ஏழாவது மாதம்

எனக்கு இது ஏழாவது மாதம் நான் 69 கிலோ wait இருக்கேன். டாக்டர் குரைக்கசொல்றார் நான் எந்த மாதிரி உணவு எடுப்பது. தோழிகளே எனக்கு நீங்க கொடுக்கும் advise மிகவும் useful la இருக்கு.last month spot sugar இருந்தது நீங்க கொடுத்த adviseல் இந்த மாதம் test எடுக்கும் போது sugar இல்லை. Thanks to all friends

நீங்கள் கொழுப்பு உணவு வறுவல் மட்டும் தவிர்த்து சத்தாணதாக சாப்பிடுங்கள்..ஆனால் வெயிட்டை குறைக்கஎன்று சாப்பிடும் அளவை குறைக்கவேண்டாம்...மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்..100 கிலோவுக்கு மேல் உள்ளவர்களிடம் கூட வெயிடை குறைக்க இங்கு எந்த மருத்துவரும் சொல்லி நான் கேட்டதில்லை கர்பகாலத்தில்.
மருத்துவர் உள்ள வெய்யிட்டை ரொம்ப ஏறாமல் பார்த்து கொள்ள சொன்னாரா?அல்ல்து குறைக்க சொன்னாரா?குறைக்க சொன்னார் என்று சொன்னது கேட்டு எனக்கு நம்பவே முடியவில்லை

I agree with Thalika... Weight reduction during pregnancy is not recommended!!!...

நீங்க உங்க வெயிட் பத்தி கவலை படாதீங்க உங்க trimester la என்ன weight இருந்தீங்களோ அதிலிருந்து 10.........15kg varai கூடலாம் நான் 23kg koodinaen அதனால் கவலை படாதீங்க

கர்ப்பத்துக்கு முதல்தான் வெயிட்டை குறைக்கச்சொல்வார்களே தவிர கர்ப்பகாலத்தில் வெயிட் அதிகரிப்பது சாதாரணமே.சிலருக்கு மேலதிகமாக அதிகரிக்கத்தொடங்கினால்.பட்டர்,ஒயில் போன்ற சில உணவுகளை தவிர்க்கும்படி சொல்வார்கள்.
அடுத்து இந்த வெயிட் நிலையானது அல்ல முழுக்க முழுக்க உங்களுடையதும் அல்ல.கரு,கருவைசுற்றியிருக்கும் நீர் என்று ஒவ்வொன்றும் உங்கள் வெயிட்டை அதிகரிக்கச்செய்யும்.ஆகவே பயம் வேண்டாம்.எனக்குத்தெரிந்து வெயிட்டைக்குறைக்க எந்த முயர்சியும் எடுப்பது நல்லதல்ல.

சுரேஜினி

சுரேஜினி சொல்ல மறந்துட்டேன்..பல் வலி போயிடுச்சு..இப்ப ஒரே மணிக்கணக்கா பல்லு வெளக்குறோமுல்ல.
இருக்குற வைத்தியம் எல்லாம் செஞ்சேன் 3 நாள் தான் அப்ரம் மெல்ல போயிடுச்சு..அப்பா அதுக்குள்ள ஏகப்பட்டது கற்பனைபன்னினேன்..நன்றி சுறேஜினி.

மேலும் சில பதிவுகள்