புதினா ப்ரெட் வடை

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் - 6 துண்டுகள்
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் ப்ரெட் துண்டுகளின் ஓரத்தினை நீக்கி விட்டு பொடித்து கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை மிகவும் பொடியாக நறுக்கவும்.
இப்பொழுது பொடித்து வைத்துள்ள ப்ரெட் உடன் புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வடை மாவு பதத்திற்கு பிசையவும். (தேவையால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைத்து கொள்ளவும்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து இதனை சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான புதினா ப்ரெட் வடை ரெடி. குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

it was very nice

இந்த வடையை செய்து பார்த்தேன். மிக நன்றாக வந்தது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே |
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷான்தேஹீ ச பார்வதி||
மா

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே |
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷான்தேஹீ ச பார்வதி||
மா