அறுசுவை தோழிகளுடன் பாகம் 2

அங்கே முதல் பாகத்தில் பதிவுகள் 131 வந்துடுச்சு. அங்கேயே மீண்டும் தொடர்ந்தால் படிக்க கஷ்டமா இருக்கும்னு பாகம் 2 ஆரம்பிச்சுட்டேன். எல்லாருக்கும் இங்கே பதில் போட்டிருக்கேன்.

அஸ்மா நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமா தெரியுமா இருக்கு. என்ன நீங்க , உங்களைப் போய் நாங்க கோச்சுக்குவோமா. நீங்க வீடு கட்டி நல்லபடியா கிரஹபிரவேசம் நடத்தினதே மகிழ்ச்சியா இருக்கு. சும்மாவா சொல்லி இருப்பாங்க, கல்யாணம் பண்ணிப் பாரு, வீட்டை கட்டிப்பாருன்னு. இப்ப உங்களுக்கு அதில் பிஎச்டி பண்ண அளவுக்கு அனுபவம் வந்திருக்கும். இப்போ உங்க உடல்நிலை எப்படி இருக்கு? உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் கணக்கு அறிவினைப் பார்க்கும்போது எனக்கு பத்தாவதில் மேத்ஸ் எடுத்த குல்தீப்ஜான் மிஸ்ஸை நினைத்துக் கொள்வேன். மிகவும் எளிமையாக அதே சமயம் தெளிவாக பாடம் நடத்துவார்கள்.ப்ளஸ் டூவில் முதல் முறையா தூக்கம் வரவழைத்த மேத்ஸ் டீச்சர் வந்தப்பதான் அவங்க அருமையெல்லாம் புரிஞ்சுது.

என்னோட பிரெண்ட்ஸ் கூட ஒரே இடத்தில் பேச போன பாகம் ரொம்ப நல்லா இருந்துச்சு. லேட்டா பதில் போட்டா யாரும் கோச்சுக்காதீங்க. ப்ளீஸ். எப்படியாவது பெண்டிங்கில் இருக்கற கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் போடணும்னு பாக்கறேன். வேலை எக்கச்சக்கமா இருக்கு. கண்ணைத் திறந்துக்கிட்டே தூங்க வழி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஆபிசில் பிசியைப் பார்க்கற மாதீரி நேரா உட்கார்ந்துக்கிட்டே தூங்கிடலாம்.ம் . இதெல்லாம் எவனு(ளு))ம் கண்டுபிடிச்சா நோபல் ப்ரைஸ் தரலாம் ( நிச்சயம் வேலைக்குப் போற எல்லாரும் ரெகமெண்ட் பண்ணுவாங்க).

மிஸஸ் ஹுஸைன் இது கூட்டாஞ்சோறு தோழிகள் இப்போது அதிகமாக இடம் பெறுவதில்லை மன்றத்தில் ஆகையால் அவர்க்ளை இங்கு அழைத்து கை குலுக்கி கொண்டு இருக்கிறோம்.

சில பேர் மெயில் பண்ணி கேட்டதற்கு நிறைய புதுசு புதுசா வந்துள்ளார்கள் பழைய ஆட்கள் யாரும் இல்லை அங்கு வந்து யாரிடம் பேசுவது என்கிறார்கள்.
எங்கேயும் சரியாக பதிவை படித்து பதில் போட டைம் இல்லை அதான் முதலில் இங்குள்ளவர்களுக்கு போடுவோம் என்று, நீற்று கூட யரோ எந்த திரெட்டில் என்று தெரியல என்னை கேட்டு இருந்தார்கள் கண்டு பிடிக்க முடியல,

சிகன் 82 , அடுத்து மட்டன் 77 இப்போது புது அறிமுகம்.

நான் பேசுவது ரொம்ப பிடிக்கும் என்றீர்கள் எனக்கு அருசுவையில் உள்ள தோழிகள் அனைவரையும் ரொம்ப பிடிக்கும்.

இன்னும் யார் யார் வரீங்களோ வாங்க பா ஒரு ஹலோ சொல்ல

ஜலீலா

Jaleelakamal

என் மகனுக்கு 2, 3 நாட்களாக தட்டம்மை போட்டுள்ளது. பதிவைப்போட்டுவிட்டு இப்படி பார்க்கக்கூட முடியாமல் இருக்கிறோமே என்று, வந்து பார்த்தால் சந்தோஷம் தாங்கல :) அறுசுவை தோழிகள் என்றாலே ஆறுதல்தான், ஆறுதல் என்றாலே அறுசுவைதான்! என் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு உடனே ஆறுதலாக பதில் சொன்ன எனதன்புத் தோழிகள் மனோகரி, சுகன்யா, Mrs. ஹுஸைன், ஜலீலாக்கா, ஆசியாக்கா, கவி. S, தேவா, மஹா, விஜி, தளிகா, வானதி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இங்கு இப்போது அம்மை சீசன் என்கிறார்கள். 24 - ந் தேதி அன்றுதான் அவனுக்கு அம்மை வந்த முதல் நாள். அவனை கவனித்துக் கொண்டு, இடை இடையே வந்து டைப் பண்ணிதான் அந்த பெரிய பதிவை முடித்தேன். நேற்றிலிருந்து அவனுக்கு செய்யவேண்டிய பணிகள் அதிகமாக இருப்பதால் என்னால் டைப் பண்ணமுடியவில்லை. டாக்டரிடம் காட்டி, ஆன்ட்டி பாக்டீரியன் லோஷன் போட்டு குளிக்க வைத்து, அப்ளை பண்ணவேண்டிய லிக்யூடு எல்லாம் அப்ளை பண்ணி, அம்மைக்கு பொருத்தமான உணவுகள், ஜூஸ்கள், தயிர்... என்று பார்த்து பார்த்து கொடுத்து, தினமும் அவனுடைய துணிகள், பெட்கவர், போர்வை, டவல் உட்பட அனைத்தையும் மாற்றிவிட்டு....என்னை வந்து அணைக்க சொல்கிறான் என்பதால் என்னுடைய ஷ்வெட்டர் உட்பட முழுமையாக நானும் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கொண்டு.... அம்மை மேலும் இன்ஃபக்க்ஷன் ஆகிவிடாமல் ரொம்ப கவனமாக இருப்பதற்காக செய்யவேண்டிய வேலைகளிலேயே நேரம் ஓடுகிறது. சும்மாவே சாப்பாடு அவனுக்கு செலுத்துவதற்கு அவனோடு போராடணும். இப்போ 2 நாளா அவனால் சரியாக சாப்பிடக்கூட முடியல. ரொம்ப பொறுமையான தங்கப்பிள்ளை, கஷ்டப்படுறான். கூடவே ஹோமியோ மருந்துகளை தொடர்ந்து கொடுத்து வருவதால், ஜுரத்தின் வீரியம் குறைந்து, அம்மை கொப்புளங்களும் புதிதாக தோன்றுவது வெகுவாக குறைந்துவிட்டது. என் செல்லம் முழுமையா சரியானவுடன் கண்டிப்பாக வந்து எல்லோருக்கும் தனித்தனியாக பதில் போடுகிறேன். சரியா? அதுவரை எல்லோருக்கும் இப்போதைக்கு ஸாரிபா...!

எப்படியிருக்கிங்க?நீங்கள் நல்லபடியாக வீடு கிரஹப்பிரவேசம் செய்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.நீங்கள் பழையபடி அறுசுவையில் கலந்துக்குங்க.உங்கள் மகனுக்கு இப்போ உடல்நலம் எப்படியிருக்கு?சீக்கிரம் குணமாக பிரார்த்திக்கிறேன்.உங்களைப் பற்றி ரஸியாக்கா சொல்லியிருக்காங்க.உங்களிடம் பேசுவது சந்தோஷமா இருக்கு.உங்க கணக்கு புதிர்களை பார்த்து வியந்திருக்கிறேன்.மகனுக்கு குணமடைந்ததும் பதிவு போடுங்க.

தேவா மேடம் நீங்களும் வெங்கியும் எப்படியிருக்கிங்க?

அன்பு அஸ்மா, பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்வி பட்டு வருத்தமாக உள்ளது. நீங்கள் கவலைப் படாதீர்கள். சீக்கிரம் குணமாகி விடும். குழந்தை உடல் நலம் தேறிய பிறகு பொருமையா வாங்க.

மஹா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு நான் போன பாகத்தில் ஒரு பதிவு போட்டேன். நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். யுவன் எப்படி இருக்கார்? சீனாவில் எந்த வயதில் ப்ரீ ஸ்கூலில் சேர்ப்பாங்க? ரஸியாவிடம் பேசினால் நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்க.

மேனகா, ஷிவானி குட்டி எப்படி இருக்கா? அவளுடனே நேரம் சரியா இருக்கும் இல்ல? குழந்தைக்கு இப்போ எத்தனை மாதம்? இந்த தருணங்கள் எல்லாம் திரும்ப கிடைக்காது. நல்லா எஞ்ஞாய் பண்ணுங்க.

தங்கள் மகனுக்கு என்ன வயது?இதுக்கு எதுக்கு சாரி மேடம்.முதலில் பிள்ளைகள் தான் முக்கியம்.அவரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.அவர் சீக்கிரமே நலமடைய வேண்டுகிறேன்.

ஹாய் வானதி,எப்படிபா இருக்கீங்க?

தேவா எப்படியிருக்கீங்கப்பா, இப்போ உடல் நலம் பரவாயில்லையா? வெங்கா குட்டி எப்படி இருக்கார், இப்ப ப்ரீ ஸ்கூல் போகத் தொடங்கிவிட்டாரா?

என் பேரைச் சொல்லும் போதே அழகாயிருக்குனு சொன்னது ரொம்ப சந்தோசம், கூடவே நன்றி. ஏன்னா, இந்த பெயர் சின்ன வயசில என்னை ரொம்பவே கஷ்டப் படுத்தியிருக்கு. யாரும் பேர் கேட்டால் சொல்ல வெட்க்கப்பட்ட நாட்கள் நிறைய உண்டு, சொன்னவுடன் கேலிக்குள்ளாக வேண்டியிருக்கும். அனால் இப்பொழுது, நீங்கள் எல்லோரும் நன்றாகயிருக்கிறது எனும்போது சந்தோசமாயிருக்கு.

நாங்கள் இங்கு சிட்னியில் இருக்கோம்ப்பா, இங்கு வந்து எட்டு வருஷமாச்சு. என் மகனின் பெயர் பாஸ்கர், 15 வயசாச்சு, இயர் 10 படிக்கிறார்ப்பா. பாஸ்கர் பொண்ணாயிருந்திருந்தா, இன்னும் 6/7 வருஷத்தில் பாட்டியாகீருப்பேன். 40வயதிற்கு இன்னும் ஒரு சில (ஏன்! நாட்கள் என்றும் கூட சொல்லலாம்) மாதங்களே உள்ளது, இனிப் போய் ப்யூட்டி டிப்ஸ் ஆரம்பிப்பதா!!! த்ரெட்டிங் பண்ணுறதே, ஐப்ரோஸ் திக்காகவும், கொஞ்சம் வைடாவும் இருக்கறதாலதான்ப்பா.

என்னோட தமிழ் இயல்பா, நல்லாயிருக்குனு சொன்னதற்கு சந்தோஷம். எனக்கு தமிழ் ரொம்ப விருப்பம்ப்பா, பாஸ்கரும் நல்லா தமிழ் (விகடம் பேசுற அளவிற்கு) பேசுவார். காலச் சூழ்நிலையால் இங்கு வர வேண்டியதாயிடுச்சு ஒருவேளை தமிழ் பேசலைனா, நமக்குப் பின் நம் அடையாளம் தொலைஞ்சிடுமோனு பயத்தால கண்டிப்பாயிருக்கேன்ப்பா. வந்து கொஞ்ச நாளில் (தமிழ்) தடம்மாறப் பார்க்கும் போது, ஒரு வழியா இழுத்து நிறுத்திவிட்டேன்.

உங்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், நீங்கள் இவ்வளவு செய்வதே பெரிய விஷயம். த்ரெட்டிங் பொட்டோ முடியும்பொழுது போட்டால் போதும்ப்பா. நீங்கள் சொன்னதுபோல் நானும் குளிர்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பா, இங்கத்திய வெய்யில் ரொம்பவே கஷ்டமாயிருக்கு. அதிலும் இந்த வருஷம் க்ளைமேட் முரண்பாடாயிருக்குப்பா.

நானும் இரண்டு அக்காக்களுக்கு தங்கைதான். நீங்கள் அக்காவிடம் பட்டபாட்டைச் சொன்னதும் நானும் மலரும் நினைவுகளுக்குச் சென்றுவிட்டேன். ஆனால் என்ன ஒரே வித்தியாசமென்றால், எங்கள் வீட்டில் மாறி நடந்தது. சின்னக்கா கொஞ்சம் மெலிதாகயிருப்பாள், நான் அவளிற்கு முன்பே புடவை கட்டத் தொடங்கிவிட்டேன். பார்ப்பவர்கள் என்னைத்தான் அக்கா என்று சொல்வார்கள். யார், யாரிடம் மாட்டியிருப்பார்களென்று உங்களுக்குப் புரிந்திருக்குமென நினைக்கிறேன். உங்களின் வேலைகளுக்கு இடையில் எனக்கு பதில் போட்டதற்கு நன்றிகள், உங்களோடு பேசியது சந்தோசம். வெங்கா குட்டிக்கு என் விசாரிப்புகளைச் சொல்லவும்.
டேக் கேர்ப்பா. :)

அன்புடன்:-)......
உத்தமி:-)

டியர் தேவா,

எப்படி இருக்கிங்க? வெங்கா நலமா? இப்பவாது கொஞ்சம் (ஸ்கூலில்) சாப்பிட தொடங்கிட்டாரா?! வெங்கா எதாவது ஸ்போர்ட்ஸ் போகிறாரா?! என் பையன் இன்றுமுதல் சாக்கர் போகப்போகிறான். ரொம்ப குஷியா இருக்கான். : )

உங்க பதிவு (பதில்) பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. ரொம்ப ஜாலியா இருந்தது, பாதாம் அல்வா, பேரன் பேத்தி கதையை படிக்க - தேவா எங்கேயொ... போய்டிங்க போங்க. : ) கைக்கு ஆலிவ் ஆயில் போட்டு பார்க்கரேன். ஆனால் இதுபத்தி இப்ப ஒண்ணும் பெரிசா வருத்தம் இல்லை.

என் பிரச்சனையில் பெரும் பிரச்சனை, இந்த கட்டி பிரச்சனைதான். அதுக்கு நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க. நான் எப்போதும் சந்தனம் போடுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால், என் அம்மா எனக்கு பேக் பண்ண (முதல் முறை இங்கே வரும்போது) முதல் அயிட்டமே இந்த ஒரிஜினல் சந்தனகட்டை + இழைக்கற கல்தான்! : ) சோ, நோ ப்ராஃபளம். நெக்ஸ்ட் இந்த பன்னீர் - நான் இந்தியாவிலிருந்து வாங்கிட்டு வந்தது Chetan's brand - இது OK-தானான்னு ஒரு சந்தேகம்!! (ஏன்னா ’Not for Medicinal use' அப்படின்னு அதுல போட்டு இருக்கு - அத இப்பத்தான் பார்த்தேன் தேவா.) மத்தது எல்லாம் கட்டாயம் நீங்க சொன்னபடி செய்யப்போகிறேன்.

நீங்க பதிவில எழுதி இருந்தமாதிரி, கட்டியா, தழும்பா எனக்கா? எப்ப இருந்ததுன்னு (ஐய்ய்ய்..... இப்ப சொல்லி பார்க்கும்போதே ஆசையா இருக்கே...) சொல்ற மாதிரி நடந்துட்டா உங்க வாய்க்கு சர்க்கரைதான் ---இல்லை, பாதாம் ஹல்வாதான் (இல்லையில்ல.., இந்த முறை கை சுட்டுக்கமாட்டேன். கவலை படாதீங்க தேவா!)

அப்புறம் தேவா, நான் நிறைய ப்யூட்டி ப்ராடக்ட்ஸ் வாங்கி வைச்சிட்டு எப்படி ப்ராப்பரா யூஸ் பண்ணறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். : (
யாராவது எதாவது சொன்னா, இல்ல எங்கேயாவது படிச்சா, முக்கியமா ஊருக்கு (இந்தியாவுக்கு) போகும்போதெல்லாம் மத்தவங்க சொல்றதைக்கேட்டு ஒரு டெம்ப்டேஷன் வந்துடும். என்னிடம் இருக்கும் ஐயிட்டம்ஸ்... இதை எப்பப்ப எப்படி யூஸ் பண்ணட்டும்னும் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் தேவா...ப்ளீஸ். (ரொம்ப தொந்தரவு பண்ணரேன்னு நினைக்கிறேன்.) இதுபோல யாரும் இவ்வளவு பொறுமையா, திறமையா பதில் சொல்ல எனக்கு கிடைக்கலை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சொன்னால் போதும். ஒண்ணும் அவசரமில்லை.

Biotique brand
- Quince seed - Facial massage cream,
- love oil and wild turmeric (anti Blemish Face pack)

Himalaya's Herbals
- Fairness cream
- Gentle Face wash cream (normal to dry skin).
- Neem Face pack - For acne prone skin.

Lotus Herbals - COCOFair - fairness cream ( 2 weeks to fairer skin) (இது போட்டா கருப்பா தெரியர தழும்பு எல்லாம் மறையுமே என்று வாங்கினேன்.)
மேலே சொன்னது எல்லாம் இந்தியாவில் இருந்து... : )

இங்க வாங்கியது எல்லாம் Neutrogena brands.
Neutrogena - Oil-free cream cleanser
Neutrogena - liquid facial cleanser (normal to oily skin) (இது இரண்டும் தினம் முகம் கழுவ...)

இதையெல்லாம் விட்டுட்டு இப்ப பயத்தம் மாவுக்கு தாவி இருக்கேன் தினமும் முகம் கழுவ. - உங்க பொடி தயாரிப்பு வேலையும் கூடியசீக்கிரம் இருக்கு! : )

Neutrogena - Power cream wash (oil free - Acne Stress control) (இது புதுசு - இன்னும் உபயோகிக்க தொடங்கவில்லை)
St.Ives Apricot scrub - இது எப்போதாவது வாரம் ஒரு முறை.

மறுபடியும் என் பெரிய்ய்ய்ய பதிவுக்கும், உங்களுக்கு சிரமம் கொடுப்பதற்கும் ஸாரி. உங்களுக்கு முடியும்போது பதில் கொடுங்க.

உங்க அறிமுகம் முன்னமே கிடைத்திருந்தால் இத்தனை பொருட்கள் நிச்சயம் வாங்கி இருக்க மாட்டேன் என்பது மட்டும் உறுதி!.
(அப்புறம் இன்னும் ஒன்று தேவா - என் வாழ்க்கையிலேயே நான் போட்ட பெரிய பதிவு இதுவாகத்தான் இருக்கும். : ))

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தேவா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க பிள்ளைகள் நால்லா இருக்காங்கலா..... அக்கா நீங்க தெலுங்கா.. அப்ப தெலுங்கு எழுத படிக்க முடியுமா எனக்கு செல்லி தரிங்கலா (தெலுங்க படிக்க ஆசையா இருக்கு. நானும் தெலுங்குதான். பேசதான் தெரியும். எழுத படிக்கா தெரியாது அதனால் கேட்டேன்.) அக்கா நீங்க ரொம்ப பிசியா இருக்கிங்க. நால்ல குடும்பதலைவியா , வேளையிலும் கரக்டா செய்து, அறுருவையையும் பார்த்து பதில் அளித்து,... இப்படி உங்கல்லுக்கு பல முகங்கள் இருக்கிரது. (இதே போல் அதிகமானேர் அறுசுவையில் இருக்கின்ரனர். நீங்கள், ஜலீலா அக்கா, ... வேலைக்கு போவேர் அனைவருமே பல அவதாரம் எடுக்கிருர்கள்) உங்கலிடம் பல நால்ல விஷயம் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிரது.

மஹா எப்படி இருக்கிங்க. உங்கலுக்கு 2 வயது மகனா உங்க மகன் பெயர் என்னப்பா.

சுகன்யா , எப்படி இருக்கிங்க. நேத்து என்ன வெச்சு கலாயிச்சுட்டிங்க சாந்தேஷமாப்பா..... உங்க பிள்ளைகள் பெயர்கள் செல்லுங்க விருப்பாம் இருந்தால்

ஜலீலா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க மகன்கள் நால்லா இருக்காங்கலா. உங்கள் மகன் பெயர்கள் செல்லுங்க விருப்பாம் இருந்தால். உங்கல்லுக்கும் உங்கள் மகனுக்கும் ///தேர்வுக்கு ஆல்த மேஸ்ட்////.

அஸ்மா எப்படி இருக்கிங்க. உங்க மகனுக்கு தட்டம்மை இப்ப பரவாயில்லையாப்பா..... உங்கள் செல்லத்திற்க்கு உடல் நிலை சீக்கிரம் சரியாக நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிரேன். கட்டாயம் சரியாகிவிடும். அந்த தழும்புகல்லும் சரியாகிவிடும். அறுசுவை தோழிகளின் வேண்டுதலால் சீக்கிரம் சரியாகிவிடும்.

மேனகா எப்படி இருக்கிங்கப்பா...நான் இப்பதான் உங்ககிட்ட பேசுரேன். ஷிவானி பெயர் நால்லா இருக்குப்பா..... குட்டி பாப்பாவா. அப்ப லைfஎ நல்லா ரசிச்சீ என் ஜ்ய் பன்னுங்க.

வின்னி எப்படி இருக்கிங்க. உங்ககிட்ட நான் பேசி இருக்கேன். நியாபகம் இருக்கா......

உத்தமி அக்கா எப்படி இருக்கிங்க. உங்க மகன் ( பாஸ்க்கர் ) நால்லா இருக்காங்கலா.. . தேர்வுக்கு ஆல்த பேஸ்ட்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா நிறைய இடத்தில் கேட்டு உள்ளீர்கள் என் பெரிய பையன் - அப்துல் ஹகீம், சிறிய பையன் - ஹனீபுதீன்.
சின்ன பையன் போட்டோ அருசுவையில் உள்ளது அது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

சின்ன பையனுக்கு தேர்வு ஆரம்பித்து விட்டது மார்ச் 11 முடியும்,பெரியனுக்கு பிராக்டிகல்ஸ் எல்லாம் முடிந்து விட்டது. மார்ச் 2 ஆரம்பித்து மார்ச் 24 முடியுது.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா (சலாம் அலேக்கும் அலேக்கும் சலாம்) நான் டைப்பன்னது சரியா.
பெயர் நால்லா இருக்கு (யார் வேச்சது ஜலீலா அக்கா family ஆச்சே).
ஹனீபுதீன் படம் இப்பவும் நியாபகம் இருக்கு. அதில் உங்கள் நாத்தனார் பையன் இருந்தான் கரக்டாக்கா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்