அறுசுவை தோழிகளுடன் பாகம் 2

அங்கே முதல் பாகத்தில் பதிவுகள் 131 வந்துடுச்சு. அங்கேயே மீண்டும் தொடர்ந்தால் படிக்க கஷ்டமா இருக்கும்னு பாகம் 2 ஆரம்பிச்சுட்டேன். எல்லாருக்கும் இங்கே பதில் போட்டிருக்கேன்.

அஸ்மா நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமா தெரியுமா இருக்கு. என்ன நீங்க , உங்களைப் போய் நாங்க கோச்சுக்குவோமா. நீங்க வீடு கட்டி நல்லபடியா கிரஹபிரவேசம் நடத்தினதே மகிழ்ச்சியா இருக்கு. சும்மாவா சொல்லி இருப்பாங்க, கல்யாணம் பண்ணிப் பாரு, வீட்டை கட்டிப்பாருன்னு. இப்ப உங்களுக்கு அதில் பிஎச்டி பண்ண அளவுக்கு அனுபவம் வந்திருக்கும். இப்போ உங்க உடல்நிலை எப்படி இருக்கு? உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் கணக்கு அறிவினைப் பார்க்கும்போது எனக்கு பத்தாவதில் மேத்ஸ் எடுத்த குல்தீப்ஜான் மிஸ்ஸை நினைத்துக் கொள்வேன். மிகவும் எளிமையாக அதே சமயம் தெளிவாக பாடம் நடத்துவார்கள்.ப்ளஸ் டூவில் முதல் முறையா தூக்கம் வரவழைத்த மேத்ஸ் டீச்சர் வந்தப்பதான் அவங்க அருமையெல்லாம் புரிஞ்சுது.

என்னோட பிரெண்ட்ஸ் கூட ஒரே இடத்தில் பேச போன பாகம் ரொம்ப நல்லா இருந்துச்சு. லேட்டா பதில் போட்டா யாரும் கோச்சுக்காதீங்க. ப்ளீஸ். எப்படியாவது பெண்டிங்கில் இருக்கற கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் போடணும்னு பாக்கறேன். வேலை எக்கச்சக்கமா இருக்கு. கண்ணைத் திறந்துக்கிட்டே தூங்க வழி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஆபிசில் பிசியைப் பார்க்கற மாதீரி நேரா உட்கார்ந்துக்கிட்டே தூங்கிடலாம்.ம் . இதெல்லாம் எவனு(ளு))ம் கண்டுபிடிச்சா நோபல் ப்ரைஸ் தரலாம் ( நிச்சயம் வேலைக்குப் போற எல்லாரும் ரெகமெண்ட் பண்ணுவாங்க).

எப்படி வயிறு குலுங்க சிரிக்க வச்சுடீங்க. ஆமாக்கா நானும் நீங்க சொன்னத நோட் பண்ணினேன். ஒருசிலரது குறிப்புகள் அப்படிதான் இருக்கு. ஒருசிலர் வந்த குறிப்புக்களை சின்ன சின்ன மாற்றங்கள் செய்து புது குறிப்பாக போட்டுள்ளார்கள். எண்ணிக்கை என்பதை விட சுவை, தரம் இரண்டையும் யோசிக்க வேண்டும். இருக்கும் குறிப்புக்களையே மீண்டும் மீண்டும் கொடுப்பதால் ப்ரோயஜனம் இல்லை. பாபு அண்ணா நல்ல குணமாகி வந்ததும் இதற்கெல்லாம் ஒரு முடிவு எடுப்பார். அதுவரை கவலை கொள்ளாமல் எப்பவும் போல சிரிச்சிட்டு இருங்க. எல்லாம் சரியாகி விடும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு மேனகா!

எப்படியிருக்கீங்க? உங்க பதிவு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மகனுக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை. முதல் நாள் போட்ட அம்மை மட்டும் கொட்டியுள்ளது. சோர்வு நீங்கி பிள்ளை எழுந்து விளையாடுகிறான். அவனுக்கு சின்னதாக ஒன்று செய்தாலும் முதலில் நான் சோர்ந்துவிடுவேன். ஆனால் செய்யவேண்டியவைகளை மட்டும் கரெக்டா செய்துட்டே இருப்பேன். எல்லா தாய்மார்களுக்கும் பிள்ளைக்கு என்றால் தாங்காதுதானே! உங்கள் பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றி மேனகா! ரஸியாவிடம் உங்கள் ஐடி இருந்தால் நான் வாங்கிக்கலாமா?

அன்பு மனோகரி!

பிள்ளைகள், கணவர், டைகர் நலமா? நான் நலமே! மகனுக்குதான் அம்மை போட்டுவிட்டதால் உடனே வந்து பேசமுடியல.அதான் நிலமையை சொல்லிட்டு ஓடிவிட்டேன்.இப்போ பரவாயில்ல. உனது கனிவான விசாரிப்புக்கு நன்றிபா!அம்மை முழுமையா கொட்டுவதற்கு இன்னும் 4, 5 நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். நம் ஃபிரெண்ட்ஸ் அனைவரின் வார்த்தைகளும் ரொம்ப ஆறுதலாக இருந்தது. //அறுசுவை நேயர்களுக்கும் நம் நாட்டு நடப்பிலெல்லாம் அனுபவமுள்ளதால் அவர்களாலும் உன் நிலையை புரிந்துக் கொள்ளமுடியும்// கரெக்டா சொன்னேபா! நல்ல நண்பர்கள் சரியாக புரிந்துக்கொள்வார்கள்தானே? அப்படிப்பட்ட ஃபிரெண்ட்ஸ் கிடைத்ததற்கு ரொம்ப நான் கொடுத்துவைத்திருக்கணும், இல்லையா?

அட்மின் ஃபங்ஷனுக்கு வரலபா! ரொம்ப முக்கியமான வேலையாக சென்னையில் இருப்பதாக சொன்னார். 'முக்கியமான வேலை எப்போதுமே இருக்கதான் செய்யும், பரவாயில்லை கிளம்பி வாங்க'ன்னு சொல்லி பார்த்தோம். முடிந்தால் வந்திருப்பார், அவரால் முடியவில்லை போல. எங்கள் அழைப்பை மதித்து அவருடைய குடும்பத்தினரை அனுப்பி வைத்ததே ரொம்ப சந்தோஷமான விஷயமல்லவா? பாப்பியும் பத்மாவும் பல வருஷங்கள் பழகிய தோழிகளைப்போல் பேசினார்கள். அவங்க அம்மா புன்னகை முகம், தன்மையான பேச்சு!

//மன்னிப்பும் எனது நன்றியையும் கூறிக்கொள்கின்றேன்// இதற்கு போய் மன்னிப்பெல்லாம் எதற்குபா? எனக்கு பதில் போட்டதே சந்தோஷம்! ஓகே, ஓகே, இப்போ மனம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கு :) அப்பப்போ முடியும்போது வர்றேன். பை!

அன்புள்ள சுகன்யா!

நான் நல்லா இருக்கேன். நீங்க நலமா? 'இவ்வளவு விளக்கம் கொடுத்தால் தான் புரிந்து கொள்வோமா'ன்னு கேட்ட உங்க வார்த்தையிலேயே உங்க ஃபிரெண்ட்ஷிப் புரிகிறது. ரொம்ப தேங்ஸ்மா! நீங்க வன்மையா கண்டிச்சுட்டீங்க, இனிமே வராம இருக்க முடியுமா? :) நீங்களும் அப்பப்போ காணாம போயிடுறீங்களே, பிஸியா? உங்க பதிலுக்கு நன்றிமா!மகனுக்கு இந்த மார்ச் 19 தேதி வந்தால் 6 வயது. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றிபா! நிறைய பிள்ளைகளும் இங்கு அம்மையால் கஷ்டப்படுகிறார்கள். எங்க குடும்பத்திலேயே 4 குழந்தைகளுக்கு வந்துவிட்டது. இவ்வளவுக்கும் யாரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவேயில்லை. சீஸன் அப்படி!அடுத்த சந்தர்ப்பத்தில் மீண்டும் பேசுவோம்.

சலாம் மிஸஸ் ஹுஸைன்!

நலமா? உங்க பதிவுக்கு நன்றிமா! உங்க பெயரை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? கணவரின் பெயரிலேயே உலா வருவது அவ்வளவு விருப்பமா? :) (சும்மா ஜோக்!)ஆமாம்பா, அறுசுவையில் ஓரளவுக்கு நான் சீனியர்தான்! சுமார் 3 வருஷமா அறுசுவையின் உறுப்பினர் அந்தஸ்து :) என்னைப்பற்றி சொல்ல பெரிசா ஒண்ணுமில்ல மிஸஸ் ஹுஸைன். சும்மா ஒரு அறிமுகத்திற்காக இதோ சில லிங்க்ஸ்:

http://www.arusuvai.com/tamil/forum/no/5902?from=30&comments_per_page=30

http://www.arusuvai.com/tamil/node/2349

நீங்க இந்தியாவில் எந்த ஊர்? உங்களைப்பற்றியும் நான் தெரிஞ்சுக்கிறேனே, முடியும்போது சொல்லுங்க!

சலாம் ஜலீலாக்கா!

ரொம்ப நாள் கனவா நினைத்திருந்தது நடக்காமல் போனவுடன் ரொம்ப ஃபீலிங்கா ஆயிடுச்சு!நல்லா ப்ளான் பண்ணி செய்யணும் என்று கற்பனையாக இருந்து, பண்ணிய ப்ளானையெல்லாம் செயல்படுத்த முடியாமல் போயிற்று. ஆனால் ஊரில் சொந்தங்கள், சுற்றங்கள் எல்லாம் 'பயணத்திலிருந்து வந்தும் நல்லவிதமாக எல்லாவற்றையும் தனியாக நின்று அரேஞ்ச் பண்ணிவிட்டாய்' என்றுதான் சொன்னார்கள். நான்தான் ஊரிலேயே இப்படி ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டேன். நான் மிஸ் பண்ணியது என்னுடைய ஃபிரெண்ட்ஸையல்லவா? நினைத்ததெல்லாம் நடக்காதுதான் என்றாலும், முன் சொன்ன மாதிரி ஒருவிதமான சங்கடத்தில் இருந்தேன். உங்க அனைவரின் திறந்த உள்ளங்களை கண்டதும் இப்போ சரியாயிடுச்சு :) உங்க டிப்ஸ் பார்த்தேன், நன்றி ஜலீலாக்கா! உடனே பதில் மெயில் பண்ண முடியல, அதான் இங்கேயே நன்றி சொல்லிட்டேன்.

சலாம் ஆசியாக்கா!

நலமா? உங்கள் பதிவு கண்டு ரொம்ப சந்தோஷம்!நானும் உங்களை போல்தான் எல்லோரிடமும் பழக ஆசைப்படுவேன்:) நான் ஊருக்கு செல்லும் முன் தொடர்ந்து இல்லாவிட்டாலும் இடையிடையே பதிவுகள் போட்டுக்கொண்டுதான் இருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஜூன் 2008 ல் தான் இந்தியா புறப்பட்டேன். உங்களுக்கு சொந்த ஊர் எது?உங்களுடைய பிஸி குறைந்த பிறகு பொறுமையாக பதில் போடுங்கள்.

அன்பு கவி(S)!

எப்படியிருக்கீங்க? ஆமாப்பா, இப்போ ரிலாக்ஸ் ஆயிட்டேன். அதெப்படி உங்க பதிவுகளையெல்லாம் பார்த்த பிறகும் ரிலாக்ஸ் கிடைக்காமல் இருக்குமா? :) நீங்க சொன்ன பரிகாரம் ரொம்ப ஈசியாதான் இருக்கு, இதோ கொஞ்சம் கொஞ்சமா பண்ணிட்டு இருக்கேன் :-) உங்க பதிலுக்கு ரொம்ப நன்றிமா! பிறகு பேசுவோம்.

அன்புத்தோழி தேவா!

நல்லா இருக்கீங்களா? பையன் நலமா? இப்போதைக்கு இறைவன் உதவியால் நான் நலமே! //என்ன நீங்க , உங்களைப் போய் நாங்க கோச்சுக்குவோமா. நீங்க வீடு கட்டி நல்லபடியா கிரஹபிரவேசம் நடத்தினதே மகிழ்ச்சியா இருக்கு// உங்க வார்த்தைகளில் மனசு ரொம்ப லேசானது, தேங்ஸ்மா! டாக்டர் மனைவியல்லவா, அதான் இதமா மனசுக்கு மருந்து போட்டுட்டீங்க :-) புதுவீடு குடி போனதில் நீங்க சொன்னது மாதிரி உண்மையிலேயே நிறைய அனுபவங்கள்! இனி நாலு பேருக்கு அது சம்பந்தமான நல்ல ஐடியாஸ் கொடுக்கலாம் அல்லவா? :) எல்லாம் நன்மைக்கே! இங்கு இன்னும் சில நாட்களில் புது வீடு மாறப்போகிறோம். (சொந்தமல்ல, வாடகைதான்). அதற்குள் எல்லோருக்கும் பதில் போட்டுவிடணும் என்று சிறுக சிறுக டைப் பண்ணுகிறேன். அங்கு சென்று எத்தனை நாள் கழித்து மீண்டும் நெட் கனெக்ஷன் கிடைக்கிறது என்று தெரியவில்லை. அதற்கு பிறகு உங்க மேத்ஸ் டீச்சர் குல்தீப்ஜான் மிஸ்ஸை மீண்டும் ஞாபகப்படுத்தலாம் என்றிருக்கிறேன் :) ச்சே..ச்சே...உங்களுக்காக சும்மா சொன்னேன். அப்படியெல்லாம் பெரிய திறமையெல்லாம் கிடையாதுபா! ஓ.கே. மீண்டும் பேசலாம். பை!

அன்பு மஹா!

நலமா? என்ன, உங்க வீட்டில் பால்காய்ச்சும்போது உங்க கணவரே வரலியா? உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி என்று நினைக்கிறேன். நானாக இருந்தால் ஒரு கண்ணுக்கு அழுதே இருப்பேன். நான் ஹாங்காங்தானே வரணும்? டிக்கெட் போட்டெல்லாம் கேட்கமாட்டேன். அப்படியே ஒரு குட்டி ஃப்ளைட்டா அனுப்பிவையுங்க, விஐபிகள் வர்ற மாதிரி எங்க ஃபேமிலி மட்டும் சொகுசா வந்துடுறோம் :) என்னமா, ஊரில் போய் எக்ஸ்ட்ராவா 2 மாதம் தங்கிட்டாலே அக்கம் பக்கம் அசைய முடியாம போயிடுது! இதோ பாருங்க, என் தந்தையின் தங்கை மகள்(மச்சி) வீட்டில் இந்த மாதம் (லண்டனில்) கல்யாணம் வருகிறது. பக்கத்தில் உள்ள லண்டனுக்கு போவதற்கு கூட காசு கையை கடிக்கிறது. பல்லை பிடுங்கினால்தான் சரியா வரும்னு நினைக்கிறேன் :-) ஹாங்காங் பார்க்க ரொம்ப ஆசைதான், இறைவன் நாடினால் எப்படியும் வருவேன் :) உங்க பதிவுக்கு நன்றிமா!

உங்கள் விசாரிப்புக்கு மிக்க நன்றி.எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி.செப்டம்பரில் இருந்து தான் நான் அதிகமாக அறுசுவை பார்த்து பதிவு போட ஆரம்பித்தேன்,அதனால் எனக்கு நிறைய தெரிய வாய்ப்பில்லை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hai anybody is there chat with me

மனோ அக்கா (உங்கல அகான்னு கூப்பிடலாமா, இல்லை ஆண்டி கூப்பிடனுமா தெரியல நான் எப்படி கூப்பிட செல்லுங்கள்க்கா...) நல்லா இருக்கிங்கலா...... உங்க கிட்ட நான் பேசுரது இது முதல் தடவை. ஆனா உங்க பதிவு அதிகம் படிச்சு இருக்கேன். நீங்க அருசுவைக்கு அதிகம் வரலையாக்கா... இல்லா நான் பார்க்கலையா....

மனோகரி அக்கா..... (உங்கல அகான்னு கூப்பிடலாமா, இல்லை ஆண்டி கூப்பிடனுமா தெரியல நான் எப்படி கூப்பிட செல்லுங்கள்க்கா...) நால்லா இருக்கிங்கலா.... நான் உங்ககிட்டா பேசி இருக்கேன். உங்கலுடைய மீன் குழம்பு இன்று செய்தேன். சமடெஸ்ட்டா இருந்ததுக்கா.... உங்கலுடைய டிப்ஸ் சிப்பலீ சூப்பர்.

மஹா நால்லா இருக்கிங்கலா... உங்க அன்பு குட்டி ரொம்ப சுட்டியா இருக்காரா. இல்லை இலை மஹா மாதிரி குட்டியும் ரொம்ப சமத்து. அப்படிதான.

தனிஷ நல்லா இருக்கிங்கலா.. அப்ரா குட்டி என்ன பன்னுது. சுட்டிதனம் பன்ரலா.... தேர்வு நான் தப்பா செல்லிடடேன் சென்னல்லா. ( வானா நான் அழுதுடுவேன்).

ஜலீலா அக்கா நால்லா இருக்கிங்கலா. உங்கலுடைய பிள்ளைகள் நால்லா இருக்காங்கலா. தேர்வு ஈசியா இருக்காகா... உங்கலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிக்கா... உங்க பூண்டு பால் ஜடியா நால்ல பலன் கிடைச்சு இருக்கு அதுக்க்கதான். மிக்க நன்றிக்கா.....

ஆசியா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க பொண்னு, பையன் நால்லா இருக்காங்கலா. உங்கலுடைய டிப்ப்ஸ்சும் நால்லா இருக்குக்கா நன்றிக்கா.

அஸ்மா அக்கா நல்லா இருக்கிங்கலா..... புது வீடு குடிபோனதுக்கு என்னுடையா வாழ்த்துக்காள் அக்கா....

ராஜி எப்படி இருக்கிங்கப்பா. குட்டி என்ன பன்ரார்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

how r u ? now he is sleeping en magan photo shree kitta anupinaaen nega venna avanga kitta vangi parkavum

நாங்கள் அனைவரும் நலம்.நீங்கள் நலமா?அடிக்கடி வந்து பேசுங்க,உங்கள் குழந்தைதனமான பதிவு மிக பிடிக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா நான் நலம்.( உங்கள் குழந்தைதனமான பதிவு மிக பிடிக்கும்)
என்னாக்கா எல்லாரும் அப்படியே செல்லுரிங்க. நான் அப்படியா எழுதுரேன். நான் எப்படி பேசுவனே அப்படித்தான் எழுதுரேன். தப்பா....... இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நான்றிக்கா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்