அடை

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

இட்லி அரிசி – 2 கப்
துவரம் பருப்பு – அரை கப்
கடலை பருப்பு – அரை கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
பாசிப்பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 5
வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை – 4 இலை
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு


 

அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சுத்தம் செய்த அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஊறியதும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பில்லை, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிது கனமான அடைகளாக ஊற்றி மிகவும் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்த பின்னர் மறு பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
சுவையான அடை ரெடி. இதனை சட்னி அல்லது சர்க்கரை உடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

சாம்பார் வெங்காயம் உபயோகித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கீதா,
அடை பார்த்ததும் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. இலகுவான தயாரிப்பு முறை. வாழ்த்துக்கள்
செபா.

மிகவும் நன்றி செபா.
கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லவும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

hi hi hi

Ranjana

ஹாய், நானும் இதுபோலதான் செய்வேன், பாசிபருப்பு செர்க்கலமனு சொன்னத பார்த்துடு அதுவும் செர்த்து பண்ணினேன், நல்லா இருந்தது.
சீரகத்துக்கு பதில் சோம்பு சேர்த்தேன்.

Archana

மிகவும் நன்றி ரஞ்சினி.
மிகவும் சுவையாக இருக்கும். செய்த உடன் பின்னுட்டன் அனுப்பியதற்கு மிகவும் நன்றி அர்ச்சனா.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா இன்று அடை தோசை செய்தேன் நன்றாக இருந்தது, பீட்டரும் நன்றாக இருந்தது என்று சொல்லச்சொன்னார்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹா. பீட்டர் யாரு உங்கள் வீட்டு வந்த விருந்தினரா? அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்ளவும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஐயோ சாரி கீதா பீட்டர் எனது கணவரின் சைனீஸ் பெயர், இங்கு அவருடையபெயரை சொல்லத்தெரியாமல் பீட்டர் என்று வைத்துவிட்டார்கள். நான் சில வேளை அவரை பீட்டர் என்றே குறிப்பிடுவதால் அப்படியே எழுதி அனுப்பி விட்டேன். அப்படி பிரகதீஸ்வரன் பீட்டர் ஆனார்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

இதில் என்ன இருக்கின்றது..பாருங்கள் பெயரினை இந்த வெளிநாட்டுகாரங்க எப்படி மாத்திட்டாங்க…..
அன்புடன்,
கீதா ஆச்சல்