சிக்கனத்தின் சிகரங்களே

சிக்கனத்தின் சிகரங்களே
வந்து எப்படி வீட்டில் சிக்கனத்தை கடைபிடிக்க முடியும். உங்களுக்கு தெரிந்த வழிகள் சொல்லுங்க.
நானே சொல்லறேன்.

வாரத்தில பலமுறை வெளியே சாப்பிடுவது குறைத்தல்.

லஞ்ச் பேக் செய்வது.

அடிக்கடி வெளியில் காஃபிஷாப்ல காஃபி குடிக்காம வீட்டில டீ குடிப்பது ( உடம்புக்கும் பர்ஸ்க்கும் நல்லது- பல வித டீ ரெஸிபி கொடுத்த தோழிகளுக்கு நன்றி)

போட்ட லிஸ்ட் மட்டும் வாங்குவது.
கடைக்கு போகும் முன் ( முக்கியமா சூப்பர் மார்கெட்) நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு அப்புறம் ஒரு டீ /காபி குடிச்சிட்டு போனா.. பொருள்களை பாக்கும் போது வரும் பசி ( ??!!!) இருக்காது அப்புறம் கான்சென்ட்ரேஷனும் இருக்கும்.

இப்பதைக்கு இது தான் தோனுது . வாங்க வந்து உங்க சிக்கன டிப்ஸ் அள்ளி விடுங்க.

இந்த மோசமான பொருளாதார நிலமையில் நீங்க எந்த விஷயங்களை அத்யாவசியமானது என்றும் எதனை ஆடம்பரம் என்றும் நினக்கறீங்கன்னும் சொல்லுங்க.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

///வாரத்தில பலமுறை வெளியே சாப்பிடுவது குறைத்தல்.

லஞ்ச் பேக் செய்வது.////
இலா,இந்த இரண்டையும் மட்டும் சொல்லி என் வாயில மண்ணைத் தூவிடாதீங்க. வேறு வழிகளைச் சொல்லுங்கோ.

*)சூப்பர் மார்கட் போகும் போது, என்ன என்ன தேவையோ, கரெக்ட்டா லிஸ்ட் போட்டுக்கொண்டு போக வேணும். இல்லாவிட்டால் கண்ணில் தெரிவதெல்லாம் றொலிக்குள் வரும்(என்னைப்போல்).

*) வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கப் போகிறபோது, முடிந்தவரை தனியே போனால் நல்லது, குடும்பத்தோடு போனால் கும்பலில் கோவிந்தா என்று, சுப்பர்மார்க்கட் வீட்டுக்கு வந்துவிடும்(சில வேளைகளில் எங்கள் வீட்டிலும் அப்படித்தான்).

ஆனால் என்னைப் பொறுத்தவரை, உணவு விஷயத்தில் சிக்கனமாக இருக்காமல் ஏனைய விஷயங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதே நல்லது. சாப்பிட முடியுமானபோதுதானே சப்பிடலாம். பிறகு அந்தவருத்தம், இந்தவருத்தம் என்று வந்தபின் ஆசைப்பட்டாலும் எதையும் தொட முடியாதே..

கண்ட உடையையும் உடனே வாங்கி பின்னர் அப்படியே சரட்டி சொப்பிற்கு கொடுப்பது. அத்தியாவசியமில்லாத ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது. அதிகமாக மேக்கப்பிற்கு செலவுசெய்வது. பொழுது போகவில்லையே என்று காரில் சுற்றிவந்து பெற்றோலை விரயம் செய்வது. இப்படியானவற்றைக் கட்டுப்படுத்தினால் நிறைய மிஞ்சும். இன்னுமொன்று சமீபத்தில்தான் நான் கண்டுபிடித்தேன். தேவையில்லாமல் வெளியில் போகக்கூடாது, சும்மா ஒருக்கால் அந்த மோலை எட்டிப் பார்த்துக்கொண்டு வரலாமே என்று போனால் அவ்வளவுதான்... எப்படி காசு கரையுமென்பது.. பாங் பலன்ஷைப் பார்த்துத்தானே கண்டு பிடிக்க முடியுது... இலா இதுக்கு மேல என்னால சொல்ல முடியாது... பார்ப்போம்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இலா நல்ல டாபிக். என் வீட்டிலும் அதிரா சொன்னது போல் நான் மட்டும் கடைக்கு போனால் தேவையானது மட்டும் வாங்குவேன். அவுக கடைக்கு போனால் அவ்வளவு தான். பாக்கறதையெல்லாம் வாங்கிடுவாக. பொருட்களை வீணாக்காமல் உபயோகப்படுத்தினால் ஒருவகையில் வீண்செலவு குறையும்.

காய்கறிகளை கூடுமானவரை கெட்டுபோக விடாமல், அவற்றை வெட்டி ஃப்ரீசரில் போடலாம்.
சமைத்தவற்றையும் வீணாக்காமல் இதே போல் செய்யலாம்.

இலா அக்கா நீங்க உங்க குழந்தை எப்படி இருக்கிங்க?. நால்லா டாப்பிக்கு ஆரம்பிச்சுங்க சந்தேஷம்.

ஆதிரா எப்படி இருக்கிங்க. கெஞ்சநாள் ஆலையே கானும்.

என்னை போருத்த வரை எல்லாத்தை விட
1. தண்ணீர் மிச்சம் அவசியம். இதனால் அடுத்து வரும் தலைமுறையும் பிரச்சனை இன்றி இருக்கும்.

2. நான் மாதம் ஒரு முறை அல்லது 2 மாதம் ஒரு முறை என வெளியே சாப்பிடுவேம். ( வெளியே சாப்பிடுவதால் உடலுக்கு கேடுதான் அதனால்தான்.)

3. நமக்கு பார்ப்பதால்லாம் வாங்க வேண்டும் எனக்கூறும் நம் மனது. அதனால் அந்த பொருலின் தேவை அவசியமா என யோசித்து அதை தெடந்து நாமக்கு உபயேகம் ஆகுமா என யேசித்து வாங்ககுவேன்.

4. நான் எல்லாமே இந்தியாவில் வாங்கி விடுவேன். எல்லாமே ( உடை, இதர அயிட்டங்கள்.....) இந்தியாதான். அவசியம் எனில் மட்டும் சிங்கையில் வாங்கிக் கொள்வேன்.

5. உணவு பொருட்களை வினாக்கமல் இருப்பது நல்லது.

குறிப்பு: டயடிசியன் கூறிய கருத்து உங்கலிடம் பகிர்ந்து கொள்கிரேன்.

1. 1 பர்கர் சாப்பிட்டால் 7 கிலோ மிட்டர் ஓடவேண்டும்.
2. பரேட்டா சாப்பிட்டால்லும் அதே போல் ஒடவேண்டும்.

K F C, M , FAST FOODS இவைகலையேல்லாம் தவிர்ப்பது நல்லது.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சிக்கனத்திற்கு 2 வழிகள்:

1. அளவோடு சமைப்பது: எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் மீதம் வருவது. இது பழக்கத்தின் மூலம் ஓரளவு கைவரும்.

2. சாப்பாடு மிஞ்சி விட்டால் அதைக் காலி செய்யாமல் புதிதாக சமைக்கக் கூடாது. இதனால், ஃபிரிட்ஜில் வைத்து சில நாள் கழித்துத் தூரப் போடுவது அல்லது பல நாள் பழைய உணவைச் சாப்பிட்டு வயிற்றைக் கெடுப்பது இரண்டையும் தவிர்க்கலாம்.

சபதமே பூண்டிருக்கிறேன் இரண்டு விதிகளையும் பின்பற்ற. ஆரம்பத்தில் அப்பா, பிள்ளைகளிடமிருந்து எதிர்ப்பு வந்தாலும், அதன் நல்ல விளைவுகளை எடுத்துக் கூறியவுடன் புரிந்து கொண்டார்கள். (உண்மையிலேயே புரிந்து கொண்டார்களா அல்லது என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன் என்று தெரிந்து எதிர்ப்பதை விட்டு விட்டார்களோ என்னவோ!) ;-)

ஒருநாள் டின்னர் சமயத்தில் என் வீட்டுக்காரரிடம் (ஹவுஸ் ஓனர் இல்லைங்க) மூணு தோசை போதும்தானே (எத்தனை வேணும்னெல்லாம் கேக்கிறதில்லை) என்று சொல்லிக்கொண்டே சாப்பாடு வைத்தேன். அவர், "காலம் கலிகாலம்தான். பொண்டாட்டி புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடறா. எங்கம்மாவெல்லாம் நான் போதும் போதும்னு சொன்னாக்கூட விடமாட்டாங்க" என்று கேலியாகச் சொன்னார். உடனே என் பெரிய மகன், "உங்கம்மா மட்டுமில்லை வாப்பா, எங்கம்மாவும் அப்படித்தான்"என்றான்.

சிக்கனமாக இருக்கவேண்டிய மற்றொரு விஷயம்: குடிதண்ணீர்.

ஹோட்டலுக்குச் சென்றால் இப்போதெல்லாம் பாட்டில் தண்ணீர்தான் (ஹலோ, மினரல் வாட்டர், வெறெதுவுமில்லை) தருகிறார்கள். மீதி இருந்தால் அதை கையில் எடுத்துவர வெட்கப்பட்டு, அப்படியே அங்கேயே விட்டு வந்துவிடுவார்கள். ஹோட்டல்காரர்கள் அதைத் தூரத்தான் போடுவார்கள். அதனால் மீதி குடிநீர் உள்ள பாட்டிலை எடுத்து கொள்ள வேண்டும்.

அதேபோல, வீட்டிலும் சரி, ஹோட்டலிலும் சரி, குடிப்பதற்கு டம்ளரில் ஊற்றும்போது தேவையான அளவு மட்டுமே ஊற்ற வேண்டும். அரை, அரை கப்பாகத் தண்ணீர் வேஸ்ட்டாவதைத் தவிர்க்கலாம்.

வீடிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட தேவைப்படும் அளவு மட்டுமே ஊற்றிக் கொடுக்க வேண்டும். சிலர் சிறு குழந்தைகளுக்குக் கூடப் பெரிய டம்ளர் நிறையக் கொடுப்பார்கள். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

நாம் விருந்தினராகப் போக நேரிடுகையிலும் இதை வலியுறுத்த வேண்டும்.

வாசிக்கும் போது "சில்லி மேட்டராகத்" தோன்றும். ஆனால் கடைப்பிடித்துப் பாருங்கள். நமது குழந்தைகளுக்காகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும் நாம் இதையெல்லாம் செய்தாக வேண்டும். நமது சொத்து மட்டுமல்ல அவர்களுக்குத் தேவை, இது போன்ற இயற்கை வளங்களும்தான்.

அனுபவமுள்ள சீனியர்கள் தங்கள் அனுபவங்களைக் கொண்டு ஆலோசனைக் கூறினால் எங்களைப் போன்ற இளையவர்களுக்குப் பயன் தருமே!!

1. மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். ஆள் இல்லாத இடத்தில் (வீட்டிலோ, அலுவலகத்திலோ) மின் விசிறிகள் சுற்றிக்கொண்டிருப்பதையோ, விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதையோ தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மின்சாரத்தின் அவசியத்தைப்பற்றியும், சிக்கனமாக இருக்கவேண்டியதன் காரணத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

2. வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிட்டால் எரிபொருள் மிச்சப்படுத்தலாம்.

3. திருமணங்களில் ஏகப்பட்ட தினுசு உணவுகளைப் பரிமாறி அவற்றை வீணடிப்பதைப் பார்க்கும்போது எனக்கு ரத்தக்கண்ணீரே வந்துவிடும். பந்தியில் அமரும் முன்னே பரிமாறி விடுகிறார்கள். அமர்ந்தபின் பரிமாறினாலாவது வேண்டாதவற்றைத் தவிர்க்கலாம்.

திருமதி ஹுசைன் சொல்வது போல் தண்ணீரை வீணடிக்காமல் இருக்க வேண்டும்.

நாம் சிக்கனமாக இருந்தால்தான் நமது சந்ததியினருக்கு இந்தப் பொக்கிஷங்கள் கிடைக்கும்.

இதெல்லாம் "சில்லி மேட்டரல்ல" "கில்லி மேட்டர்தான்"

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

நன்றி சிக்கன டிப்ஸ் சொன்ன அனைவருக்கும். ஜெ மாமி அன்ட் திருமதி ஹூசைன் அருமையான டிப்ஸ் முக்கியமா தண்ணீர் வீணாவது பற்றி. என்னதான் இங்க எல்லாம் குழாயை திறந்தால் சுடு தண்ணி/குளிர் நீர் வந்தாலும் பல் விளக்கும் போது முழு நேரமும் தண்ணி திறந்து விடுவது /ஆண்கள் ஷேவ் செய்யும் போதும் இப்படி செய்வது/பாத்திரம் கழுவும் போதும் தண்ணீரை ஓட விடுவது எல்லாம் ஒரு மகா பெரிய பாவம் என்றே சொல்வேன். நானே வளரும் காலங்களில் தண்ணீருக்கு எவ்வளவு கஷ்டபட்டேன் ஹாஸ்டலில் ஒரு பக்கெட் நல்ல தண்ணி 2 ரூபாய். மற்ற உப்பு தண்ணி காலையிலும் மாலையிலும் 2 மணி நேரம் தான் வரும். இப்ப என்னவோ சுக வாழ்வு. டீவி பார்க்கிறோமோ இல்லையோ அது பாட்டுக்கு ஓடும். கம்ப்யுட்டரில வேலை செய்யறோமோ இல்லையோ அது எப்பவும் ஆன் ( என்னையும் சேர்த்து). நம்ம எல்லாருக்குமே கரன்ட் என்னவோ இயற்கை முறையில் உற்பத்தி செய்து வரவில்லை( எகா. நீர் மின் வளம்/காற்றாலை/சூரிய ஒளி மூலம் ) இப்படி நிலக்கரி எவ்வளவு நாள் தோண்டுவாங்க எவ்வளவு சுற்றுபுறம் மாசு படுது இதெல்லாம் படிச்ச/விவரம் தெரிஞ்ச நாமளே யோசிக்கலைன்ன அப்புறம் என்னங்க இருக்கு.

பிள்ளைகளை டீவி முன்னர் அமர்த்தாமல் வாரம் ஒரு நாள் ஒரு மாலை பொழுது டிவி சுத்தமா ஆப் செய்து விட்டு அவர்களுடன் விளையாடுங்க.

அப்புறம் இப்ப ஒரு வாரமா நான் செய்யும் ஒரு டிப்: காஸ்ட்கோ/சாம்ஸ் கிளப்/பீஜேஸ் போன்ற மொத்தவிலை கடைகளில் இருந்து தெரியாம பரில்லா பிரான்ட் பாஸ்தா சாஸ் வாங்கி விட்டேன். அதனை தக்காளிக்கு பதில் ஒரு குழம்பு கரண்டி கிரேவி ஐட்டங்கள் எல்லாத்திலயும் சேர்க்கிறேன். நேரமும் மிச்சம். கொஞ்சம் சாஸ் வாசம் போக கரம் மசாலா சேர்த்தேன். இதுவரை சாஸ் சேர்த்து செய்தது : பிண்டி மசாலா/ராஜ்மா மசாலா/கோபி மட்டர்

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எல்லோரும் எல்லாமே சொல்லியாச்சு குறிப்பா இலாவின் வயிறு நிறிய சாப்பிட்டு ஷாப்பிங் பன்னுவது சின்ன டிப்ஸ் இல்லை கண்டிப்பா பசியோடு போனால் மக்ரோனி முதல் பொரி,அவல்,முறுக்கு வரை வீட்டில் ஏறும்
2) பேப்பர் - இது சிக்கனப்படுத்துவதும் நல்லது..நம்மூரில் தான் ரஃப் நோட்டுக்கு கூட மல்லாட வேண்டும்..இங்கெல்லாம் இஷ்டத்துக்கு பிள்ளைகள் கிறுக்கி போடுகிறார்கள்..தேவையில்லாமல் ப்ரின்ட் அவுட் எடுப்பது தேவையில்லாமல் கிறுக்கி வீசுவது அதனை பிள்ளைகளைடமே சொல்லி புரியவைக்கலாம்..என் கணவருக்கு அவர் கம்பெனியில் இதனை குறித்து க்லாஸ் எடுத்தார்கள்...ஆயிரமாயிரம் மரங்கள் பேபர் சிக்கனத்தால் காக்கப்படும்.
குழம்பு பத்தாது பத்தாது என்ற எண்ணம் தான் வேஸ்டாக காரணம் கொஞ்சம் அப்படி இப்படி பத்தாமல் போனாலும் அளவாக சமைத்தால் வீனாகாது.சாதத்தில் சேர்த்து சாப்பிடும் பொடி வகைகளை டேபிளிலேயே வைத்தால் பத்தாமல் வரும்பொழுது அதை உபயோகிக்கலாம்...வீட்டில் யார் வீனாக காரணமோ அவரைக் கொண்டே குப்பையில் உணவை கொட்டவைய்யுங்க..அதோடு புரிந்து கொள்வார்கள் அந்த வருத்தம்..
ஒரு அநியாயம் இவர் ஆஃபீசில் நியூஸ் பேப்பரை ப்ரின்ட் அவுட் போட்டு படிப்பார்களாம்..கேட்டால் நம்ப கம்பனியா இது நமக்கா நஷ்டம் என்று ஹாயாய் சொன்னாராம்
இந்த எண்ணம் பிள்ளைகளிடமே மாற்ற வேண்டும்..அடுத்தவர பொருளானாலும் அதனையும் சிக்கனமாக தேவைக்கு உபயோகிக்க பழக்க வேண்டும்..
சில வீடுகளில் பிள்ளைகள் தோளளவு வளர்ந்திருக்கும் அப்படியே ரூம் ரூமாக போகும் பின்னாடியே அம்மா தான் நடந்து ஃபேன் லைட் ஆஃப் பன்னனும்..அதனை சிறு வயதில் பழக்க வேண்டும்.எங்களுகெல்லாம் எங்கள் தாத்தா தான் பழக்கினார்..லைட் போட்டுவிட்டு அடுத்த ரூமுக்கு போனால் அடி தான் விழும்

மேலும் சில பதிவுகள்