படித்ததில் பிடித்தது

வாழ்க்கையின் பாடங்கள்

உங்களை எவருடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்
அப்படி செய்தால் உங்களை நீங்களே அவமானப் படுத்துகிறீர்கள்.

அடுத்தவர்களை குற்றஞ் சொல்லாதீர்கள்.
அமைதி வேண்டுமெனில் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில்
உலகத்தை கம்பளம் விரித்து மூடுவதை விட நீங்கள் உங்கள் பாதங்களை பாதணிகளால் மூடுவது சுலபம்.

எவராலுமே கடந்து விட்ட தவறான தொடக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் நிகழ் காலத்தில் சரியான பாதையை தேர்ந்த்தெடுத்து வெற்றியை நோக்கி செல்லலாம்.

அடுத்தவர்களின் தவறுகளை கண்டு பிடிப்பது மிகச் சுலபம். ஆனால் எங்களின் சொந்த தவறுகளை இனங் கண்டுக் கொள்வதுதான் கஷ்டம்.

ஒரு பிரச்சினையை தீர்க்க முடிந்தால் கவலைப்பட தேவையில்லை
ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் கவலைபடுவதால் என்ன புண்ணியம்?

முக மாறுதலால் ஒன்றும் மாறப்போவதில்லை
ஆனால் மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம்

இழப்புக்களை சந்திக்கும் போது தைரியமாக இருங்கள். எதனையும் பெற்றுக் கொள்ளும் போது அமைதியாக இருங்கள்.

சாவியில்லாமல் பூட்டை எவரும் உற்பத்தி செய்வதில்லை. அது போல் தீர்வு இல்லாத பிரச்சினைகளை கடவுள் தருவதும் இல்லை.

ஒவ்வொரு வெற்றியாளனும் வலிகளை சுமந்திருக்கின்றான். சுமக்கும் ஒவ்வொரு வலிகளும் வெற்றியின் எதிரொலிகள். ஆகவே வலிகளை ஏற்றுக் கொண்டு வெற்றியை எதிர் கொள்ள தயாராகுங்கள்.

சூடு பட்ட தங்கம் நகையாகிறது.
அடி பட்ட செம்பு கம்பியாகிறது
சிதைக்கப்பட்ட கல் சிலையாகிறது

ஆகையால் வலிகளை தாங்க தாங்க நீங்கள் பெறுமதி அடைகிறீர்கள்.

தவறுகள் ஒவ்வொன்றும் மிகவும் வலியை தரக்கூடியன. ஆனால் கால ஓட்டத்தில் சேர்ந்த வலிகளின் குவியல் தான் அனுபவமாகின்றன. அந்த அனுபவங்களே வெற்றியின் பாதைகள்.

நீங்கள் கவலையாக இருக்கையில் வாழ்க்கை உங்களை பார்த்து சிரிக்கின்றது.
நீங்கள் சந்தோசத்தில் இருக்கையில் வாழ்க்கை உங்களை பார்த்து புன்னகைக்கின்றது.
ஆனால் நீங்கள் மற்றவர்களை சந்தோசப்படுத்தும் போது வாழ்க்கை உங்களுக்கு சிரம் தாழ்த்துகின்றது.

நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தை தவற விடும் போது உங்கள் கண்களில் கண்ணீரை நிறைக்க வேண்டாம். அது வருகின்ற இன்னொரு சந்தர்ப்பத்தையும் மறைத்து விடும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

பகை விரோதங்களை எழுப்பும் ; அன்போ சகல பாவங்களையும் மூடும்(நீதிமொழிகள் 10:12)

FROZEN THOUGHTS என்ற புத்தகம் இப்போது என் உயிர் தோழிகளில் ஒன்று என்று கூட சொல்லலாம். மாதம் ஒரு முறை வெளிவரும் இந்த புத்தகம், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலை தன்னுள் அடக்கிவைத்துள்ளது. ஒரு அருமையான புத்தகம், தோழிகள் நேரம் கிடைத்தால் அதை வாங்கி படித்துப்பாருங்கள்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் போஸ்ட் மேன் வந்தாலே என் கண்கள் அந்த புத்தகத்தை தான் தேடும்.

தோழிகளில் யாரவது அதை படித்திருந்தால் அவர்களும் தங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்புடன்
பவித்ரா

வைரமுத்துவின் இந்த கவிதை என்னை ரொம்பவும் கட்டிபோட்டது..புத்தகம் பெயர் நினைவில் இல்லை

மனிதா!
உன் விஞ்சானம் விண்வெளிக்குப் போகப்போக
உனது மனிதாபிமானம் மண்குழிக்குப் போகிறதே!
அது ஏனென்பேன்.

விலங்கிலிருந்து மனிதன் பிறந்தது பரிணாமமென்றால்
இன்று மனிதனிலிருந்து விலங்கு பிறக்கிறதே!
இதற்கு என்ன பெயெரென்பேன்.
உனக்குத் தொட்டில் கட்டிய இயற்கைக்கு
நீ ஏன் கல்லறை கட்ட ஆசை படுகிறாய் என்பேன்.

தங்கள் பொத்தான்களைக் கூடத்
தாங்களே போட்டுக் கொள்ளாத வர்க்கமும்
தங்களின் சவ ஊர்வல செலவுக்குக்கூடத்
தாங்களே சம்பாதித்துக்குக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கமும்
இனிமேலும் இந்த மண்ணில் இருக்க வேண்டுமா என்பேன்

வாழ்க்கை என்பது உறக்கத்திற்கும் மரணத்திற்கும்
மத்தியில் கண்டு வரும் கனவல்ல;
வாழச் சொல்லித்தருகிறேன் வா மனிதா என்பேன்

இதை படித்துப் பார்த்த அனைவரும் மனதிற்குள் ஒருமுறை கைதட்டிகொள்ளுங்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் நான் கைதட்டிக் கொண்டேன்.

/////உன் விஞ்சானம் விண்வெளிக்குப் போகப்போக
உனது மனிதாபிமானம் மண்குழிக்குப் போகிறதே!/////

/////விலங்கிலிருந்து மனிதன் பிறந்தது பரிணாமமென்றால்
இன்று மனிதனிலிருந்து விலங்கு பிறக்கிறதே!/////

ஷேக் உண்மையிலேயே என்ன ஒரு உணர்வு பூர்வமான, உணர்ச்சி பூர்வமான வரிகள். வைரமுத்து வைரமுத்து தான் எந்த புத்தகம் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ஷேக். இதில் உள்ள மற்ற கவிதை வரிகளையும் படிக்க ஆசை.

மேலும் சில பதிவுகள்