சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 2

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீனி அவரைக்காய் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 10 ( பொடியாக நறுக்கவும்)
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1 கப்
சின்ன வெங்காயம் - 7 (தோலுரித்து வைக்கவும்)
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

சீனி அவரைக்காயை லேசாக வதக்கி குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள் இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அடுத்து வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
வெந்த காயையும் போட்டு வதக்கவும். அதில் அரைத்த மசாலாவையும் சேர்த்து பிரட்டி ஒரு நிமிடம் சுருள வதக்கி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்