naan kadavul

நான் கடவுள்....
இந்த படத்தை பார்த்த பிறகுதான் நாம் (நான்) எவ்வளவு சுயநலமாக இருக்கிறோம் என்று தெரிகிரது.
நமக்கு எல்லாம் தந்தும் நாம் எப்படி இருக்கிறோம் என்று தோன்றிகிறது.

very nice film....
enjoy and see....
sorry no no no
feel and see.........

நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்..என் கணவர் எதுவோ பெரிய மெசேஜ் சொல்லியிருக்காங்க போல வித்யாசமா இருக்கு என்று என்னையும் புடிச்சு உக்கார வச்சார்
சத்தியமா இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்ல....உங்களுக்கு எப்படி புடிச்சது?சொல்லத் தக்க எந்த ஒரு மெசேஜும் படத்தைல் இல்லை.
எனக்கு முழுக்க முழுக்க தோன்றியது சாதாரண மனநிலை குன்றிய மனிதர்களை கூட அவலட்சனமாக காட்டுவது மட்டும் தான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது...அது ஏன் காரணமில்லாமல் அடிக்கடி அவர்களை சிரிக்க விட்டு பயமுருத்துகிறார்கள்..அதுவும் கோரசாக பேய் சிரிப்பது போல்.எனக்கே பார்க்க கஷ்டமாக இருந்தது.
என்னத்த சொல்ல வராங்க படத்துல அது கூட எனக்கு புரியல..ஒரு வேளை இப்படி கொடுமைப்படுத்தப்படும் மக்களின் நிலையை நமக்கு உணர்த்த என்றால் அந்த கோணத்திலும் படம் எடுக்கப்படவில்லை.
பார்க்கவே பரிதாபமாக இருக்கும்வண்ணம் அவர்களை பேய் போல காட்டியிருக்கிறார்கள்...நீங்கள் யாரும் இந்த படத்தை பார்த்தீர்களா?சுத்த மோசமான ஸ்க்ரீன்ப்லே..
எங்கெங்கயோ சம்மந்தமில்லாத எதெதுவோ கதையை நுழைச்சது மாதிரி...

நானும் இந்த படத்தை கொஞ்சம்தான் பார்த்தேன். எனக்கு பயம் வந்துட்டு. பிள்ளைகளை பிச்சை எடுக்க வைக்க அந்த ஊனமுற்ற, மனநலம் குன்றியவர்களை சூடு வைக்கும் போது என் கண்ணில் இரத்த கண்ணீரே வந்துட்டு அதோட படத்த ஸ்டார்ப் பண்ணி விட்டேன். நைட்புல்லா தூக்கமே வரல. அழுகையா வந்தது. உக்கார்ந்து ப்ரேயர் பண்ணினேன். முழு படத்தையும் பார்த்தவங்க தைரியசாலிதான்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நல்ல வேளை சூடு வச்சதுக்கே பயந்தியா தனிஷா முழுக்க பாக்காதது நல்லதா போச்சு..அத விட வன்கொடுமையை எல்லாம் காட்டியிருக்காங்க..அவங்க உத்தேசமே அதானே..அவங்க இப்படி எடுத்ததுக்கு பேசாம ஒரு ஹாரர் மூவீ எடுத்திருக்கலாம்

வாழ்க தளிகாவின் வித்தியாசமான பார்வை.... ஹி ஹி...

ஹாய் தளிக்க அக்க நீங்க சொன்ன விமர்சனம் சரிதான். ஆனால் இதை பாலா கேட்டால் என்ன நடக்கும். உங்கள mathiri எல்லாரும் இருந்தால் பாலா மாதிரி டிரக்டேர் தலையில் துண்டை போடா வேண்டியது தான். பாவம் பாலா .

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இந்த படத்தில் சொல்ல வரும் கருத்துகள் பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது...
இவ்வாறு உடல் நலம் குன்றியவர்களின் இன்னொறு உலகம் நமக்கு தெரியுமா?
நம்மிடம் வந்து யாரேனும் பிச்சை கேட்டால் ஐயோ பாவம் என்று நம்மிடம் இருக்கும் பைசாவை போடுவோம்.
ஆனால் அவர்களின் வாழ்க்கையை உணர்ந்து அவர்களுக்காக படம் எடுத்த பாலாவிற்கு handsoff....
அவர்களின் சிரிப்பை பார்த்து பயப்படும் நீங்கள் ஒரு பக்கம்....
ஆனால் அந்த சிரிப்பை பார்த்து அவர்களுக்குள்ளும் சந்தோஷம் உல்லது என நினைக்கும் மக்கள் ஒரு பக்கம்..
என்னை பொறுத்த வரை,
படங்கள் பார்ப்பது மூலம் நம்முடைய நல்ல பண்புகள் வெளிவரவேண்டும்.
அந்த வகையில் பார்த்தால் நான் இது போல மக்களுக்காக என்ன செய்தேன்...இல்லை பிறருக்காக என்ன செய்தோம் என்று கேட்க தோன்றுகிரது.
நம்மால் இந்த மக்களின் அவல நிலையை பார்த்து பாவப்படவோ,பயப்படவோ மட்டும்தான் முடியும்...
அதுதான் மக்களின் நிலை..
ஆனால் இந்த மாதிரி படங்கள் வருவது மூலம் ஓரிரு பேர் திரிந்தினாலும் அது சந்தோஷம் தானே...
மொத்தமாக இந்த படத்தில் யாரையும் அழகாகவும் காட்டவில்லை...
பேய் மாதிரியும் காட்டவில்லை...
உண்மையாக காட்டியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை....

இப்படி ஒரு பதிவு நான் எதிர்பார்த்தது தான்..அதுவும் சரி தான் எல்லாம் அவரரவ்ர் கண்ணோட்டத்தை பொறுத்தது.

இதை வெட்ட வெளிச்சமாக விமர்சனம் செய்யவும் முடியாது..படம் நல்லா இருக்கு என்று நாலு பேர் சொல்வார்கள்..உம்ம் என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு கிளம்ப வேண்டும்..அப்படி சொல்லத்தக்க மாதிரி சென்டிமென்டலாகவும் அப்படம் என்னை தாக்கவில்லை...எனக்கு மனதை நெருடியது ஒரே ஒரு காட்சி தான்..சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனை தட்டிப் பறித்து கொண்டு போனது மற்றதெல்லாமே சேரில் கம் போட்ட மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு மாதிரி பயத்தோடவே பார்தேன்.மற்றபடி நடித்தவர்கள் அவர்களுடைய திறமையை நன்றாக உணர்த்தியிருக்கிறார்கள்.அது ஒன்னு தான் நான் பார்த்து நல்ல விஷயம்
வித்யாசமாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று சமீப கால படங்கள் கெட்ட வார்த்தையில் பேசுவதும் குயீங் என்று சென்சார் போட்டு அது என்ன என்று நம்மை கரெக்டாக யூகிக்க வைப்பதுமாக தான் இருக்கிறது.
ஸ்லம் டாக் மில்லியனேர் பார்த்தீர்களா..அது படம்..பார்த்து சில நாட்களுக்கு மனசெல்லாம் ஒரு மாதிரி கணமாகவே இருந்தது..படத்தில் ஒரு அர்த்தம் இருந்தது..தலையை வெட்டி எறிவது ஒரு முடிவும் இல்லை ..எனக்கு இது போன்ற படங்களே பிடிக்காது.
உண்மையை சொல்லப்போனால் எந்த ஒரு விஷயத்திலும் மக்களிடம் ஊட்டவேண்டியது பரிதாபமல்ல..பரிதாபம் எதற்கும் ஒரு பரிகாரமும் அல்ல .நம்மைப் போல ஒருவராக அவர்களையும் வாழ வைக்கும் கோணத்தைல் எடுத்திருந்தால் கண்டிப்பாக என் சார்பில் ஒரு சபாஷ் போட்டிருப்பேன்.
இது எனக்கு பிடிக்காததற்கு முக்கிய காரணம் என்னவோ ஒரு வகையான செயற்கைத்தனம் படம் முழுக்க பரவியிருந்தது..
ஸ்ட்ராங்கா எதையோ சொல்ல வராங்க அதை ஒளித்துக் கொண்டு அதில் சென்டிமென்டை கலக்க முயன்றது போல்.

இரண்டு நாட்களாக என்னால் வர முடியவில்லை...
என் கணவரின் பிறந்த நாள்..அவரோடு நேரம் கழித்தேன்..
சரி இனி விமர்சனத்திற்கு வருவோம்...
ஸ்லம்டாக்-வை பற்றி சொல்லிடிருந்தீர்கள்..நல்ல படம்.பார்த்தேன் ரசித்தேன்..நான் கடவுள்,ஸ்லம்டாக் ஒப்பிடக்கூடிய படங்களா??அதோடு சில விஷயங்கள் சிலருக்கு நாசுக்காக சொன்னாலே புரிந்து விடும்..சிலருக்கு பளிச்சென்று சொல்ல வேண்டும்.நான் கடவுள் பளிச்சென்று சொல்லியது.அது நாசுக்காக புரிபவர்களுக்கு"சீ..இப்படியா படம் எடுப்பது.."என்று நினைக்க தோன்றும்.. நன்றாக இருப்பவர்கள் உழைத்து முன்னேருவதும்,நாட்டுப்பற்றும் இதுவரை பல படங்களில் பார்த்துள்ளோமே...ஆனால் இவர்களின் நிலையில் இருப்பவர்கள் வாழமுடியாமல் தானே மரணம் கேட்கிறார்கள்..சற்று practical-a யோசித்து பாருங்கள்.அவர்களே மரணம் கேட்டிருந்தால் அவர்களின் மனதில் எவ்வளவு வலி இருக்கும்.முயற்சி இருந்தால் முன்னேறலாம்..அது மறுக்கப்படாதது.ஆனால் முயற்சி செய்வதற்கு மன தையிரியம் வேண்டும்.இந்த படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அவர்கள் சாகாமல் எந்த வழியில் சென்றால் முன்னேரலாம் என்று நீங்களே சொல்லுங்கள்.இந்த ஸ்லம்டாக் படம் உலகளவில் பெரும் புகழ் பெற்றது.ஆனால் பாமர மக்கள் அனைவரும் அதை பார்த்து புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.. ஏன்... a.r.rahman யார் என்று கேட்கும் மக்களும் உள்ளனர்.

அன்பு சகோதரி ஷர்மி

எனக்கும் தான் நேற்று பிறந்தநாள். உங்கள் கணவருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கோ!!

ஒரு பொரியாளர், ஒரு சிற்பி, ஒரு சாதராண மனிதன் ஒரிசாவில் உள்ள "கோனாரக் கோவில்" பார்க்க வந்தா என்ன சொல்வாங்க?

பொரியாளர் - கோவில் அஸ்த்திவாரம் சரியில்லை என்பார்.
சிற்பி - மிக அற்புதமான சிலைகள். அருமையான சிற்ப வேலை பாடு என்பார்.
மனிதன் - இந்த சிலை செய்ய யாரையாவது நிற்க வைத்து செய்து இருபார்களோ? என்பார்.

பொருள் ஒன்று தான் ஆனால் அது தூண்டும் எண்ணங்கள் வேவ்வேறு.

எண்ணங்கள் ஏன் எழுகின்றன? மறைபொருள் இழையில் 3 ஏப்ரல் பார்க்கவும்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஷர்மி எழுதுங்கள் ..என்னடா ரெண்டு நாளா ஷர்மியைக் காணோம் என்று நினைத்தேன்..இது வெறும் திரை விமர்சனம்..ஏன் எனக்கு பிடிக்கவில்லை அடுத்தவ்ர்களுக்கு ஏன் பிடித்தது என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்..அதனால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..சரியா
பிறகு வறேன் இருங்க.
ஷர்மி உங்களுக்கு மலயாளம் புரியுமா?ஓரளவு புரிந்தால் போதும்.
தகரச்செண்டா(thagarachenda) என்றொரு படம் உண்டு பாருங்க...கட்டாயம் பார்க்க வேண்டிய படம்..அதன் யதார்த்தம் மிக அருமையாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்