தேதி: February 23, 2009
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தயிர் - 2 கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - 1/4 கட்டு
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
கடலை மாவினை சிறிது தயிர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு இந்த கலவையில் அனைத்து தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து பின் சீரகம் சேர்க்கவும்.
அதன் பின் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவு தயிர் கலவையினை இதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் வைத்து சுமார் 20 நிமிடம் வைக்கவும்.
கடைசியில் இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி சேர்த்து மேலும் 5 நிமிடம் வைக்கவும்.
விரும்பினால் கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.
இப்பொழுது சுவையான மோர் குழம்பு ரெடி.
இந்த குழம்பினை என்னுடைய தோழி(ஒரிஸா மாநிலத்தினை சேர்ந்தவர்) வீட்டில் சாப்பிட்டது. மிகவும் சுவையாக இருக்கும்.
Comments
நன்றாக இருத்தது மோர் குழம்பு
நன்றாக இருத்தது மோர் குழம்பு
கீதா,
இன்று உங்களுடைய மோர் குழம்பு கடலை மாவுடன் மிகவும் நல்ல இருந்தது
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
மஹா
மஹா,
மிகவும் நன்றி…எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும்…
அன்புடன்,
கீதா ஆச்சல்
கீதா, மோர் குழம்பு (கடலை மாவுடன்)
கீதா, ஒரு சந்தேகம்.
//தயிர் கலவையினை இதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்//
தயிர் கொதித்தால் திறைந்து (curdling) விடாதா?
லைம் ஜூஸ் சேர்த்தாலும் திறைந்து போகாதா?
மோர் குழம்பு (கடலை மாவுடன்)
நன்றாக அடித்த பிறகு செய்தால் திரிந்து விடாது..அது தான் இந்த குழம்பின் ஸ்பெஷல்.
ஆனால் நன்றாக கடலை மாவு தயிருடன் கலந்து இருக்க வேண்டும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
மோர் குழம்பு (கடலை மாவுடன்)
ஹாய் கீதா ஆச்சல்.
உங்கள் குறிப்பில் இருந்து மோர் குழம்பு (கடலை மாவுடன்) செய்தேன். எனக்கு மோர் குழம்புனா ரொம்ப பிடிக்கும். இது சுவையாக இருந்தது . மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
மைதிலி.
Mb
மோர் குழம்பு (கடலை மாவுடன்)
மிகவும் நன்றி மைதிலி.
எனக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவேன்.
சொன்ன நம்பமாட்டிங்க…நான் pregnantஆக இருந்த பொழுது இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது மோர் குழம்பு செய்துவிடுவேன்..எனக்கு மட்டும்..
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
மோர் குழம்பு
கீதா,
எப்போதும் தேங்காய் சேர்த்துதான் செய்வேன். இது வித்தியாசமாக நன்றாக இருந்தது.
மோர் குழம்பு
திருமதி ஹுஸேன்,
மிகவும் நன்றி. நாங்கள் பெரும்பாலும் தேங்காய் சேர்க்க மாட்டோம்…ஆனால் தேங்காய் சேர்த்தால் நன்றாக தான் இருக்கும்..ஒரு முறை செய்து பார்த்து சொல்கிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
மோர்
மோர் குழம்பு 3 முறை செய்துவிட்டேன்.தேங்காய் இல்லாமலே மிகவும் நன்றாக இருந்தது.Thank you.
Aruna
aruna
மோர் குழம்பு
அருணா,
எப்படி இருக்கிங்க?
மிகவும் நன்றி. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு..3 முறை செய்து விட்டிங்களா.. எங்கள் வீட்டிலும் இந்த மோர் குழம்பு என்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
more kuzambhu with kadalaimazvu to geetha aachal
dear mam i dont know hw to prepare more kuzambhu but thanks to u i learnt from u.
can i also learn hw to prepare morekuzambhu with coconut? pls help
harini
கடலை மாவு மோர் குழம்பு
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. என்னுடைய குறிப்பில் மோர் குழம்பு கொடுத்து இருக்கின்ரேன் என்று நினைக்கிறேன்.
அப்படி இல்லை என்றால் மற்ற தோழிகள் கண்டிப்பாக கொடுத்து இருப்பாங்க. தேடி பாருங்கள் கிடைக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
super recipe
மோர் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது. வடனாடிர் செய்யும் கடி போல் இருந்தட்து சுவையும் அருமை நன்றி
வரும் முன் காபது சிரப்பு