யோ - யோஸ்

தேதி: March 1, 2009

பரிமாறும் அளவு: (3 - 4 ) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டர் - 200 கிராம்
கோதுமைமா(மைதாமா) - 200 கிராம்
ஜஸிங் சுகர் - 100 கிராம்
கஸ்டர்ட் பவுடர் - 80 கிராம்
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் பட்டரை ஜஸிங் சுகருடன், வெனிலா எசன்ஸ் கலந்து நன்றாக எக்பீட்டரினால் அடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா), கஸ்டர்ட் பவுடர் இரண்டையும் கலக்கவும்.
பின்பு கலந்தவற்றை அரிதட்டினால் நன்றாக அரித்து (சலித்து) வைத்து கொள்ளவும்.
அதன் பின்பு அடித்து வைத்திருக்கும் பட்டர் கலவையில் மைதாகலவையை சிறிது சிறிதாக கலந்து மாவாக பிசையவும்.
மாவாக பிசைந்ததை ஒரு பலகையில் வைத்து அதை உருளையினால் (அப்பளக்குழவியினால்) உருட்டி ஒரளவு மெல்லிய தட்டையாக்கவும்.
அதன் பின்பு அதில் விரும்பிய அச்சுக்களை வைத்து விரும்பிய உருவங்களை வெட்டி கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை அவனில் வைக்ககூடிய தட்டில் அடுக்கவும். பின்பு அவனை சூடாக்கி அதில் தட்டினை வைக்கவும்.
அதன் பின்பு இவற்றை 180 டிகிரி c யில் பேக் செய்யவும். இவை நன்றாக பேக் செய்யப்பட்ட பின்பு அதை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.


யோ - யோஸ் சுவையானதும் சத்துமிக்கதும் சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடியதுமான ஒர் சிற்றுண்டியாகும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர், இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்

மேலும் சில குறிப்புகள்