ரிப்பன் ரோஸ் செய்வது எப்படி?

தேதி: February 23, 2009

5
Average: 4.1 (9 votes)

இந்த அழகிய, எளிதில் செய்யக் கூடிய ரிப்பன் ரோஸை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், திருமதி. ஜீவா மோகன் அவர்கள். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட இவர். உணவுச் சத்துக்கள் குறித்து ஏராளமாக படித்தவர். சமையலில் மட்டுமல்லாது பின்னல் வேலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் இவை அனைத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்.

 

ரிப்பன் லேஸ்
ஸ்டாப்லர்

 

முதலில் ரிப்பன் லேஸ் மற்றும் ஸ்டாப்லரை தயாராக எடுத்துக் கொள்ளவும். ரோஸை அலங்கரிக்க மணி தேவைப்பட்டால் அதையும் எடுத்துக் கொள்ளவும்.
எந்த அளவிற்கு பெரிய அளவில் ரோஸ் வேண்டுமோ அந்த அளவிற்கு ரிப்பன் லேஸை வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சரி சமமாக மடித்து வைத்துக் கொள்ளவும்.
மடித்த இடத்தில் கட்டை விரலை வைத்து பிடித்துக் கொண்டு எதிர் எதிர் திசையில் மடித்து ஒவ்வொரு தடவை மடிக்கும் போதும் கட்டை விரலை மேலே வைத்து பிடித்துக் கொள்ளவும்
இதைப் போல ரிப்பன் முழுவதும் இறுதி வரை மடித்துக் கொள்ளவும்.
ரிப்பன் முழுவதும் மடக்கி முடிந்ததும் ஏதேனும் ஒரு ரிப்பனை வலது கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு முனையை மேல் நோக்கி தள்ளவும்
இப்போது பார்க்க அழகிய ரோஸ் போன்ற ஒரு வடிவம் கிடைக்கும். அதில் மீதம் இருக்கும் ரிப்பனை நறுக்கி விட்டு அவிழ்ந்து விழாதவாறு ஸ்டாபிலரினால் பின் செய்துக் கொள்ளவும்.
ஊசியில் நூலை கோர்த்து ரோஸின் அடிவழியாக ஊசியை விட்டு இழுக்கவும். பிறகு அதை அழுத்தமாக பிடித்துக் கொண்டு ஊசியில் மணியைக் கோர்க்கவும். மீண்டும் ஒரு முறை மேல் வழியாக ஊசியை பூவில் விட்டு அடிவழியாக எடுத்து அடியில் ஒரு முடிச்சு போடவும்.
அழகிய ரிப்பன் ரோஸ் தயார். இதை நாம் விரும்பிய இடங்களில் வைத்து ஒட்டிக் கொள்ளலாம். இதைப் போல வெவ்வேறு நிறங்களில் ரிப்பன் கிடைக்கிறது அதைக் கொண்டும் ரோஸ் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நன்றாக & ரொம்ப எளிமையாகவும் இருக்கு.
செய்வதற்க்கு சிம்பிள். கண்டிப்ப நான் செய்கிறென்.மேலும் ஒவியங்களயும் போடுங்க.

ஜீவா மோகன் எப்படி இருக்கீங்க உங்க ரிப்பன் ரோஸ் ரொம்ப நல்லா இருக்கு பார்க்க,ரொம்ப ஈஸியாவும் இருக்கு.

ஜீவா மோகன் உங்க ஒர்க் ரொம்ப ஈஸியா,எளிமையா இருக்கு.

ஜீவா மோகன் ,ரொம்ப நல்ல இருக்கு சின்ன வயதில் ஸ்கூல் டெகரெஷனுக்காக செய்த ஞாபகம் வருது. சூப்பர்.
செய்முறையும் சுலபம்.

ஜலீலா

Jaleelakamal

can u anyone help me.i want that home based online job.i searched online most of that r scammed.they want to paid some money.once they got money no response. i have 1.6years child so i will do online jobs.

தோழி ஜீவா, உங்களூடைய ரோஸ் செய்து பார்த்தேன்.ரொம்ப அழகாக இருக்கிறது. இனி என் வீடு ரோஜாவால் மலரப்போகிரது.நன்றி.

alhamdhulillah

ஹாய்!ஜீவாமோகன்!
இப்படி எப்படி அழகழகாய்க் கலக்குகின்றீர்கள்.நீங்கள் கற்றதை இப்படி எங்களைப் போன்றோருடன் பகிர்ந்து கொள்ளுவதால் உங்களுக்கும் நன்மை எங்களுக்கும் நன்மை.றோசுடன் நின்று விடாது தையல், பின்னல்,சமையல்,போன்று உங்களுக்குத்தெரிந்தவற்றைப் பகிர்ந்தளிக்கும் வ்ண்ணம் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta