உருளை பர்ப்பி

தேதி: March 3, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைகிழங்கு - 2 கப் (வேகவைத்து மசித்தது)
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 தே.க
ஏல தூள் - 1/2 தே.க


 

உருளை கிழங்கை வேகவைத்து நல்ல மசிக்கவும்.
மசித்தபின் உள்ள கிழங்கின் அளவிற்க்கு சமமாக சர்க்கரை சேர்க்க வேண்டும்.
ஒரு அடிபிடிக்காத பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு அதில்
மசித்து வைத்துள்ள கிழங்கையும் ,சர்க்க்ரையும் சேர்த்து நன்றாக
கலந்து குறைந்த தீயில் வைத்து அடிபிடிக்காமல் கைவிடாமல்
கிளற வேண்டும். நல்ல உருண்டு வரும்போது ஏலத்தூள் சேர்த்து
மேலும் கொஞ்சம் நெய் விட்டு இறக்கவும்.
ஒரு நெய் தடவிய ட்ரேயில் இந்த கலவையை கொட்டவும்.
நல்ல ஒரு பரந்த கரண்டியின் பின்புறமாக வைத்து நல்ல பரத்தவும்.
நல்ல விரும்பிய வடிவத்தில் வில்லைகள் போடவும்.


சால்டி இல்லாத உருளைகிழங்கு தான் இதற்க்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் நன்றாக இருக்கின்றது.
குழந்தைக்கு நாளைக்கு செய்து கொடுக்கலாம் என்று இருக்கின்றேன். செய்துவிட்டு கண்டிப்பாக சொல்கிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஆமாம் கீதா செய்வதற்க்கு ரொம்ப எளிது. நிங்க இங்கு தான் இருக்கிங்க என்று நினைக்கிறேன். சிவப்பு உருளையில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
செய்யும் போது முடிந்தால் பிக்சர் எடுத்து அனுப்ப முடியுமா? என்னோட கேமரா தற்போது என்னிடம் இல்லை, அதனால் நான் எடுக்கவில்லை. போன வாரம் செய்தேன். எல்லாமே ஒரே நாளில் காலியாகிட்டது. ரொம்ப நன்றி கீதா.

நான் இங்கு Albany,NY யில் தான் இருக்கின்றேன். நானே உங்களிடன் போட்டோ எடுக்கலாமா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்…கண்டிப்பாக photo எடுத்து அனுப்புகிறேன். ஆனால் இப்பொழுது என்னிடன் சதராண உருளைகிழங்கு தான் இருக்கின்றது..பாரவாயில்லையா?
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

எல்லா உருளையிலும் செய்ய்லாம். சிகப்பில் செய்தால் கொஞ்சம் பட்டரி டேஸ்டோடு நன்றாக இருக்கும்.

உங்கள் ஐடி என்னிடம் இருக்கா என்று தெரியல்லை.
நேற்று ஸ்னோ ஸ்ட்ராம் எல்லாம் எப்படி இருந்தது. இங்கு ஒரே ஸ்னோ ஸ்ட்ராம் இப்ப தான் க்ளின் செய்து முடிந்தது. நன்றி கீதா...செய்யுங்க.