வெஜ் கொழுக்கட்டை

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
ரவை - 1/2 கப்
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காலிஃப்ளவர் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், போட்டு தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வதக்கவும், காய் வெந்ததும் இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கோதுமை மாவு, ரவை இவற்றை ஒன்றாக போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வெந்த காய் கலவையும், கொத்தமல்லித்தழையும் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொழுக்கட்டை பிடிக்கவும்.
இட்லி சட்டியில் கொழுக்கட்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து சாம்பாருடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா ரொம்ப நன்றாக இருந்தது. ஊரிலிருந்து எப்ப வர்ரிங்க?