கொள்ளு சாலட்

தேதி: February 28, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (6 votes)

 

கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி


 

கொள்ளினை குறைந்தது 4 -5 மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஊறவைத்த கொள்ளினை தண்ணீர் வடித்து வெட்டி வைத்துள்ள பொருட்களுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உடல் எடையினை குறைக்க உதவும்.
இதனை எதுவும் சேர்க்காமல் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல சத்தான சாலட் கீதா.எனக்கு பிடித்திருந்தது.வெறும் சாலட் மட்டும் இருந்தால் போதும் அப்படியே சாப்பிடுவேன்.

மிகவும் நன்றி மேனகா.
குழந்தை எப்படி இருக்காள்? ஆமாம் இந்த சாலட் மிகவும் நன்றாக இருக்கும்..
கொள்ளு சாப்பிட்டால் எடை குறையும் என்பதால் இப்படி அடிக்கடி செய்வேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்