which cooking oil is best for health?

there r so many oil in the market like corn oil,canola oil,soya bean oil,seseame oil, vegetable oil. which one is good for health? which one contain less colestral?

நல்லெண்ணைய்தான் பெஸ்ட் .நலெண்ணைய் கடலெண்ணைய் இரண்டும் சேர்க்கலாம் கடலெண்ணை விடமின் ஏ அதிகம் கண்கள் அழகாகும்

saturated fat - உடலுக்கு கெடுதல். அது LDL(கெட்ட கொழுப்பு) அதிகமாக்கும்.

Trans Fat - இதுவும் நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகமாக்கும்.

Monounsaturated Fats & Polyunsaturated Fats - உடலுக்கு நல்லது. உடம்பின் மொத்த கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பையும் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.

சமையலுக்கு நல்லதுன்னு சொன்னா...

1. ஆலிவ் ஆயில்
2. கனோலா ஆயில்
3. கடலை எண்ணெய்
4. sunflower எண்ணெய்
5. கார்ன் ஆயில்
6. மஸ்டர்ட் ஆயில்

இதெல்லாம் சொல்லலாம்.

அதிகம் சேர்க்க கூடாத எண்ணெய்:

1. வெஜிடபில் ஆயில்
2. தேங்காய் எண்ணெய்
3. வெண்ணெய்
4. பாமாயில் (Palm oil)

இது மட்டுமில்லை... அதிகமா சூடாக கூடிய தன்மையை வைத்து எந்த எண்ணெய் எதுக்கு உதவும்னு சொல்லலாம்... வறுக்கும் போது அதிகமா புகை வரும் அளவு சூடாகும் எண்ணெய். அதனால் அந்த பயன்பாட்டுக்கு ஏற்ற எண்ணெய் சில:

1. Corn oil
2. Mustard oil
3. Groundnut oil
4. Rice bran oil
5. நல்லெண்ணெய்
6. Soybean oil
7. Sunflower oil

குறைந்த அளவு / மிதமான சூட்டில் வறுக்க சரியான எண்ணெய்:

1. ஆலிவ் ஆயில்
2. கனோலா ஆயில்
3. நெய்

தகவல் உதவுமா??!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தெளிவான தகவல்கள் வனி! எனக்குத் தெரிஞ்சதையும் சொல்லிடறேன். எந்த வகைன்னாலும் தொடர்ந்து ஒரே வகையை பயன் படுத்தாமல் இரண்டு மூன்று எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது. அதாவது தோசைக்கு நல்லெண்ணெய், கூட்டு பொரியல் செய்வதற்கு அல்லது அதிகம் சூடாக்கத் தெவையில்லாத சமையலுக்கு ஆலிவ் எண்ணெய், கனோலா எண்ணெய் வறுக்க பொரிக்க சன்ஃப்ளவர் எண்ணெய் கார்ன் ஆயில் னு சமையலில் பயன்படுத்துவது நல்லதுன்னு மருத்துவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அதிகம்னு அதை ஒரேயடியாக ஒதுக்கக் கூடாது. அதிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கு. மிகச்சிறிய அளவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

எந்த வகை எண்ணெயானாலும் ஒரு முறை சூடாக்கியதை மீண்டும் சூடாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை குறைவான எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்