காளான் மசாலா

தேதி: March 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் -1கப்
வெங்காயம் -1
இஞ்சி -1சிறுதுண்டு
பச்சைமிளகாய் -1
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்
கொத்தமல்லிதழை -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணை -1ஸ்பூன்


 

காளானை உப்பு தண்ணீரில் அலசி நறுக்கிவைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,இஞ்சி நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம்,மிளகாய்,இஞ்சி போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன்,காளான் சேர்த்து வதக்கி மஞ்சள்பொடி,கரம் மசாலா,உப்பு போட்டுவதக்கவும்.ஒருகை தண்ணீர் தெளித்து வேகவைக்கவும்.
காளான் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சப்பாத்திக்கு சரியான சைட்டிஷ்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி, காளான் மசாலா மிகவும் நன்றாக இருந்தது. செய்வதற்கு எளிதாகவும் சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

காளான்மசாலா செய்துபார்த்து நன்றாக இருந்தது என்று கூறியது சந்தோசமாக இருக்கு,நன்றி வானதி

சவுதி செல்வி

சவுதி செல்வி