்ணெய் நெய் கலவை விட்டு வெங்காயம், குடை மிளகாய் வதக்கி, உப்பு, சீனி போட்டு, அதன் மேல் அடித்த முட்டை விட்டு உதிரியாக வருமாறு கிண்டவும். சோயா சாஸ் விடவும். சாதம் கொட்டி கிண்டாமல் குலுக்கி எடுக்கவும். பின்பு ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்.
சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.
Comments
எக் ஃப்ரைட் ரைஸ்
ஆசியா அவர்களுக்கு இந்த ரைஸை செய்தேன். செய்வதற்கு மிகவும் எளிதாகவும் நன்றாகவும் இருந்தது. பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி உங்களுக்கு.
வின்னி,
பின்னூட்டதிற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
அன்பு ஆசியா
இன்று உங்க எக் ஃப்ரைட் ரைஸ் செய்தேன்.நன்றாக வந்தது.செய்வதும் எளிதாக இருந்தது.நன்றி.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா,
எக் ஃப்ரைட் ரைஸ் அருமையாக வந்தது குறித்து மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
திரும்ப திரும்ப.....
என் மகளை மடியில வைத்து டைப் பண்ணினேன்.பதிவு போடும் போது அவ keyboardல விளையாடி திரும்ப திரும்ப போஸ்ட் பண்ணிட்டா.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.