சில்லி பனீர்

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

இந்த சில்லி பனீர் குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. விஜிசத்யா </b> அவர்கள். இவர் அறுசுவை நேயர்களுக்காக நிறைய குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடைமிளகாய் - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
பட்டாணி - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பனீர் துண்டுகள் - ஒரு கப்
இஞ்சி விழுது - கால் தேக்கரண்டி
பூண்டு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
கொத்தமல்லி இலை - சிறிது
<b> அரைக்க: </b>
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
<b> மசாலா: </b>
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பனீரை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் அதில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு வேக விடவும். விருப்பப்பட்டால் பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.
இறுதியில் வறுத்த பனீர் துண்டுகளை போட்டு நன்றாக ஒரு முறை கிளறி மேலும் ஐந்து நிமிடம் வேக விடவும்.
கலவை நன்கு கெட்டியாக வந்தவுடன் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான சில்லி பனீர் ரெடி. இதை நெய் சாதம், பூரி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் விஜி ரொம்ப ஈசியா இருக்கே.

நல்ல குறிப்பு, குடை மிளகாய் வாசனை அதில் நல்ல இருக்கும் இல்லையா?

ஜலீலா

Jaleelakamal

சில்லி பனீர் பார்க்கவே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.என் பையன்னுக்கு பனீர் என்றால் ரொம்ப பிடிக்கும். இதை செய்து பார்த்து சொல்கிறேன்.

மைதிலி.

Mb

சூப்பர் விஜி. பனீர் வாங்கி செய்து பார்க்கனும். ஜலீலக்கா.. பனீரும் குடமிளகாயும் அருமையா இருக்கும்.குடமிளகாய் வாசனை நல்லா இருக்கும்

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றாகவே இருக்கும். கண்டிப்பா செய்துபாருங்க.
எல்லாருக்குமே பிடிக்கும். வெரி சிம்பிள் ரெசிப்பி.
வறுத்த பன்னிர் கூட கிடைக்கிறது. ரொம்ப ரொம்ப சிம்பிள். வெங்காயம் அரைக்கமாலும் செய்யலாம்.
துருவியில் துருவி போட்டும் செய்யலாம்.
டயட்டில் இருப்பவர்கள் பன்னிருக்கு பதிலாக டோஃபுவில் செய்யலாம்.
நல்ல காம்பினேஷம் இலா. எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம்.அடிக்கடி நான் செய்வேன்.
ஜலீ குடமிளகாய் வாசனையோடு நன்றாக ரொட்டிக்கு நல்லா இருக்கும். அவசியம் செய்து பாருங்க.
மைதிலி பாபு நிங்களும் செய்யுங்க குழந்தைகளுக்கு வேண்டுமென்றால் காரத்தை குறைத்து செய்யவும்.
நல்ல டேஸ்டி சைட்டிஸ்.நன்றி............

Really mouth watering recipe, I will give it a go and let u know.

With Love

என்னிடம் குடைமிளகாய் இருக்கிரது நாளை செதுப்பார்த்து செல்கிரேன்.

பன்னீர் பேடாமல் செய்யலாமா....
பன்னீர் எப்படி செய்வது. செல்லுங்கள் please....

டோஃபுவில் என்ரால் என்ன?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் விஜி

பனீர் வறுக்கரதுனா எப்படி?just 2 spoon oil ஊற்றி வ்றுத்தா போதுமா, இல்ல நிரைய oil ஊற்றி fry பண்ணனுமா

2 அல்லது 4 spoon oil ஊற்றி வறுத்தால் போதும், நான் கொஞ்சமா தான் யூஸ் செய்வேன். நிங்களும் செய்து பாருங்க. நன்றி mals .

சூப்பராக வந்தது சில்லி பன்னீர். நான் மறந்தாலும் என் கணக்குல சேர்த்துடுங்க பிளீஸ்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

விஜி இந்த சில்லி பனீர் செய்தேன் ரொம்ப அருமை.

Jaleelakamal

ஆமாம் ரொம்ப சிம்பிள் & ஹெல்தி. நான் அடிக்கடிசெய்வேன்.

ஹாய் உங்க சில்லி பனீர் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது