தேதி: February 23, 2009
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வறுத்த கடலை மாவு - 1 கப்
நெய் - 1 கப்
பொடித்த சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
பால் - 1/8 கப்
முதலில் கடலை மாவு மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறி மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்.
பிறகு அதனை வெளியில் எடுத்து அத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடம் வைக்கவும்.
பிறகு அதனை திரும்பவும் வெளியில் எடுத்து பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையினை போட்டு சமபடுத்தவும்.
பிறகு சிறிது நேரம் ஆறியபிறகு துண்டுகளாக வெட்டிவும்.
இப்பொழுது சுவையான மைசூர் பாக் ரெடி.
எளிதில் செய்ய கூடியது.
கடலை மாவினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். இல்லை என்றால் சில சமயம் மாவின் வாசம் வரும். அவரவர் மைக்ரோவேவ் திறன் பொருத்து சமைக்கும் நேரத்தினை கூட்டியோ அல்லது குறைத்தோ செய்யலாம்.
Comments
மைசூர் பாக்கில் ஒரு சந்தேகம்
நான் இன்று மைசூர் பாக் செய்தேன். டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது. ஆனால் பொடிந்து போனது. துண்டு போட வரவேயில்லை. ஆனாலும் மிச்சம் வைக்காமல் காலி பண்ணிட்டோம். நல்ல ஷேப்பில் வர என்ன செய்யணும்? கீதா ஆச்சல் என் சந்தேகத்தை தீருங்க.Pls....
மைசூர்
மைசூர் பாக் ரெம்ப ஈசியா இருக்கு யாரும் வந்தால் கூட உடனே செய்திடலாம் தான்,நல்லா இருந்தது,இனி நானும் அடிக்கடி செய்திடுவேன்,
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
மைசூர் பாக்
மிகவும் நன்றி ரேணுகா.
ஆமாம் சீக்கரம் செய்ய கூடிய ஸ்வீட்.. தீடீர் விருந்தினர் வருகையினை சமாளிக்க முடியும்.
பின்னுடன் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
மைசூர் பாகு
கீதா நலமாக இருக்கிறீர்களா?
மைசூர் பாகு செய்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.செய்வதற்கு மிகவும் இலகுவாக இருக்கிறது.உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
மைசூர் பாக்
அனைவரும் நலம். நீங்க எப்படி இருக்கிங்க…இன்னும் எனக்கு உங்கள் கேக் செய்ய நேரம் வரமட்டேன் என்கின்றது.(எதேவது ஒரு பொருள் இல்லாமல் போய்விடுகின்றது..)
மிகவும் நன்றி வத்சலா மேடம். உங்களுக்கு இந்த மைசூர் பாக் பிடித்து என்பது மிகவும் மகிழ்ச்சி…மிகவும் சுலபமாக செய்ய கூடியது.
அன்புடன்,
கீதா ஆச்சல்
கீதா...
கீதா... மைசூர் பாக் நன்றாக வந்தது. ஆனால் எனக்கு ரொம்ப மிருதுவா வரலை. ஏன்னு தெரியலை. ருசி நல்லா இருந்துச்சு. நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மைசூர் பாக்
மிகவும் நன்றி வனி,
இது மிகவும் மிருதுவாக இருக்காது பா…ஒரிஜின்ல் மைசூர் பாக்(அந்த காலத்தில் உள்ள) மாதிரி தான் இருக்கும்..நீங்கள் கிருஷ்ணா ஸ்வீட் மைசூர் பாக் மாதிரி இருக்கும் என்று நினைத்திங்களா…ஸாரி வனி…(தப்பா நினைக்காதிங்க பா..)
என்ன யாழினி நலமா…
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
மைக்ரோவேவ் மைசூர் பாக்
கீதா ஆச்சல்,
நலமா? நேற்றே உங்கள் மைசூர் பாக் செய்து சாப்பிட்டாயிற்று. இப்போதான் பின்னூட்டம் கொடுக்க முடிந்தது. செய்வதற்கு மிக இலகுவாக இருந்தது. நல்ல சுவையாகவும் இருந்தது.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
மைசூர் பாக்
மிகவும் நன்றி இமா.
நான் நலம்..நீங்கள் நலமா? மிகவும் மகிழ்ச்சி பா…நன்றாக இருந்த்தா…
இதன் செய்முறை படித்தினை அனுப்பி பல நாட்கள் ஆகிவிட்டது ஆனால் ஏனே இன்னும் வெளியிடவில்லை..
அன்புடன்,
கீதா ஆச்சல்
சூப்பரான மைசூர்பாக்!
ஹாய் கீதா ஆச்சல்,
நேற்று உங்கள் மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்தேன். எனக்கு கொஞ்சம் ஹார்டா இருக்கும் மைசூர்பாக்தான் பிடிக்கும், மிருதுவா இருப்பதைவிட! இந்த செய்முறை எனக்கு பிடித்தமான டேஸ்ட்டில் நன்றாக இருந்தது. என்ன ஒன்னு, நான் எதோ சரியா பண்ணவில்லையென்று நினைக்கிறேன். மாவு எல்லாம் வெந்து தட்டில் கொட்டும்போதும் தண்ணி பதமாவே இருந்தது, ஆனால் இன்னும் சில நிமிடம் வைத்து பார்க்கலாமென்றால் மாவு கலர் மாறி கருகி விடும்போல தெரிந்தது. சோ, அதுக்கு ஒரு ட்ரிக் செய்தேன். அப்படியே தட்டில் கொட்டி, அதை எடுத்து ஃபிரிஜில் ஒரு 15, 20 நிமிடம் வைத்து எடுத்து அப்புறம் கட் செய்தேன், சூப்பரான மைசூர்பாக் கிடைத்தது. இன்னொரு முறை நிதானமா செய்துபார்க்கனும். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
மைசூர்பாக்
மிகவும் நன்றி ஸ்ரீ.
கலக்கிறிங்க போங்க…டிப்ஸ் எல்லாம் சூப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்….
அன்புடன்,
கீதா ஆச்சல்
மைசூர் பாக்
கீதா ஆச்சல்,
நானும் ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுக்க எண்ணிப் பிறகு வேறு யாராவது எடுத்திருப்பார்களோ என்று நினைத்துக் கைவிட்டுவிட்டேன். ஆனால் கடைசியாக ஒரு படம் எடுத்துவைத்திருக்கிறேன்.
அனுப்பிவைக்கிறேன்.
உங்கள் படத்துடனான செய்முறையும் விரைவில் வெளிவரும். பொறுமை.. பொறுமை. :-)
- இமா க்றிஸ்
மைசூர் பாக்- இமா
மிகவும் நன்றி இமா.
கண்டிப்பாக போட்டோ அனுப்பி வையுங்கள்..பார்க்க ஆசையாக இருக்கு…
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
அன்புடன்,
கீதா ஆச்சல்
மைசூர் பாக்...,
அன்பு கீதா அச்சல்,
எப்படி இருக்கீங்க? இன்று உங்கள் மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.இது செய்வதற்கு ஈசியா இருக்கு. எனக்கு மைசூர் பாக்ன ரொம்ப பிடிக்கும்.நான் வீகென்டில் எதாவது ஒரு ஸ்ட்வீட் செய்வேன் இந்த வீகென்டில் உங்கள் மைசூர் பாக் செய்தேன்.மிக்க நன்றி அன்பு கீதா.
என்றும் அன்புடன்,
மைதிலி.
Mb
மைக்ரோவேவ் மைசூர் பாக்
மிகவும் நன்றி மைதிலி.
எனக்கும் இந்த மைசூர் பாக் மிகவும் பிடிக்கும்…
எங்க வீட்டிக்கு பக்கத்தில் இருத்தாலவது உங்கள் வீட்டிற்கு வந்து எதவாது ஸ்வீட் சாப்பிட்டி விட்டி செல்ல்லாம்…ஆனால் யாருமே இல்லை!...
அன்புடன்,
கீதா ஆச்சல்
மைக்ரோவேவ் மைசூர் பாக்
கீதா,
ரொம்ப ஈஸியா இருந்தது. உங்க ரெஸிப்பிகளில் அதிக ஒட்டு பெற்றது இதுதான்னு நினைக்கிறேன்.
நான் நெய்யைக் கொஞ்சம் குறைத்ததால், க்ரிஸ்பியாக வந்தது, எனக்குப் பிடித்த மாதிரியே!!.
சர்க்கரை சேர்த்து வைத்தபிறகு ஒரு இடத்தில் மட்டும் கருகி விட்டது. ஏன்னு தெரியலை. அதை உடனே எடுத்துவிட்டேன். அதனால் டேஸ்ட் குறையவில்லை.
எல்லாவற்றையும் விட சந்தோஷம் என் பெரிய மகன் விரும்பி சாப்பிட்டான். அதனால் மீண்டும் செய்வேன் பின்னர்.
மைக்ரோவேவ் மைசூர் பாக்
திருமதி ஹுஸேன்,
மிகவும் நன்றி. மகனிற்கு பிடித்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
Hi Geetha, This Mysore baagu
Hi Geetha,
This Mysore baagu is really very tasty and very much easy to prepare.My husband & friends liked a lot.
Thanks & Regards,
Rajeshwari
Enjoy the life
ராஜேஸ்வரி
மிகவும் நன்றி ராஜேஸ்வரி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
microwave mysorebak
Hi Geetha, i tried that mysorebak. but i added 1 cup sugar instead of 2 cups. i came like payasam, but i kept in fridge then its ok a bit, but it doesn't come like hard mysore bak, but taste is like ghee mysorebak. i added original ghee, can i tell me where i did mistake? its really good, but not comes like cake.
Thanks
Jeya
very nice receipe
Microwave mysorepak
ஜெயா,
நீங்கள் இதில் கொடுத்து இருக்கும் அளவிற்கு செய்தால் நன்றாக வரும் . நீங்கள் சக்கரையின் அளவினை குறைத்து செய்த்தால் தான் இப்படி தண்ணியாக இருக்கின்றது. சக்கரையின் அளவினை கூட்டி செய்து பாருங்கள். கண்டிப்பாக கட்டியான மைசூர்பாக் ரெடி.
இந்த லின்கினை பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/12147
அன்புடன்,
கீதா ஆச்சல்
மைசூர் பாக் ...வெரி delicious..
அன்பு கீதாவுக்கு,
முதல் முறையா...மைசூர்பாக் நன்றாக வந்திருக்குங்க
நான் வேறு சில ஸ்வீட்சை ட்ரை பண்ணியிருக்கிறேன்.(LIKE காய்கறி மூங்தால் அல்வா) ஆனா மைசூர் பாக் இப்போதுதான் உங்கள்
ரெசிப்பியை பார்த்து செய்தேன்...
LITTLE THANKS WITH LOTS OF LOVE..
இதுபோன்று வேறு ரெசிப்பிகள் இருந்தால் போடுங்களேன்....
அன்புடன்
ELU
change is the unchanging thing in the changing world
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
தங்கள்
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி இளவரசி. எப்படி இருக்கின்றங்க. இப்பொழுது கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அருசுவை பக்கம் அவ்வளவாக வரமுடிவதில்லை. கண்டிப்பாக இது போல பல குறிப்புகளை நேரம் கிடைக்கும் பொழுது கொடுக்கதான் ஆசை.
உங்களுடைய குறிப்புகளை யாரும் சமைக்கலாம் பகுதியில் பார்த்தேன்.மிகவும் நன்றாக இருக்கின்றது. அதிலும் எல்லா குறிப்புகளிலும் கடைசியில் குழந்தைகள் சாப்பிடுவது போல போட்டோ சூப்பர்.
வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்