பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதுவோர் மற்றும் எழுதுவோருடைய பெற்றோர்களு

வணக்கம்... வந்தனம்... அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நெருங்கும் சமயம்....அப்புறம்.... தேர்வு எழுத ஆயத்தமாகி வரும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.... பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் கோல்ட் மெடல் நான் பெற்று இருப்பது அனைவர்க்கும் தெரியும் என நினைக்கிறேன்....(இந்த நேரத்தில் இது ரொம்ப முக்கியமோ???)...ம்ம்ம்ம்...

அப்புறம் முக்கியமான விஷயம்... நமக்கு அட்வைஸ் பண்றவங்களையும் பிடிக்காது.... அட்வைஸ் பண்றதும் பிடிக்காது.... ஆனா அக்கறை-யா சொல்றது பிடிக்கும்....அக்கறை-யா சொல்றவங்க பேச்சை கேக்கவும் பிடிக்கும்...ஹி ஹி... (ஐயோ, டேய் உன் மொக்கையை இங்கேயும் ஆரம்பிச்சாச்சா???? கொடுமை...)

முதலில் பெற்றவர்களுக்கு தான் நெறைய சொல்லணும்....
பெற்றவர்கள் தயவு செஞ்சு எந்த நேரமும் படி படி என சொல்லாதீங்க.... பிள்ளைகளுக்கே தெரியும்.......ஆனால் அவர்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது மட்டும் தான் நம்மோட முக்கிய பணியாக இருக்க வேண்டும்...

அப்புறம் படிக்கும் நேரம்... ஒவ்வொருத்தருக்கும் இது வேறுபடும்.... சிலருக்கு அதி காலை நேரத்தில் படிச்சா தான் நல்லா வெகு சீக்கிரமாக படிப்பாங்க... சிலருக்கு இரவு நேரம்.... பிள்ளைகளுக்கு எந்த நேரம் வசதியோ.... அந்த நேரங்களில் காப்பி டீ என போட்டு கொடுத்து ஊக்கம் கொடுங்கள்... (எனக்கு இன்னும் நினைவில் இருக்கு... அதிகாலை மூன்று மணிக்கு என்னோட அப்பா காப்பி போட்டு கொடுப்பாங்க... வந்து கொடுத்து விட்டு, வேற எதுவும் வேண்டுமாப்பா-னு கேப்பாங்க...... ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து.... தண்ணி வேண்டுமா???.... எதுவும் வேண்டுமா-னு கேப்பாங்க...அப்போ எல்லாம் நான் கண் கலங்கி இருக்கேன்... படி படி-னு சொல்லிகிட்டே இருக்க மாட்டாங்க...நல்ல அப்பா...பிள்ளைங்களை புரிஞ்சுக்காத பெத்தவங்க பெத்தவங்களே இல்லை... வைஸ் வெர்சா.... )

சரி...... அப்புறம் படிக்குற விஷயம்.... ஸ்கூல் தொடங்கி முதல் நாளில் இருந்து நீங்கள் படிக்க தொடங்கி இருந்தால் உங்களுக்கு பாடங்களை திருப்பி திருப்பி படிப்பது தான் சரியாக இருக்கும்..... அப்படி முதலில் இருந்து படிக்காதவர்கள்.... இனி வரும் நாட்களில் முக்கியமான பாடங்களை முதலில் படித்து விட்டு மற்றவற்றை ஆரம்பியுங்கள்.....

எப்படி மனனம் செய்வது, சொல்லி பார்ப்பது, எப்படி படிப்பது இவற்றை பற்றி நான் சொல்ல போவது இல்லை.... உங்களுக்கே தெரியும் உங்கள் திறன்.... சோ உங்கள் வசதிப்படி நீங்களே முடிவு செய்து படிக்க ஆரம்பியுங்கள்....

எல்லாம் படித்து பார்த்த பின்பு.... சிறிது நேரம் மட்டும் குழு விவாதம் செய்யலாம்... (எனக்கு இந்த குழு விவாதத்தில் இஷ்டம் இல்லை... உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் பண்ணி கொள்ளலாம்... ஆனா ஒரேயடியாக விவாதம் பண்ண கூடாது.... அப்புறம் தெரிஞ்சதும் மறந்து போகும்.....)

அப்புறம் தேர்வுக்கு கால் மணி நேரம் முன்பு அறைக்குள் போய் உக்கார வேண்டும் என்று நெறைய பேரு சொல்லுவாங்க.... மன அழுத்தத்தை குறைக்க என்று.... இதுவும் உங்கள் இஷ்டம் தான்... (நான் கடைசி நொடி வரை படிக்கும் ஆள்... பர பரப்பு ஆசாமி வேறு.... ஆனால் எனக்கு நியாபக மறதி அதிகம்...அதனால் அப்படி...சிலர் சொல்லலாம்.... கடைசி பத்து நிமிடங்களில் என்ன படிக்க போகிறாய்???.... என்று... ஆனால் அது எனக்கு அது தான் வசதி....அதனால் நான் அடைந்த பலன்கள் நெறைய...) எது எப்படியோ... உங்களுக்கு எது வசதியோ அப்படி பண்ணுங்கள்....

ஆனால் கேள்வித்தாள் வாங்கிய உடனே எழுத தொடங்காதீர்கள்.... அஞ்சு நிமிஷம் பொறுமையாக எல்லா கேள்விகளையும் படிச்சு பாருங்க... அப்புறம்... நேரம் ஒதுக்கி...எழுத ஆரம்பிங்க... கடைசி இருபது நிமிஷம் எழுதியதை சரி பார்க்க ஒதுக்கி கொள்ளுங்கள்.... (இது போக இன்னும் நெறைய விஷயங்கள் உங்களுக்கே தெரியும்... இருந்தாலும் சொல்கிறேன்....)

சாப்பிடாம எக்ஸாம் போகாதீங்க....... உங்க அப்பா அம்மா படி படி-னு சொன்னா.... எரிச்சல் படாம, நல்ல மார்க்ஸ் வாங்குவேன்... நீங்க கவலைப்பட வேண்டாம்-னு சொல்லுங்க.... நீங்க சொன்னா கண்டிப்பா அவங்க புரிஞ்சுக்குவாங்க....

உங்களுக்கே தெரியும்.... நீங்க எத்தனை மார்க்ஸ் வாங்க போறீங்க-னு????... இருந்தாலும்... நீங்க நினைச்சதை விட நெறைய வாங்க, கொஞ்சம் சிரத்தை எடுத்து படிச்சா... நீங்களும் ஒரு கலக்கல் ஆளு தான்....

கடைசியாக ஒரு விஷயம்.... உங்களால் எவ்வளவு எவ்வளவு எவ்வளவு முடியுமோ, அந்த அளவு நல்லா படிங்க.....உங்களுக்காக, உங்கள் பெற்றோருக்காக படியுங்கள்... உங்கள் மதிப்பெண்களை வைத்து பெற்றோரும், மற்றவர்களும் உங்களை எடை போடுகிறார்கள் என எதிர்மறையாக நினைக்காமல், உங்கள் மதிப்பெண்கள் தான் உங்கள் பெற்றோருக்கு பெருமையும் உங்களுக்கு உரிய முகவரியையும் கொடுக்க போகிறது என நினைத்து தேர்வு எழுதுங்கள்....

எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் நம் பக்கம் இருக்க... கவலை எதற்க்கு????

மீண்டும் பார்க்கலாம்...

உங்கள் அருண் பிரசங்கி

அசத்தலாக சொல்லி எல்லா பெற்றோர் மனத்தில் இடம் பிடித்து விட்டீர்கள். நன்றி.உங்கள் மற்ற பதிவுகளை படித்து ரசித்து சிரித்ததுண்டு.
”....... உங்க அப்பா அம்மா படி படி-னு சொன்னா.... எரிச்சல் படாம, நல்ல மார்க்ஸ் வாங்குவேன்... நீங்க கவலைப்பட வேண்டாம்-னு சொல்லுங்க.... நீங்க சொன்னா கண்டிப்பா அவங்க புரிஞ்சுக்குவாங்க.... ”இதைத்தான் என் மகன் தவறாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.நாங்கள் நினைப்பதை எல்லா பாயிண்டும் அருமையாக பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லீருக்கீங்க.என் மகன் ரிலாக்ஸ் பண்ணும் போது இதை வாசிக்க சொல்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாவ் சூப்பர் பதில் பிறகு போடுகிறேன்.
இப்ப டைம் இல்லை
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள அருண் அவர்களுக்கு,

வணக்கம். உங்களுடைய பதிவுகள் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்.

உங்களது Blog ல் நீங்கள் எழுதுவதை இங்கே அப்படியே எடுத்து வெளியிடுவதாக சிலர் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அறுசுவை தள விதிகளின்படி மற்றொரு blog ல் அல்லது தளத்தில் இடம்பெற்றுள்ளவற்றை இங்கே அப்படியே வெளியிட அனுமதி இல்லை. இது பொதுவான இணைய விதிதான். இணையத்தில் ஓரிடத்தில் வெளியானதை அப்படியே மற்றொரு இடத்தில் வெளியிடுவது நிறைய பிரச்சனைகளைத் தரக்கூடியது. உதாரணமாக, கூகிள் போன்ற தேடுதல் தளங்கள் ட்யூப்ளிகேட்டட் கண்டெண்ட் என்று அவற்றை முத்திரை குத்திவிடும். எனவே, உங்களது சொந்தப் பதிவு என்றாலும் அவற்றை இரு இடங்களில் வெளியிடுவது கூடாது. தயவுசெய்து ஏதேனும் ஒரு இடத்தில் அவற்றை நீக்கிவிடவும். அதேபோல் மின்னஞ்சல்களில் வந்த தகவல்களை வெளியிடுவதையும் இங்கே அனுமதிப்பதில்லை. இதே காரணங்களுக்காக ஏற்கனவே நிறைய பதிவுகளை நீக்கி இருக்கின்றோம். எனவே இதில் பாரபட்சம் இருக்கக்கூடாது. தயவுசெய்து ஒத்துழைக்கவும்.

மற்றபடி, உங்களது எழுத்து நடை மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றது. நிறைய எழுதுங்கள்.

(இதை உங்களுக்கு தனி மெயிலில் அனுப்பிடவே விரும்பினேன். ஆனால், மேற்கூறிய விதிகளில் நான் பாரபட்சம் காட்டுவதுபோல் சிலர் குறைபட்டுக் கொண்டதால், அப்படியல்ல என்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவே இதனை மன்றத்தில் கொடுத்துள்ளேன்.)

அன்பும் ப்ரியமும் உள்ள அட்மின் அவர்களுக்கு.... இனிய வணக்கங்கள்...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.... அப்புறம்.... அறுசுவையின் தள விதி முறைகளை சொல்லி இருந்தீர்கள்..... இப்போது புரிகிறது....நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் பதிவுகளை நீக்க சொன்னீர்கள்.... என்னுடைய பிளாக்-ல இருந்து பதிப்புகளை நான் எடுக்க விரும்ப வில்லை... ஏனென்றால் என்னுடைய வட்டாரம் கொஞ்சம் பெரியது.... எனது கல்லூரி பேராசிரியர்கள், சீனியர்கள், ஜூனியர்கள், உடன் படித்தவர்கள், நண்பர்களின் அம்மா, அப்பா அப்புறம் பள்ளி நண்பர்கள், என்னுடைய சக ஊழியர்கள், இன்னும் இன்னும் என்று அந்த பட்டியல் பெரியது..... எல்லாவற்றிற்கும் மேலாக அறுசுவை அன்பர்கள் வேறு இருக்கிறார்கள்....இங்கு நான் பதிப்புகளை பதித்தால் மேற்சொன்னவர்களில் பெரும்பாலானோர் பார்க்க முடியாது...ஆனால் அறுசுவை அன்பர்களால் படிக்க முடியும் நேரம் கிடைக்கும் போது.... (வேறு வழி எனக்கு தெரிய வில்லை அட்மின் அவர்களே.....நான் சொல்ல வருவதை நீங்கள் முழுவதும் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்)

அறுசுவையில் என்னுடைய பதிப்புகளை எப்படி அகற்றவது என்று தெரிய வில்லை... அதற்க்கு உரிய உரிமை உங்களிடம் இருந்தால் நான் பதித்த பதிப்புகளை அகற்றி விடுங்கள்.....என்னுடைய பதிப்புகள் பிளாக்-ல வரும் மாதிரி பார்த்து கொள்கிறேன்... அதை பற்றி எதுவும் முக்கியம் என்றால் இங்கு தகவல் மட்டும் சொல்லி கொள்கிறேன்....

அறுசுவையில் எழுதுவேன்... நெறைய எழுத முயற்சிப்பேன்...

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உண்மையில் எனக்கு இந்த விஷயத்தை எனக்கு மெயிலில் அனுப்பி இருந்தால் சந்தோஷம் கொண்டு மாற்றங்களை கொண்டு வந்து இருப்பேன்... அந்த ஒரு சிலரால் நான் சுட்டி காட்டப்பட்டு, அந்த ஒரு சிலர் குறை பட்டு கொண்டதற்க்காக இங்கு எனக்கு பதில் அளித்து இருப்பது.... அந்த ஒரு சிலருக்கு மிக்க சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு மிக்க வருத்தமே....

சரி...... மீண்டும் அறுசுவையில் நல்ல பதிப்புகளுடன் சந்திக்கிறேன்....

நல்லது... மீண்டும் பார்க்கலாம்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

அருண்மா நிறைய பேசனும்னு நினைச்சேன்,ஆனால் இப்போ நேரம் இல்ல,சீக்கிரம் உங்களுக்கு நல்ல தெளிவான பதிவு போடுகிறேன்,..

//அந்த ஒரு சிலருக்கு மிக்க சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு மிக்க வருத்தமே.... //

தயவுசெய்து வருத்தபட வேண்டாம்,உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..அட்மின் அண்ணன் எல்லோருக்கும் சொல்ற விசயத்தை தான் தங்களுக்கும் சொல்லிருக்காங்க..அதனால வருத்தபடுவதை விட்டு நீங்க எழுதினது எத்தனை பேருக்கு உதவியாவும்,சந்தோசமாவும் இருந்திருக்குனு மட்டும் பாருங்க..

அருண் அண்ணா எப்படி இருக்கிங்க. நான் உங்க கிட்டா பேசி அதிக நாள் ஆகிவிட்டது. நீங்கள் கூறிய கருத்துக்கள் அருமையாக இருக்கிர்து.
மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. ஒருசிலருக்குதான் அந்த களை உள்ளது. அதனால் அதிகம் எழுந்துக்கள்.

***** ஒரு சிலருக்கு மிக்க சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு மிக்க வருத்தமே.... *****

நீங்கள் கூறிய இந்த வார்த்தை உங்கள் சகோதரி அனைவருக்கும் வருத்தம் தான் அதனால் நாங்க வருத்தம் அடைகிரேம்.

ஜாலீயா இருக்கும் எங்க அருண் (அண்ணா) எங்க கானும். வாங்க வந்து பதில் போடுங்க நாங்க காத்துக்குட்டு இருக்கேம்.

பாபு அண்ணா அனைவருக்கும் செல்வது தான் அதனால் வருத்தம் வேண்டாம் சகோதரரே........

பாபு அண்ணா நீங்க சென்னது சரிதான்/// ஹி ஹி ஹி ஹி//// விடு ஜீட் (நான் எஸ்க்கேப்
)

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அருண்,
நலமா? சாப்பிட்டாச்சா? :-)
அட்மின் சொல்வது சரிதானே? அவர் அட்மின். தன் வேலையைச் செய்கிறார்.
நீங்கள் நன்றாகத்தான் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். (ஆனால் இரண்டையும் தனித்தனியே வைத்துக்கொண்டு. இன்னுமொன்று.. தலைப்பை மூன்று சொற்களுக்கு மேல் போகாமல் வைத்திருக்கச் சொன்னதாகவும் ஞாபகம்.)
எனக்கு இன்னும் பாரதம் (அதுதான் நியூஸிலாந்து பற்றி) எழுதுகிற மூடே வரமாட்டேன் என்கிறது. :-(
சரி என்ன சமையல்? :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அட்மின் எல்லோருக்கும் சொல்வது போல் சொல்லிருக்கிறார்.அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாங்க தாமரைச்செல்வி நலம்... நலம் அறிய ஆவல்.... என்னது நேரம் இல்லையா??? அப்படி என்ன பதில் போட கூட நேரம் இல்லாம, இருக்கட்டும் இருக்கட்டும்... சரி அப்புறம் சந்தோஷ் என்ன பண்றாங்க... (அது என்னமோ சின்ன பசங்களுக்கு மட்டும் நான் உடனே ரொம்ப மரியாதை கொடுக்கிறேன்.... என்னை விட மூத்த, சில வயது வித்தியாசம் உள்ளவர்களுக்கு அந்த மரியாதை வர கொஞ்சம் லேட்டா ஆகுது....என்னமோ... நல்லா இருந்தா சரி....)... ம்ம்ம்ம்..மரியாதை என்று சொன்ன உடன் இன்று காலை நடந்த சம்பவம் ஐயோ கேளுங்க.... கம்பெனியில் இருந்து எப்பவும் கோஸ்டர் வரும்... இன்று அதற்க்கு பதிலாக வெளி வேன் அனுப்பி இருந்தாங்க.. அதுவும் ரொம்ப லேட்... எல்லாரும் உக்கார்ந்த உடன்... வேன் டிரைவர்-க்கு ஒரு போன் கால்... அவர் எடுத்து.... "HELLO..... OK... OK.... NOW LABOUR... LABOUR TAKE IT..... OK" -னு சொன்ன உடன் சிலருக்கு கோவம்... என்ஜீனியர் நம்மளை லேபர்-னு எப்படி அவன் சொல்லலாம்-னு ஒரே கூச்சல். அதுவும் டேக் இட்-னு... வேறு சொல்லுகிறார் என்று.... ம்ம்ம்ம்... பாவம் அந்த மனிதர்..... தனக்கு தெரிஞ்ச ஆங்கிலத்தை சொல்லி.... மாட்டி கொண்டார்.... கடைசியில் சரியா போச்சு.... அதை காமெடி ஆக்கி விட்டனர்.... சோ அவர் எங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவதாக நினைச்சு தான் பேசினார்.... ஆனால் என்ன பண்ண????

சரி தாமரைச்செல்வி வேலைய பாருங்க... முடிச்சுட்டு தெளிவா பதில் போடுங்க... நானும் உங்க பதிலுக்கு காத்து இருக்கேன்...

வணக்கம் சிங்கப்பூர் பிரபா... என்ன ஆளவே காணோம்... ரொம்ப பெரிய ஆள் ஆகி ஆச்சோ?? ம்ம்ம்ம்... உங்களை எல்லாம்... நான் முந்தி போட்ட பதிவுக்கு பதிலை காணோம்... ஆனா இப்போ வந்து களை வந்து விட்டது.. காளை வந்து விட்டது-னு பதில் போட்டு கொண்டு.... என்ன சின்ன புள்ளை தனமா இருக்கு????

நான் எப்போ ஜாலியா இருந்தேன்???... இப்போதைக்கு ஜாலி ஆக எல்லாம் இல்லை...
இந்தியா போனா தான் ஜாலி.... என்னோட gtalk இன்றைய கேப்சன் என்ன தெரியுமா??? "அழகா இருக்கிற பொண்ணுங்க எல்லாருமே நமக்கு பிடிச்சு இருக்கணும் என்பது அவசியம் இல்லாத ஒன்று... ஆனா நமக்கு பிடிச்ச பொண்ணு நமக்கு அழகா தான் தெரியணும் என்பது அவசியமான ஒன்று....".... பக்கத்தில் படம்... இரண்டு பேர் இருக்கிற மாதிரி வரை படம்.... இப்படி சொந்த மொக்கை கேப்சன் வைக்குறது கூட ஜாலி தான்.... என்ன சரி தானே??? (இதையும் யாரும் சுட்டி காட்டுவாங்களா??? சிங்கப்பூர் பிரபா... அப்படி காட்டினா.... நான் உங்களை தான் மாட்டி விடுவேன்... அய்யா எனக்கு ஜாலி.....)

ம்ம்ம்ம்... சரி என்ன ரொம்ப வேலையா??? அப்போ அப்போ வாங்க மேடம்.... (பிரபாவுக்கு நான் எதுக்கு மேடம் போடணும்???? மேடம் எல்லாம் கிடையாது.... சிங்கப்பூர் பிரபா-னு சொன்னா... போதும்... போதும்...)... சரி பிரபா.... சமையல் வேலையை எல்லாம் முடிச்சு விட்டு.... நிதானமா வந்து பதில் போடவும்.... நெறைய எழுத சொல்லி இருக்கீங்க... பிரபா சொல்லி பண்ணாம இருந்தா தப்பு.... எழுதி விடலாம்ம்ம்...சரி.... அப்புறம் வாங்க.... ம்ம்ம்ம்...

வாங்க..... இமா.... கிரிக்கெட்-ல நியூசிலாந்து கூட இந்தியா விளையாடிய போது எனக்கு உங்க நினைப்பு தான்... அங்கேயும் நம்ம ஆளுங்க இருக்காங்க..... நமக்கு பழக்கமான இமா இருக்காங்க...என்றும் நினைச்சுகிட்டேன்... அங்க கூட தமிழ் சங்கம் இருக்கு என்று கேள்விபட்டேன்... ம்ம்ம்ம்... இமா.... உங்களுக்கு சமையலில் 25 வருடங்கள் அனுபவமா??? எப்பா.... அப்போ சமையலில் பின்னி பெடல் எடுப்பீங்க... அப்படி தானே.... நல்லா சமைச்சு DHL கொரியரில் அனுப்புங்க.... சீக்கிரம் அனுப்பா விட்டால்... நானே அங்கு வந்து விடுவேன்....இப்போ நான் எழுதுவதே இந்த அளவு கொத்தா இருக்கும் போது நேரில் கேக்கவா வேண்டும்??....நீங்க நியூஸிலாந்து பத்தி சொல்ல வேண்டாம்.... அதன் வர்றேன் என்று சொல்லி விட்டேனே... இதை தவிர்க்கணும் என்றால் சீக்கிரம் கொரியரில் சாப்பாடு அனுப்புங்க... ஹி... ஹி... (டேய் அருண்னு ஏற்கனவே இமா உன்னை சாப்பாட்டு ராவணன் சாரி சாப்பாட்டு ராமன் என்று சொல்லுவாங்க... இது உனக்கு தேவையா???... போடா.... ம்ம்ம்ம்)... சரி இமா... மூடு வர்ற அப்போ நியூஸிலாந்து பத்தி சொல்லுங்க... சமையலா??? ஐயோ இன்றும் சோம்பேறி தனம்... மதியம் சங்கீதா ஹோட்டல் சாப்பாடு... இரவு பரோட்டா...

சரி இமா... சமையலை கவனிங்க....நல்லது.... (ஹி ஹி நம்ம சிரிப்பு இது)... சரி நீங்க கொஞ்சம் சிரிங்க... அப்படி தான்.. அப்படி தான்... சிரிங்க... ம்ம்ம்... அழகா இருக்கு... அப்படி தான் சிரிச்சுகிட்டே இருக்கணும்....ஒகே??????

வாங்கோ ஆசியா, நேற்றே உங்கள் கருத்துக்களை பாத்தேன்... ஆனால் பதில் போட வில்லை...இப்போ சேர்த்து போடுகிறேன்.. . எல்லாமே அருமையாக இருக்கு என்று சொன்னீர்கள்... நல்லது.... உங்கள் பையனுக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லி விடுங்க.... நீங்களும் அபுதாபி தானா??? சரி.... ஆசியா.... பையனுக்கு எல்லாம் செட் பண்ற வேளையில் இருப்பீங்க என்று நினைக்கிறேன்.... நல்லது... மீண்டும் பார்க்கலாம்....

என்றும் உங்கள் அருண் பிரசங்கி....

என்னாங்க அருண்ப்ரசங்கி
வந்தவுடனே எல்லோர் மனதிலும் எழுத்தால் இடம் பிடித்து விட்டீர்கள்.அட்மின் சொல்ரது நியாயம் தானே..ஆமா உங்களுக்கு பெண்களை பற்றி தெரியாது அட்மின் மட்டும் உங்களது தனிமெயில் அனுப்பியிருந்தா அவரை சும்மா விட மாட்டாங்க அதுக்கும் 10 மெயில் போடுவாங்க.
அது ஏன்னு தெரியல ஆன்னா ஊன்னா அட்மின் கிட்ட வம்புக்கு போராங்க..நம்மால் வெளிப்படையா சொல்ல முடியுர விஷயத்தை இங்கயே சொன்னால் அவருக்கு சிரமம் இல்லையே இது தொட்டது தொன்னூறுக்கும் அட்மினுக்கு மெயில் அப்ரம் மன்றத்துல நல்ல பிள்ளைக அப்ப நமக்கு கெட்ட பேர் வரக் கூடாது அட்மின் சொல்லி அவர் கெட்ட பேர் வாங்கிக்கனும் .
சரி அது கெடக்கட்டும்..நல்லா எழுதுரீங்க இதுல வருத்தபட என்ன இருக்கு.நீங்க ப்லாக்ல வேற இங்க வேற எழுதுங்க..நாங்க கண்டிப்பா ரசிச்சு படிப்போம்

மேலும் சில பதிவுகள்