ஒன்றரை வயது குழந்தைக்கான சாப்பாடு

ஒன்றரை வயது குழந்தைக்கு கொடுக்கக் கூடிய உணவுகளை கூறுங்கள் please. என் மகன் சாப்பிடாமல் மிக கஷ்டப்படுத்துகிறான். என்ன செய்து கொடுப்பது என்று எனக்கும் புரியவில்லை. YOGHURT மட்டும் தான் விருப்பம். அதையும் சோற்றில் கலந்து தந்தால் சாப்பிடுவதில்லை. வாழைப்பழம் பிடிப்பதில்லை. பேரீச்சம்பழம் சாப்பிடுவான். ஆனால் அதனை ஒரு நாளைக்கு இரண்டுக்கு மேல் கொடுக்க கூடாது தானே?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

அவர் முன்னாடியே உட்கார்ந்து தினம் தினம் சாப்பிடுங்க..மெல்ல சாபிட பழகுவார்.இந்த வயதில் எல்லாமே கொடுக்க வேண்டும்..இன்னது என்றில்லாமல்
பருப்பு சாதம்,ரசம் சாதம்,தேங்காய் பால் சாதம்,இதெல்லம் பிள்ளைகளுக்கு விருப்பமானவை.

டியர் லக்ஷ்மி என் குறிப்பை செக் பண்ணுங்களே நிறைய குழந்தைகளுக்கு குறீப்பு இருக்கு,
கிச்சிடி, பருப்பு சாதம், பாலக் கீரை கடைசல்
தால் சூப்

கிச்சிடி என்பது இரண்டு மேசை கரண்டி ஐரிசி மற்றும் பாசி பருப்பில் சிறிது காய் கறிகள், சிக்கன் சேர்த்து வேக்வைத்து மசித்து கொடுப்பதாகும் குறிப்பில் செக் பண்ணுஙக்ள்
சிறு பருப்பு சாதம்
ஜலீலா

Jaleelakamal

தாளிகா, ஜலீலா உங்கள் இருவரினதும் பதில்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல் செய்து பார்க்கிறேன். ஆனால் இனிப்பு என்றால் விரும்பி சாப்பிடுகிறான். பருப்பு, கிழங்கு போன்ற எதுவும் பிடிக்குதில்லை. அறுசுவை குறிப்புகளை கூட தயாரித்து இருக்கிறேன். இப்போதெல்லாம் விடிய முன்னரே என்ன சமைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். ஒருமுறை சாப்பிட்டதை மறுபடியும் சாபிடுவதில்லை. மீறி வாயில் வைத்தால் அப்படியே துப்பி விடுகிறான். அது தான் உங்கள் ஆலோசனையை நாடினேன். மீண்டும் நன்றி உங்களுக்கு.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

இனிப்பு என்றால் சாப்பிடுகிறானா. ரொம்ப நல்லது இனிப்பு ரெஸிபி நிறைய வே இருக்கு, இருங்க குழந்தைகளுக்காக உணவு போட்டு வருகிறேன்.
தருகிறேன்

அதற்குள்.
மைதா இனிப்பு தோசை, ரொம்ப சாஃப்டாக இருக்கும், பாம்பேடோஸ்ட் பிரெட்டின் ஓரங்கலை எடுத்து விட்டு செய்து கொடுங்கள்.
சோஜி ஹல்வா, கோதுமை களி, பால் பழ சாதம்.இனிப்பு சேமியா.இனிப்பு உருண்டை சோறு.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா, நீங்கள் கூறிய குறிப்புக்கள் எல்லாம் உங்கள் சமையல் பகுதியில் உள்ளதா?

இனிப்பு கொடுப்பது நல்லதா? சிலர் சொல்வார்கள் இனிப்பே கொடுக்காதீர்கள் என்று. உங்கள் கருத்து என்ன? ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் கொடுக்கலாம்?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

cartoon nursery rhymes
--------------------------
http://www.youtube.com/watch?v=LKWCs6aT4n4&feature=related

http://www.nurseryrhymes4u.com/

remix songs
------------
http://www.youtube.com/watch?v=qUSZO0izUh0

swami thalattu song
--------------------
http://www.youtube.com/watch?v=WOyy6vPyzlk

Gazoon - http://www.youtube.com/watch?v=c5Zc6zPOSck

Barney - http://pbskids.org/barney/

http://www.mazhalaigal.com/

baby games
-----------
http://www.ictgames.com/resources

http://www.ictgames.com/resources

இந்த website open பண்ணி அப்புறம சாதம் ஊட்டுங்க, 1 week no problem, then he may get bored

ஹாய் லக்ஷ்மி குழந்தைகளுக்கான குறிப்புகல் என் குறிப்பில் உள்ளது பாருங்கள்.
சர்க்கரை அளவு வேண்டுமானால் சிறிது குறைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்