படித்ததில் பிடித்தது

வாழ்க்கையின் பாடங்கள்

உங்களை எவருடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்
அப்படி செய்தால் உங்களை நீங்களே அவமானப் படுத்துகிறீர்கள்.

அடுத்தவர்களை குற்றஞ் சொல்லாதீர்கள்.
அமைதி வேண்டுமெனில் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில்
உலகத்தை கம்பளம் விரித்து மூடுவதை விட நீங்கள் உங்கள் பாதங்களை பாதணிகளால் மூடுவது சுலபம்.

எவராலுமே கடந்து விட்ட தவறான தொடக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் நிகழ் காலத்தில் சரியான பாதையை தேர்ந்த்தெடுத்து வெற்றியை நோக்கி செல்லலாம்.

அடுத்தவர்களின் தவறுகளை கண்டு பிடிப்பது மிகச் சுலபம். ஆனால் எங்களின் சொந்த தவறுகளை இனங் கண்டுக் கொள்வதுதான் கஷ்டம்.

ஒரு பிரச்சினையை தீர்க்க முடிந்தால் கவலைப்பட தேவையில்லை
ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் கவலைபடுவதால் என்ன புண்ணியம்?

முக மாறுதலால் ஒன்றும் மாறப்போவதில்லை
ஆனால் மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம்

இழப்புக்களை சந்திக்கும் போது தைரியமாக இருங்கள். எதனையும் பெற்றுக் கொள்ளும் போது அமைதியாக இருங்கள்.

சாவியில்லாமல் பூட்டை எவரும் உற்பத்தி செய்வதில்லை. அது போல் தீர்வு இல்லாத பிரச்சினைகளை கடவுள் தருவதும் இல்லை.

ஒவ்வொரு வெற்றியாளனும் வலிகளை சுமந்திருக்கின்றான். சுமக்கும் ஒவ்வொரு வலிகளும் வெற்றியின் எதிரொலிகள். ஆகவே வலிகளை ஏற்றுக் கொண்டு வெற்றியை எதிர் கொள்ள தயாராகுங்கள்.

சூடு பட்ட தங்கம் நகையாகிறது.
அடி பட்ட செம்பு கம்பியாகிறது
சிதைக்கப்பட்ட கல் சிலையாகிறது

ஆகையால் வலிகளை தாங்க தாங்க நீங்கள் பெறுமதி அடைகிறீர்கள்.

தவறுகள் ஒவ்வொன்றும் மிகவும் வலியை தரக்கூடியன. ஆனால் கால ஓட்டத்தில் சேர்ந்த வலிகளின் குவியல் தான் அனுபவமாகின்றன. அந்த அனுபவங்களே வெற்றியின் பாதைகள்.

நீங்கள் கவலையாக இருக்கையில் வாழ்க்கை உங்களை பார்த்து சிரிக்கின்றது.
நீங்கள் சந்தோசத்தில் இருக்கையில் வாழ்க்கை உங்களை பார்த்து புன்னகைக்கின்றது.
ஆனால் நீங்கள் மற்றவர்களை சந்தோசப்படுத்தும் போது வாழ்க்கை உங்களுக்கு சிரம் தாழ்த்துகின்றது.

நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தை தவற விடும் போது உங்கள் கண்களில் கண்ணீரை நிறைக்க வேண்டாம். அது வருகின்ற இன்னொரு சந்தர்ப்பத்தையும் மறைத்து விடும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

லக்‌ஷ்மி ””வாழ்க்கையின் பாடங்கள்”” ரொம்ப நல்ல தகவல்,

எல்லொருக்கும் அவசியமான விசயங்கள் இதில் இருக்கு,

ஷேர் பன்னியதுக்கு தேங்க்ஸ் பா .

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

லக்ஷ்மி,
உங்கள் கருத்துக்கள், எழுத்துக்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன. உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் நிச்சயம் பேணப்பட வேண்டியது.

"தீர்வு இல்லாத பிரச்சினைகளை கடவுள் தருவதும் இல்லை." - நான் எப்போதும் நினைவில் கொள்வது.

நன்றி, பகிர்ந்து கொண்டமைக்கு.

ரொம்ப நல்ல விஷயம், எல்லாரும் தெரிஞ்க வேண்ட்ய தகவல்.

ArchuGiri

Archana

மிக்க நன்றி தோழிகளே! உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ்ச்சி படுத்துவதோடு மட்டுமல்ல இன்னும் இன்னும் பல தகவல்களை திரட்ட தூண்டுகின்றன. ஆங்கிலத்தில் இருந்ததை முடிந்தவரை மொழி பெயர்த்திருக்கிறேன். தமிழில் வாசிக்கும் போது என்ன இனிமையாக இருக்கின்றது பாருங்கள்!

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எல்லோருக்கும் வணக்கம். ரொம்ப யோசிக்க வைத்த ஒரு விஷயத்தை எல்லோரிடமும் பங்குகொள்ள தோன்றி வந்தேன்.

"உலக வாழ்க்கை மிக போதையான விஷயம். அங்கு வெற்றி என்பது மிகப்பெரிய போதையான விஷயம். பணம் என்பது சந்தோஷம், சுகம் என்று மனம் எண்ணுகிறது. எல்லா சௌகரியங்களும் பணத்தால் வாங்கலாம் என்று எண்ணம் வருகிறது. புகழ் என்பது குதூகலம் என்று தோன்றுகிறது.
அடுத்தவர் புகழைப் பார்த்து தனக்கும் அது வேண்டும் எனத் தோன்றுகிறது. அடுத்தவர் வெற்றியைப் பார்த்து தானும் வெற்றி பெறவேண்டுமே என்று தோன்றுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றியே துக்கமாக இருக்கலாம், பணம் உள்ளவனுக்கு அந்த பணத்தை பாதுகாப்பது மிகப்பெரிய வேதனையாகலாம், புகழ் உள்ளவனுக்கு அந்தப் புகழே வளரமுடியாத விலங்காகலாம் என்பது இவை இல்லாதவனுக்கு தெரியவில்லை.
தன்னைப் பிறர் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே மனிதனின் இயல்பாகப் போகிறது. இந்த இயல்பே பொறாமை ஆவேசத்தைக் கொடுக்கிறது. இந்த ஆவேசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பினை தேடத்துவங்குகிறது. இந்தத் தேடலில் தடைகளும், அவமானங்களும் வர சோர்ந்து போய் முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பிக்கிறது. இந்த அழுகையில் வெற்றி பெற்றவர் மீது இழித்தலும், பழித்தலும் பேசப்படுகின்றன. இதனால் துக்கம் பெரிதாகி துக்கம் தந்த தொய்வினால் வெற்றியை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடிவதில்லை.
ஒப்பிடுவதை விட்டுவிட்டு, இன்னொருவரின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு தனக்கு என்ன வேண்டும் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் போதும். தனக்கு இது வேண்டும் என்று மனம் சொல்ல ஏன் என்ற கேள்வியும் உடன் வரும். அந்த கேள்விக்கு இதனால் இது வேண்டும் என்ற பதிலும் வரும். இந்த பதிலுக்குப் பிறகு, தான் அது பெற தகுதியா என்ற கேள்வியும் வரும். உண்மையாகக் கேட்டுக் கொண்டால் என்னென்ன தகுதிகள் இல்லை என்பது தெரியவரும். என்ன தகுதி இல்லையென்று தெரிந்துவிட்டால் அதை உருவாக்கிக் கொள்ளும் எண்ணம் வரும். அந்த எண்ணம் திடப்பட்டால் தன்னை தகுதியாக்கிக்கொள்ளும் உழைப்பு வரும். உழைப்பு கடுமையானால் ஒருநாள் வெற்றி வந்தே ஆகவேண்டும். அதுவரும்வரை நெல்முனையயளவு கூட சோர்வில்லாமல் உழைக்கும் எண்ணம் வரும்.
உழைக்க உழைக்க உழைப்பின் சந்தோஷம் பிடிபட்டுவிடும். அந்தநேரம் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் வெற்றியை விட தொடர்ந்து உழைப்பிலேயே மனம் லயிக்க வெற்றி, புகழ், பணம் முக்கியமாய் தோன்றாது. அவை இயல்பாய் சதாரணமாய் போகும்.
அப்போது உழைக்காதவர்கள் கொண்டாடுவார்கள். பொறாமைப் படுவார்கள். உழைப்பவனுக்கு தொடர்ந்து உழைப்பிலேயே மனம் லயிக்கும். அப்படி லயிக்க எது வெற்றி, எது புகழ், எது பணம் எனக் கேள்விகள் வரும். இவை எதுவும் வெற்றியில்லை என்பது தெளிவாகும். இவை எதிலும் நிறவில்லை எனத் தெரியும். அந்த இடமே ஞானம். அதுவே தெளிவு."

“எட்ட நின்று சுட்ட நிலா” –வில் பாலகுமாரன்.

ஹாய் தோழிஸ் லக்ஷ்மி

http://www.arusuvai.com/tamil/forum/no/13371?from=50&comments_per_page=10

நீங்கள் போட்டா இந்த பதிவு இதில் மாற்றி உள்ளேன்.... தவரை மன்னிக்கவும்......

எனக்கு இது மிகவும் பிடித்து இருகிரரது......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வணக்கம் லஷ்மி,
நீங்கள் இந்த பதிவில் கூறியிருப்பது மிகவும் அருமைப்பா......
அனைத்தும் வாழ்க்கைக்கு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது.வாழ்த்துக்கள் லஷ்மி.
(பரவாயிலையே ஸ்ருதி உங்களுக்கு இந்த பதிவு போட டைம் குடுத்துருக்காங்களே......)பாராட்டுக்கள்ப்பா
அன்புடன்
கலா

Kalai

கலா

அந்த லக்ஷ்மி வேற. நான் அவர்கள் இல்லை

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

வணக்கம் லஷ்மி,
நீங்கள் இந்த பதிவில் கூறியிருப்பது மிகவும் அருமைப்பா......
அனைத்தும் வாழ்க்கைக்கு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது.வாழ்த்துக்கள் லஷ்மி.
பாராட்டுக்கள்ப்பா.(மன்னிக்கவும் லஷ்மி, அந்த பதிவை மாற்றமுடியவில்லை,அதனால் தான் இது. தவறாக நினைக்க வேண்டாம்)
அன்புடன்
கலா

Kalai

லக்ஷ்மி

வாழ்க்கை பாடங்கள் மிக அருமையான கருத்துக்களை கொடுத்திருக்கிறீர்கள் மிக்க
நன்றி

hy king(happy king)

நீங்களும் மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்