ஹாய் ப்ரெண்ஸ் அரட்டை பாகம் 58

ஹாய் தோழிகளே எல்லோரும் ஜாலியா பேச இங்கே வாங்க,அரட்டையை போடுங்க.புது வரவுகளும் இங்கே வந்து அரட்டையை களை கட்ட வைக்க வாங்க!!! என்ன சுகன் நம்பர் சரிதானே. அதனால்தான் குழப்பம் இல்லாமல் நானே வந்து போட்டுட்டேன் த்ரெட்டை.

தனிஷா

சுகன் என்ன இன்னும் வேலை முடியலியா. என்னப்பா என்னுடைய பழைய (பாகம்55) பாகத்தில் என்னுடைய பதிலை பார்க்கலியா (ஆஹா சுகன் இந்த தனிஷாவுக்கு வேறு வேலையா இல்லையானு புலம்புவது காதில் கேக்குது).

ஹரிகாயத்திரி என்னப்பா திடீர்னு வரீங்க. திடீர்னு காணமல் போயிடுறீங்க.

கவி உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா. என்னை அக்கானு கூப்பிடனும்னு. சரி கூப்பிடுங்க. ஆனால் இந்த அக்கா என்ன சொன்னாலும் செய்யனும். மேனு வயச நான் சரியாதான் சொன்னேன் பயோடேட்டா த்ரெட்டில் பாருங்க கவி. பேக்பெயின் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு கவி அதான் ஹாஸ்பிட்டல் போனேன். என்னென்னவோ மெடிஷன் கொடுத்திருக்கா. கொடுமைய என்ன சொல்ல.

மேனு பெரிமா நான் நல்லா இருக்கேன். எனக்கு வலி இப்போ பரவாயில்லை. உங்களுக்கு எப்படி இருக்கு.

சாய்கீதா ஷிப்டிங் வேலை இன்னும் முடியலியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீ அக்கா:-) சொல்லுங்க என்ன செய்யணும்,ஆணயிடுங்கள் காத்திருக்கிறேன்.

தனீ பேக் பெயினா ,டாக்டர் குடுத்த மாத்திரையை மறக்காம சாப்பிடுங்க அப்ஃரா எப்படி இருக்கீங்க.

உன் லொல்லு தாங்கலியேமா. இந்த லொல்லுக்காக கம்ப்யூட்டர் முன்னாடி 10 நிமிஷம் நீல்டவுண் போட்டுக்கனும். நான் வந்து இப்போ வெப்கேமில் பார்ப்பேன். சரியா

அப்ரா கையில் இருந்த படியே தூங்குது கவி.உங்களுக்கு வேலை முடிஞ்சுட்டா. சார் வந்தாச்சா. ஷாம்குட்டி பையன் என்ன பண்ணுறார். இது சாப்பிட இவ்ளோ நேரம் அடம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா, கவி & குட்டீஸ் நலம்தானே? நீங்கள் அரட்டை அடியுங்கள். நான் நாளை வருகிறேன்.
இருவருக்கும் நல்லிரவு

‍- இமா க்றிஸ்

எப்படி இருக்கீங்க. உடல் நலம் இப்போது எப்படி உள்ளது. உங்களுக்கு இப்போது நல்லிரவா. நீங்க எங்கே இருக்கீங்க இமா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீ
வேண்டாம்..வலிக்குது அழுதுறுவேன்,
சாம் ஒரே ஆட்டம்,இவர் இப்பதான் வந்தார்,சாப்பாடு போட்டு வந்தேன்,அப்ரா தூங்கறாங்களா.
தனீ இன்னைக்கு ஓவர் பிரீயா இருக்கேன் ஒருத்தரும் மாட்ட மாட்டேங்கறாங்க.

இமா மேடம் நாளைக்கு வரேனு சொறதுக்கா இவ்வள்வு தூரம் வந்தீங்க:-)

நலம்தான் தனிஷா. விசாரித்ததற்கு நன்றி.
//நீங்க எங்கே இருக்கீங்க இமா//
கட்டிலில். கனவில். (நல்லிரவு சொல்லிவிட்டுக் கதைக்கிறேன்.) :-)
நான் வசிப்பது நியூஸிலாந்தில், ஓக்லண்ட்டில். நியூஸிலாந்தைப் பற்றி இப்ப எதுவும் கேட்டு விடாதீர்கள். ஏற்கெனவே இருவருக்கு அந்த விதத்தில் பதில் போட இருக்கிறது. கூடவே தாரணிக்கும் மட்டுநகர் பற்றி எழுதவேண்டும். (பழைய பாக்கி.)
இப்ப உண்மையாகவே நல்லிரவு. 11:42 pm. இனி நாளைதான் வருவேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஸாரிபா. :-((நானும் எல்லோரையும் போல் எழுதிப் பார்த்தேன்.) நீங்க தனியே புலம்பினபோது வர இயலவில்லை. :-( இப்பவும் முடியவில்லை. :-( இப்போதைக்குத் தனிஷா கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் நல்லிரவு.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

கவி கைய விடுங்க வலிக்குது. இமா சொன்னாங்க என்பதால் இப்படியா பிடிச்சிகிறது. சகலமானவங்களுக்கும் சொல்வது என்னவென்றால் ஒரு 4 மணி நேரம் அரட்டை பக்கம் யாரும் வராதீங்க. அப்புறம் கவிக்கிட்ட மாட்டிக்கிட்டு..... :-(

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இமா கட்டிலில் நல்ல கனவு வரட்டும் நிம்மதியா கண் உறக்கம் கொள்ளுங்கள். நியுஸிலாந்து பற்றி நீங்களும் மஹா மாதிரி ஒரு பதிவு போடுங்க தெரிந்து கொள்கிறோம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்