நட்ஸ் குக்கிஸ்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - 350 கிராம்
வெண்ணெய் - 350 கிராம்
சர்க்கரை - 80 கிராம்(பொடித்தது)
கிரீம் அல்லது கெட்டியான பால் ஏடு - 4 மேசைக்கரண்டி
பொடித்த முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பொடிக்காத சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி


 

வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சேர்த்து மிருதுவாக குழைக்கவும்.
பால் ஏடு அல்லது க்ரீம் சேர்க்கவும்.
சலித்த மைதா மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிக்கவும்.
நன்றாக மிருதுவாக ஆனவுடன் கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
மாவு ஜில்லென்று ஆனவுடன் கால் அங்குலத்திற்கு கனமான அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வரிசையாக வைக்கவும்.
இலவங்கப்பட்டை பொடி, சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி மூன்றையும் கலந்து மேலே தூவவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கரோலின் அவகளுக்கு இந்த கலவையை பேக் செய்ய வேன்டும் தானே ?எவ்லோ நேரம் செய்ய வேன்டும்.சொல்லுங்கலேன்.

sajuna

திருமதி. கரோலின் அவர்கள் குறிப்புகளை மொத்தமாக கொடுத்துவிட்டார். அவர் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது இல்லை. உங்கள் கேள்வியை அவர் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

வேக வைக்கும் நேரம் அவர் எழுதிக் கொடுத்த குறிப்பிலும் மிஸ்ஸிங். உத்தேச அளவாக, 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 15 ல் இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

hai babu
thank you .

sajuna