ஐஸிங் கேக்

தேதி: February 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கேக்
மாஜரீன் - ஒன்று
ஐஸிங் சுகர் - ஒரு கிலோ
மார்சிப்பன் (marzipan)
ஐஸிங் செய்யும் அச்சு
நிறங்கள் (சமையலுக்குப் பயன்படுத்துவது)


 

ஐஸிங் சுகரை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைக்கவும்.
மார்சிப்பன்னை அழுத்தி விரும்பிய உருவத்தை அதில் வரைந்துக் கொண்டு வெட்டவும்.
அதில் விரும்பிய நிறத்தை முழுவதுமாக பூசி விடவும்.
கேக்கின் மேல் பகுதியிலும் அதன் சுற்றிலும் மாஜரீனை பூசவும்.
ஒரு பாத்திரத்தில் ஐஸிங்சுகர், தேவையான அளவு மாஜரீன், விரும்பிய நிறத்தை சேர்த்து அடிக்கவும். கலவை இறுக்கமாக இல்லாமல் ஓரளவிற்கு தளர்வாக இருக்க வேண்டும்.
அடித்து வைத்திருக்கும் கலவையை கேக்கின் மேல் பூசவும்.
பின்னர் சூடான தண்ணீரில் கத்தியை தோய்த்துக் கொண்டு கேக்கை சமப்படுத்தி விடவும்.
மீண்டும் தேவையான அளவு ஐஸிங்சுகர், தேவையான அளவு மாஜரீன், விரும்பிய நிறத்தை சேர்த்து அடிக்கவும். இது பிழியக்கூடிய பதமாக இருக்க வேண்டும். ஐஸிங் செய்யும் குழாயில் கலவையைத் திணித்து படத்தில் உள்ளது போல் பக்கங்களுக்கு ஐஸிங் போடவும்.
மார்சிப்பன்னில் வெட்டி வைத்திருக்கும் உருவத்தை எடுத்து கேக்கின் மீது வைக்கவும். பின்பு அதில் ஐஸிங் போடவும். (மார்சிப்பன் கிடைக்காவிட்டால் பேப்பரில் விரும்பிய உருவத்தை வரைந்து வெட்டலாம் அல்லது கேக்கின் மீது ஒரு குச்சியால் உருவத்தை வரைந்து ஐஸிங் போடலாம்.)
மீண்டும் வேறு நிறத்தை சேர்த்து கலந்துக் கொண்டு கேக்கின் விளிம்பிற்கு ஐஸிங் போடவும்.
விரும்பிய பெயர்கள், வாழ்த்துக்களை எழுதிக் கொள்ளலாம். பூக்கள் அல்லது இனிப்புக்கள் இருந்தால் உங்கள் ரசனைக்கு ஏற்ப தேவையான இடங்களில் வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.
இதைப் போல் வெவ்வேறு வடிவங்களிலும் ஐஸிங் கேக் செய்துக் கொள்ளலாம். அறுசுவை நேயர்களுக்காக இந்த ஐஸிங் கேக்கை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அடடே சூப்பரா இருக்கே..கைவினைபொருட்கள் பகுதில் வரவேண்டியது தவறி போட்டுவிட்டறோ என்று பார்த்தால் கேக்..சூப்பர்

பேக்கரியில் ஆர்டர் பண்ணி வாங்கிய மாதிரி அழகாக ,நேர்த்தியாக இருக்கு.உங்க baking professionalism - இது மூலம் நன்கு தெரிகிறது.பாராட்டுக்கள்.நான் ட்ரை பண்ணினாக்கூட இவ்வளவு அழகாக பண்ணமுடியுமான்னு சந்தேகம் தான்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இரண்டு கேக்குகளுமே வெகு அழகாக இருக்கின்றன வத்சலா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஐ.......ஐஸிங் கேக்...தளிகா நினைச்சமாதிரிதான் நானும் கைவினை பகுதில போடரது இதுல இருக்குனு பார்த்தேன்.சூப்பரா இருக்குங்க ஐசிங் கேக்.பட்டாம்பூச்சி டிசைனும் நல்லா இருக்கு:)o:-)

சா…சன்ஸே இல்லை..மிகவும் சூப்பராக்க்க்க்க்க்காக இருக்கு..நானும் ஒரு முறை Happy Birthday என்று கேக்கில் எழுத Try செய்து சுத்தமாக நன்றாக வரவில்லை. அதன் பின் அதன் மேலே மேலும் சிறிது ஐஸிங்கு தடவிட்டுடேன்.
இந்த கேக்கினை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.. உங்கள் கைவண்ணம் மிகவும் அருமை.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இரண்டு கேக்குகளுமே ரொம்ப அழகாக இருக்கு வத்சலா

கேக் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கு அதனால் சுவையும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். (எனக்கு கேக் நல்ல சாப்பிடதான் தெரியும்) ஒரு டிரயலுக்கு கூட செய்து பார்த்தது இல்லை. தற்போது செய்துப்பார்க்கலாமா என்று எண்ணத்தோன்றுகிறது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

கருத்துக்கள் வழங்கிய தளிகா,ஆசியா,இமா,தனு,கீதா,
மேனகா, மஹா மிக்க நன்றி.
ஆசியா, கீதா,மஹா,முயற்சி செய்து பாருங்கள் நன்றாக வரும்.கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

i am new to chennai, please give some big departmental shop address. i am living in broadway.