அட்மினுக்கு கொஞ்சம் முதுகுவலி

எல்லாரும் நம்ம அட்மினுக்காக சீக்கிரமே நல்லபடியாக குணமடைந்து நம்முடன்
பங்கு கொள்ளவேண்டி ப்ரார்த்திப்போம்.இப்போது மாத்திரையா நானா என்று போட்டி
போட்டு கொண்டு இருக்கிறார் நம்ம அட்மின். நாம் எல்லோரும் சேர்ந்து அட்மினை
இந்த மாத்திரையோடு நிறய்ய நாட்கள் போட்டி வேண்டாம் என்று எல்லாம் சரியாகி
நல்லபடியா விரைவில் பூரன குணமடைய வேண்டுகிறேன்.நாம் எல்லோரம் சேர்ந்து
போராடுவோம்.
அட்மின் நல்ல படியா ரெஸ்ட் எடுங்க முதலில் நம் உடல்நிலை பின் தான் எல்லாம்.
அதனால் நல்ல ரெஸ்ட் எடுத்து நல்ல குணமாகி வாங்க அவசரமே இல்லை.
நாங்க எல்லாம் இங்கு தான் எப்பவுமே இருப்போம். காட் ப்ள்ஸ் யூ.
பாப்பி அவங்களையும் கேட்டதாக சொல்லவும்.

நிங்க தான் அட்மினை கண்டித்து வைக்க வேண்டும்.
கம்யூட்டரில் தொடர்ந்து உட்கார விட வேண்டாம்.
அதனால் தான் கூட முதுகுவலி வரலாம்.எதற்க்கும் நிங்கள் கொஞ்சம் கண்டித்து வைக்க்வும்.

பாபு அண்ணா உங்க உடல்நலத்தை பாதுகாக்கவும்.நல்லா ரெஸ்ட் எடுங்க.சீக்கிரம் குணமடைய பிராத்திகிறேன்.விஜி சொல்ற மாதிரி அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்காதீங்க

பாபு ஒன்றும் கவலை பட வேண்டாம் கம்பியுட்டரில் அதிக நேரம் உட்காருபவர்கலுக்கு வரும் பிராப்ளம் தான் சீக்கிரம் சரியாகிடும்,
மற்ற படி பாப்பி பாபுவிற்கு நான் அனுப்பிய (இந்த முதுகுவலிக்கு.

டிப்ஸ்)மெயில் பாருங்கள். சேரி உட்காரும் போது பின்னாடி தலையனை வைத்து கொள்ளவேண்டும்.

ஜலீலா

Jaleelakamal

அடடா இந்தக் கதை அமெரிக்கா வரைக்கும் போயிட்டுதா?

சீக்கிரமே நலம் பெற வேண்டுகிறேன். பாப்பி நீங்கள் நலம்தானே?

முதுகுவலி வந்தமைக்கு காரணம் இருக்கு:),அதை இப்போ சொல்லமாட்டேன்.

(அடுத்த குறிப்பு யாருடையது செய்யப்போகிறோம் என்பதை அறிவிக்க வந்தேன், இத் தலைப்பு கண்ணில் பட்டது. எனக்கு சரியான தலையிடி, அதனால் பின்னர் வருவேன். )
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்ப எப்படி இருக்கீங்க?புது தள மேம்பாட்டிற்காக நேரத்தை செலவழித்து தங்களை வருத்தி கொண்டீர்களா.சீக்கிரமே தங்களுக்கு உடம்பு சரியாகி விடும்.பாப்பி பத்திரமா பார்த்துக்குங்க!!

அட்மின் அண்ணா உங்கலுக்கு எப்பையும் அடிக்கடி முதுகு வலி(BACK PAIN ) எனில் ரெஸ்ட்டு எடுத்தால் செரியாபோயிடும். ஜலீலா அக்கா செல்வது போல் கம்யீட்டரியில் அதிக நேரம் இருந்தால் முதுக்கு தலைனை வைத்து உட்கரவும். முதுக்கு சுடதாண்ணி ஓத்தடம் தரவும். தலையனை இல்லாமல் பாயில் முதுகு நேராக இருப்பதுப் போல் படுத்தால் இதமாக இருக்கும். ( இவை என் அனுபவம்)
இல்லை எனில் டாக்டரை பார்ப்பது நால்லது. அண்ணியுடன் சென்று டாக்டரை பார்த்து வாருங்கள். அந்த வலியின் வேதனை தாங்க முடியாது. என் அனுபவம். நான் கெஞ்சம் உயரமாக இருப்பதால் அடிக்கடி முதுகு வலி ஏற்ப்படும் அதனால் தான் சென்னேன்.

/// விரைவில் குணமாக என்னுடைய வாழ்த்துக்கள்////

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பாபு அண்ணா இப்போது எப்படி இருக்கிறது உங்கள் முதுகு வலி, எல்லாம் அதிக நேரம் வேலை செய்து ரெஸ்ட் எடுக்காது தான், கொஞ்சம் ஹாட் வாட்டர் பாத் எடுங்க அண்ணா சரியாகி விடும். புது தளம் எல்லாம் நல்லபடியாக வரும் கவலை எல்லாம் படாமல் இருங்க........பாப்பி மற்றும் அம்மா நலம தானே?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

பாபு அண்ணா
உங்க முதுகுவலி சீக்கிரமே குணமாக கடவுளை வேண்டிக்கொள்கி?றேன். உங்களூக்கு சொல்லித்தர தேவையில்லை இருந்தாலும் சொல்கிறேன். கம்ப்யூட்டரில் உட்காருவத்ற்கு என்று தனியாக இருக்கும் சேரினை மட்டும் உபயொகப்படுத்தவும். சரியான உயரத்தில் உட்காரவும். தொடர்ந்து ரொம்ப நேரம் உட்காராமல் அடிக்கடி எழுந்து நடந்து தரவும்.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

நான் சொல்லுவது வீட்டிலேயெ இருக்க வேண்டாம் என்று..வீட்டில் இருந்தால் ரெஸ்ட் எடுத்தா மாதிரி தான்..அய்யோ அது பாக்கி இது பாக்கி என்று மெல்ல எதையாவது செய்வோம்.
கேரளாவில் உழிச்சல் பிழிச்சல் என்று எதெதுவோ செய்வார்கள்..அது செய்வதால் பலன் கிடைக்கிறதோ என்னவோ ஆனால் நமக்கு போன இடத்தில் வேற வேலை இல்லாததால் நல்ல ரெஸ்ட் கிடைக்கும்..அத்தோடு பலருக்கும் நல்ல சுகம் கிடைத்திருக்கிறது..ரொம்ப சுகமாக இருக்குமாம்..முடிந்தால் ட்ரை பன்னி பாருங்கள்.

என்னுடைய முதுகு வலிக்கும் ஒரு த்ரெட் தொடங்கிவிட்டீர்கள்!! :-) உங்கள் அனைவரின் அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி. இந்த த்ரெட்டின் நோக்கத்தில் தவறு எதுவும் இல்லை. எல்லோரது அன்பான விசாரிப்புகள் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், தனிப்பட்ட சில விசயங்கள் மன்றத்தில் பொதுவில் கொண்டுவரப்படுவது எனக்கென்னவோ கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கின்றது.

என்னுடைய நலம் குறித்து மின்னஞ்சல் மூலம் விசாரித்துள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். நிறைய பேருக்கு நான் இன்னமும் பதில் கொடுக்கவில்லை. விரைவில் பதில் கொடுக்கின்றேன்.

எனக்கு ஏற்பட்டிருப்பது வழக்கமாய் வரும் சாதாரண முதுகு வலி அல்ல. அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உண்டாகும் சதை சம்பந்தமான பிரச்சனையும் அல்ல. கொஞ்சம் தீவிரமானது. சில டெஸ்ட் ரிசல்ட்ஸ் இந்த வாரக் கடைசியில் வரும். அதன்பிறகே பிரச்சனையின் தீவிரம், என்ன பிரச்சனை, எதனால் பிரச்சனை என்ற கேள்விகளுக்கு எல்லாம் சரியான விடை கிடைக்கும்.

DISH (Diffuse idiopathic skeletal hyperostsis) பிரச்சனையாக இருக்கலாம் என்பது X-Ray மூலம் அனுமானிக்கப்பட்டுள்ளது. enthesopathy க்கான டெஸ்ட்களும் செய்து இருக்கின்றோம். முடிவுகள் வந்தபிறகே மேற்கொண்டு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். அதுவரையில் வலி குறைக்கும் மாத்திரைகள் எடுத்து வருகின்றேன். பைக் ஓட்டுதல், சிஸ்டத்தில் அமருதல் எல்லாவற்றிற்கும் மருத்துவர் தடை போட்டுள்ளார். உடல் எடை குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கின்றேன்.

இப்போது எனக்கு உடல் அளவில் இருக்கும் பாதிப்புகள் இவைதான். தொடர்ந்து பத்து நிமிடங்கள் உட்கார முடியவில்லை. உட்கார்ந்திருக்கும் பொஸிஸனை மாற்றினால் வலி உயிர் போகின்றது. உட்கார்ந்து எழுந்தால் உடலை நேராக நிமிர்த்த சில நிமிடங்கள் எடுக்கின்றது. சிறிது கூட குனிய முடியவில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்தால் வலி சற்று குறைகின்றது. வழக்கமான பணிகளில் சிறிது ஈடுபட்டாலும் பழையபடி வலி ஆரம்பித்துவிடுகின்றது. (எனக்கு கம்பெனிக்கு ஆட்கள் யாரும் இருக்கின்றீர்களா? :-) இதே பிரச்சனை இருந்து சிகிச்சை எடுத்து வருபவர்கள், சிகிச்சை எடுத்து சரியானவர்கள் யாரேனும் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தயவுசெய்து இங்கே பதிவுகள் வேண்டாம். )

இதுதான் தற்போதைய நிலை. உடல்நிலை ஓரளவிற்கு சரியானதும் மீண்டும் எனது வழக்கமான பணிகளைத் தொடரவேண்டும். அதுவரையில் இப்படி அவ்வபோது வந்து, நின்றபடியே டைப் செய்து, ஏதேனும் பதிவுகள் போட்டுச் செல்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்