மரவள்ளிக்கிழங்கு போண்டா

தேதி: February 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 10
மைதாமா - 200 கிராம்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

மரவள்ளிக்கிழங்கை சிறு சிறு துண்டாக வெட்டி தோல் நீக்கி கழுவி, அவிக்கவும்.
பின் அதனுள் இருக்கும் வேரை நீக்கி மசித்து வைக்க வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பெருஞ்சீரகம், பச்சை மிளகாயை, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மரவள்ளிக்கிழங்கைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.
மைதாமாவுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும்.
மரவள்ளிக்கிழங்குக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


இது செய்து சாப்பிடும் போது இஞ்சி கண்டிப்பாக சேர்க்க வேண்டாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த மரவள்ளிக் கிழங்கு போண்டா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின் றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி,மரவள்ளிக் கிழங்கு போண்டா செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"