குழந்தை வாயில் இருந்து துற்நாற்றம்….Help..

எல்லோரும் கொஞ்சம் வந்து உதவி செய்யுங்க…Please..
என்னுடைய பொண்ணுக்கு போன வாரம் ஜுரம் மற்றும் சளி இருந்த்து. இந்த வாரம் தான் பரவாயில்லை. ஆனால் இரண்டு நாளாக வாயில் இருந்து துற்நாற்றம் அடிக்கின்றது. நேற்று மிகவும் மேசமாக இருந்த்து. இப்பொழுது கொஞ்சம் குறைந்து இருக்கின்றது. என்ன செய்ய வேண்டும்.
இப்பொழுது அவளுக்கு 23 மாதம் ஆகின்றது.
எதனால் இப்படி என்று சொல்லவும். அவளை இன்று பார்த்து கொண்டு நாளை டாக்டரிடன் கூப்பிட்டு கொண்டு போகலாம் என்று இருக்கின்றேன்.(டாக்டரிடன் அப்பாய்மெண்ட் கிடைத்தால் நல்லது இல்லை என்றால் என்ன செய்ய?)
முதல் முறையாக இப்படி ஆகின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா,

சளி இருப்பதால் குழந்தை வாயால் மூச்சு விடும். அதனால் துர்நாற்றம் இருக்கலாம். சளி இன்னும் இருப்பதாலும் இருக்கலாம். மேலும் மருந்துகள் கொடுத்திருப்பீர்கள். அதனால் வயிறு கோளாறு இருந்தாலும் துர்நாற்றம் இருக்கலாம்.

மிகவும் நன்றி Mrs.Hussain.
என்ன என்றே தெரியவில்லை. ஆனால் அவளுக்கு இப்பொழுது சளி இல்லை.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா

உங்கள் குழந்தைக்கு ஜுரம் மற்றும் சளி இருப்பதால் கூட அப்படி இருக்கும்.குழந்தைக்கு நாவில் வெள்ளை அதாவது மாவு மாதிரி இருக்கிறத..
அப்படி இருந்தால் கூட வாயில் துற்நாற்றம் இருக்கும்.ஏன் என்றால் ஜுரம் மற்றும் சளிக்கு மருந்து சாப்பிடுவதால் அப்படி இருக்கும்.நீங்கள் ஒரு ட்ர்ய் துணியால் நாவில் மாவு (இருந்தால் ) மெதுவாக துடைத்து எடுங்கள்.இல்லை என்றால் நீங்கள் டாக்டரிடம் காட்டுவது நல்லது.

Mb

கீதா, வாயில் துர்நாற்றம் வருவதற்கு காரணம் உங்க குழந்தையின் வாயில், நாக்கில் சேர்ந்த் உணவுகளால் கூட இருக்கலாம். நம் நாக்கில் நிறைய பாக்டீரியாக்கள் குடும்பம், குடும்பமாக குடியிருக்கும். இரவு படுக்க முன்பு floss பண்ணி, நாவை சுத்தம் செய்து விடுங்கள். முதலில் கொஞ்சம் அழுவார்கள், ஏதாவது கதை சொல்லி மெதுவாக, பொறுமையாக செய்தால் பழகிவிடுவார்கள். காய்ச்சல், சளி வந்தாலும் வாய் மணம் வருவது normal.
vany

மைதிலி,
மிகவும் நன்றி பா…நான் கூட பாப்பாவிற்கு நீங்கள் கூறியது போல தான் செய்வேன்.
வாணி ,
மிகவும் நன்றி.
எனக்காக பதில் தந்த்தற்கு மிகவும் நன்றி.
இன்று குழந்தையை டாக்டரிடம் கூட்டி சென்றோம். அவர் இது Viral Infection என்று கூறிவிட்டார். அதனால் பயப்பட வேண்டாம். அதுவே தானாக இன்னும் 2 – 3 நாட்களில் சரி ஆகிவிடும் என்றும் சொன்னார்.
இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கு..
அன்புடன்,
கீதா ஆச்சல்

மேலும் சில பதிவுகள்