சமைத்து அசத்தலாம் - 9, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 8, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -9 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே
தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை கீதாச்சலுடையதையும்(206), ரஸியா-நிஸ்றினாவுடையதும்(10) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/
forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (10/03)முடிவடையும். புதன்கிழமை(11/03), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

துஷ்யந்தி, சாய் கீதா, அம்முலு, மேனகா, கவி, கிருத்திகா, பிரியா, உத்தமி, ஸ்ரீ, தனிஷா, இலா, ரேணுகா, ESMSசெல்வி, வானதி, மாலி, வத்சலா, மஹா, ஆசியா, சுகன்யா, அரசி, கீதா ஆச்சல்,
மனோகரிஅக்கா, செல்விஅக்கா, இந்திரா, சாதிகாஅக்கா, விஜி, அதி, சுரேஜினி, உத்ரா, ஜலீலாக்கா, பர்வீன் மற்றும் வனிதா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள், எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(02/03) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நானே ஆரம்பிக்கிறேன். இன்று கீதாவின் குறிப்பில் இருந்து ராய்த்தா செய்தேன்

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இனிப்புடன் ஆரம்பிக்கின்றேன்.
ஈஸி பால் கோவா-ரஸியா நிஸ்றினா
அன்புடன் அதி

கீதாச்சல் - கிட்ஸ்துவரம்பருப்பு புட்டு.ரசியா நிஸ்ரினா-கத்திரிக்காய் பச்சடி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ரேணுகா மற்றும் அதிரா

இன்று எனது சமைக்கலாம் பகுதியில் கீதாஆச்சலுடைய மோர் குழம்பு கடலை மாவுடன் ,ஈஸி கப்ஸிகம் பொரியல் செய்தேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

இலா சமத்தா ஆரம்பித்து விட்டீங்க,இன்னும் நிறையா சமையூங்கள்

அதி இனிப்புடன் ஆரம்பமா,அதனால் நிறைய சமைக்க வேனும்,சரியா

ஆசியா அக்கா நலமா?பையனுக்கு எப்ப எக்ஸாம்?எக்ஸாம் பிஸியில் இருப்பீங்க போல,உங்களுக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன்,எந்த சமயத்தில் நீங்க பிரியா இருப்பீங்க,சொல்லுங்கள்

மஹா நீங்களும் ஆரம்பித்து விட்டீங்களா?நல்லது இன்னும் நிறையா செய்யூங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா நான் செய்தது,கீதா வின் தக்காளி சாதம்,முட்டை பொடிமாஸ்,கடாய் முட்டை வறுவல்,வெஜிடேரியன் ஆம்லெட்,

கீதா ஆச்சல் எல்லாமே நல்லா இருந்தது,இன்றே இன்னும் இரண்டு செய்வேன்,செய்துட்டு சொல்றேன் ஆலோசனை நடக்கிறது எது செய்யலாம் என்று,பின்னூட்டம் பிறகு தருகிறேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கீதாச்சல் - ஈஸி பால் கொழுக்கட்டை, பேக்டு பொட்டட்டோ, இட்லி பொடி சாதம்

ரஸியா நிஸ்றினா தக்காளி சட்னி கத்தரிக்காய் பச்சடி

அனைத்துமே சுவையாக இருந்தது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இன்று கீதாவின் -சுறாமீன்குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

எல்லோரும் அசத்துறாங்களே...
முதலாவதாக ஏறி றைவர் சீற்றைப் பிடித்துக்கொண்ட இலா, அதி, ஆஸியா, சைனாமஹா, இம்முறை விட்டேனா பார் என மும்முரமாக ஆரம்பித்துள்ள ரேணுகா, தனிஷா, செல்வி எல்லோரும் வாங்கோ மிக்க நன்றி. இன்னும் செய்வோம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்